சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 434 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2020

நடி­கர்­கள்  :  பாலாஜி, வெங்கி, நாசர், லஷ்­மிப்­ரியா, ரின்­சன், ஜெயப்­பி­ர­காஷ், எம்.எஸ்.பாஸ்­கர், லட்­சுமி ராம­கி­ருஷ்­ணன், ஆர்.எஸ்.சிவாஜி, டி.பி.கஜேந்­தி­ரன் மற்­றும் பலர்.

இசை : மேட்லி ப்ளுஸ், ஒளிப்­ப­திவு:   நிஷார், எடிட்­டிங் : சூர்யா, தயா­ரிப்பு :  ரவீந்­தர் சந்­தி­ர­சே­க­ரன் (லிப்ரா புரொ­டக்­க்ஷன்ஸ்), திரைக்­கதை,  இயக்­கம்:    சுபு.

கோர­மலை என்­னும் ஊரைப் பற்­றிய கதை இது. சோம்­பேறி மக்­கள் வாழும் கோர­ம­லை­யின் போலீஸ் ஸ்டேஷ­னுக்கு புதி­தாக வரும் ராம்கி எனும் ராம­கி­ருஷ்­ணன் (பாலாஜி) ஸ்டேஷன் இன்ஸ்­பெக்­டர் திரு­மே­னியை (நாசர்) சந்­திக்­கி­றான். நடி­கர் ராம்­கி­யின் தீவிர ரசி­க­னான ராம்கி பிறந்­த­தி­லி­ருந்தே ‘க்ளப்­டோ­மே­னி­யாக்’ (தன்­னை­ய­றி­யா­மல் பிற­ரின் பொருட்­களை திரு­டும் நோய்) நோயால் பாதிக்­கப்­பட்ட வன். அதையே தனது பல­மாக மாற்­றிக் கொண்டு நல்ல பெயர் வாங்கி போலீசா கவும் ஆன­வன். அடுத்­த­தாக வரும் கான்ஸ்­ட­பிள் சங்­கிலி மாறன் (வெங்கி) இன்ஸ்­பெக்­ட­ரால் அவ­மா­னப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றான். சங்­கி­லிக்கு இடது காது மிகத் துல்­லி­ய­மா­க­வும், வலது­ காது துளி­யும் கேட்­காது. அவ­னது பரம்­ப­ரை­யில் இந்த ஒரு பக்­கத்து வேலை நிறுத்­தம் அனைவ ருக்­கும் தொடர்­கி­றது. அதை மறைத்து பரம்­ப­ரை­யி­லேயே முதன்­மு­த­லாக கான்ஸ்­ட­பி­ளா­கி­றான் சங்­கிலி.

அடுத்து வரும் சிங்­க­முத்து கைநாட்டு கல்­வி­ய­மைச்­ச­ரின் தம்பி மகன் என்­ப­தால் இன்ஸ்­பெக்­டர் திரு­மே­னி­யு­டன் ஆத­ர­வு­டன் சுற்றி­ வரு­கி­றான். ஸ்டேஷ­னின் சைக்­கிள் திரு­டும் கும்­ப­லி­டம் மாட்­டும் ராம்­கி­யை­யும், சங்­கி­லி­யை­யும் குஞ்­சானி இனத்­தைச் சேர்ந்­த­வர்­கள் காப்­பாற்­று­கி­றார்­கள். இயற்­கை­யாக தெய்­வ­மாக வணங்­கும் இவர்­க­ளுக்­கும் தொங்­கா­ப­றம் ஜமீ­னைச் சேர்ந்­த­வர்­க­ளுக்­கும் பகை. ஊர் பெரி யவ­ரோடு சேர்ந்து ஒட்­ட­கம் (எம்.எஸ்.பாஸ்­கர்), அவ­ரது மகன் தேரை (ரின்­சன்), மகள் சிலந்தி (லஷ்­மிப்­ரியா)  ஆகி­யோர் இயற்­கைக்கு எதி­ரா­ன­வர்­களை அழிக்கிறார்­கள்.

ராம்­கி­யும், சங்­கி­லி­யும் சிலந்­தி­யி­டம் தங்­கள் காதலை தெரி­விக்­கும் நேரத்­தில் ஒட்­ட­கத்­தின் மர­ணச்­செய்தி கிடைக்­கி­றது. ஒட்­ட­கத்தை கொன்­ற­வர்­களை பழி­வாங்க சிலந்­தி­யும், அவளை பின்­தொ­டர்ந்து தேரை­யும் செல்­கி­றார்­கள். திரு­மே­னி­யா­லும், சிங்­க­முத்­து­வா­லும் பாதிக்­கப்­ப­டும் சங்­கி­லி­யும், குடி­போ­தை­யில் உள்ள ராம்­கி­யும் புலம்­பு­கி­றார்­கள். திரு­மேனி யிட­மி­ருந்து திரு­டிய துப்­பாக்­கி­யால் ராம்கி சுட்­ட­தில் ஆலி­வர் ட்விஸ்ட் (ஜெயப்­பி­ர­காஷ்) இறக்­கி­றான். ஆண்­மைக் குறை­வுக்­கான மருந்து கண்­டு­பி­டிக்­கும் ஆராய்ச்­சி­யா­ள­ரான ஆலி­வர் டுவிஸ்ட்டை சங்­கிலி அடை­யா­ளம் காண்­கி­றான். பிணத்தை மறைக்க இரு­வ­ரும் முயற்­சிக்­கி­றார்­கள்.

செங்­க­ர­டியி டமி­ருந்து தப்­பித்து ஓடும்­போது செங்­க­ர­டியை வைத்து ஆராய்ச்சி செய்து வரும் ஆலி­வர் டுவிஸ்ட்­டை­யும், ராம்கி, சங்­கி­லியை யும் சிலந்­தி­யும், தேரை­யும் பார்க்­கி­றார்­கள். ராம்கி சுட்­டது தொங்­கா­ப­றம் ராஜா வீர­கே­ச­ரியை (ஆர்.எஸ்.சிவாஜி) எனத் தெரிய வரு­கி­றது. ஒட்­ட­கத்தை தவ­று­த­லாக சுட்­டுக் கொன்­ற­தும் ஆலி­வ­ரின் ஒரே கஸ்­ட­ம­ரான வீர­கே­சரி எனத் தெரி­ய­வந்­த­தும் அவ­ரது உடலை எடுத்­துச் செல்ல சிலந்தி முயற்­சிக்­கி­றாள். இத­னி­டையே ஒட்­ட­கத்­தைக் கொன்ற வீர­கே­ச­ரியை பிடிப்­ப­வர்­க­ளுக்கு சன்­மா­னம் அறி­விக்­கி­றார் திரு­மேனி. இத­னால் ராம்கி, சங்­கி­லி­யும் போராடி பிணத்தை ஸ்டேஷ­னுக்கு கொண்டு செல்­கி­றார்­கள். சிலந்தி ஆலி­வரை முகத்­தில் சுட்­டுக் கொன்று வீர­கே­சரி எனக்­கூறி சிங்­க­முத்து உத­வி­யு­டன் போலீ­சி­டம் ஒப்­ப­டைத்து பணத்­தைப் பெறு­கி­றாள். வீர­கே­ச­ரி­யின் மனை­வி­யும் உடை, மாத்­தி­ரையை வைத்து ஒப்­புக்­கொள்­கி­றாள். தனது குழு­வி­டம் சொன்­ன­படி சிலந்­தி­யும், தேரை­யும் வீர­கே­ச­ரி­யின் பிணத்தை கொண்­டு­வந்து அழிக்­கி­றார்­கள். சிலந்தி ஜெயித்து விட, வழக்­கம்­போல் தங்­கள் முயற்­சி­யில் தோற்­றுப்­போ­கும் ராம்­கி­யும், சங்­கி­லி­யும்  ஈமுக்­கோ­ழியை கண்­டு­பி­டிக்­கும் வேலை­யில் கள­மி­றங்­கு­கி­றார்­கள்.