சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 433 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 04 மார்ச் 2020

நடி­கர்­கள் : கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்­தா­னம், நிகிதா, சனுஷா, அகன்ஷா பூரி, மிலிந்த் சோமன், சுமன், மகா­தே­வன், பிர­தாப் போத்­தன், விசு, ரேணுகா மற்­றும் பலர். இசை : தேவி ஸ்ரீ பிர­சாத், ஒளிப்­ப­திவு : எஸ். சர­வ­ணன், எடிட்­டிங் :    பிர­வீண் கே.எல், ஸ்ரீகாந்த்.என்.பி, தயா­ரிப்பு : ஸ்டூடியோ க்ரீன் ஞான­வேல் ராஜா, கதை, திரைக்­கதை, இயக்­கம் : சுராஜ்.

சின்ன சின்ன திருட்டு வேலை­கள் செய்து வரும் அலெக்ஸ் பாண்­டி­யன் (கார்த்தி) பணத்­திற்­காக ரிஸ்க் எடுக்க தயங்­கா­த­வன். தூரத்து சொந்­தம் எனக்­கூ­றிக் கொண்டு நன்­ப­னின் (சந்­தா­னம்) வீட்­டிற்கு வரு­கி­றான். தாய் ரேணுகா மற்­றும் மூன்று தங்­கை­க­ளு­டன் வாழ்ந்து வரும் நன்­ப­னின் வீட்­டில் மகிழ்ச்­சி­யாக தங்­கு­கி­றான். அலெக்­ஸி­ட­மி­ருந்து தங்­கை­களை காப்­பாற்ற நினைக்­கும் நன்­பன் அலெக்ஸை விரட்­டு­கி­றான். தன்­னி­டம் வம்பு செய்­யும் உள்­ளூர் ரவுடி ஒரு­வனை அடித்து மொட்­டை­ய­டிக்­கி­றான் அலெக்ஸ். நன்­ப­னின் குடும்­பம் தேடி வரும் ரவுடி கும்­ப­லி­ட­மி­ருந்து அலெக்ஸை தப்பி ஓடச் சொல்ல, வேறொரு சமூக விரோ­தி­கள் கும்­பல் அலெக்ஸை துரத்­து­கி­றார்­கள். நன்­ப­னின் குடும்­பத்­தி­டம் நடந்த உண்­மை­களை அலெக்ஸ் விளக்­கு­கி­றான். மக்­க­ளின் உடல்­ந­லத்­திற்கு ஆபத்து விளை­விக்­கும் மருந்தை தயா­ரிக்­கும் மருந்து கம்­பெனி முத­லாளி (மிலிந்த் சோமன்), அவ­னது கூட்­டாளி (சுமன்), போலிச் சாமி­யார் (மகா தேவன்) மூவ­ரும் மருந்­திற்கு அனு­மதி வாங்க முத­ல­மைச்­சரை அனு­கு­கி­றார்­கள். நேர்­மை­யான முதல்­வர் (விசு) அதற்கு மறுத்து விடு­கி­றார். முத­ல­மைச்­ச­ரின் கையெ­ழுத்தை பெறு­வ­தற்­காக அவ­ரின் மகள் திவ்­யாவை (அனுஷ்கா ஷெட்டி) கடத்த முடி­வெ­டுக்­கி­றார்­கள். ஜெயி­லி­லி­ருந்து வெளி­வ­ரும் அலெக்ஸ் பணத்­திற்­காக திவ்­யாவை மூன்று நாட்­கள் காட்­டில் கடத்தி வைத்­தி­ருக்­கி­றான். பத­விக்­கான சண்டை என்று நினைக்­கும் அலெக்­ஸுக்கு இது மக்­க­ளின் உயிர் பாது­காப்பு பற்­றிய விஷ­யம் என்று திவ்யா எடுத்­துக்­கூ­று­கி­றாள். மனம் மாறும் அலெக்ஸ் திவ்­யாவை பாது­காப்­பாக திருப்பி அனுப்ப முடி­வெ­டுக்­கி­றான். அடி­யாட்­க­ளு­டன் போரா­டும் அலெக்­ஸும் திவ்­யா­வும் உயிர் பிழைப்ப­

தற்­காக ஆற்­றில் குதிக்­கி­றார்­கள்.

தேடி வரும் விரோ­திக­ ளுக்­குத் தெரி­யா­மல் காய­ம­டைந்த திவ்­யாவை கோவில் ஒன்­றில் வைத்து மருத்­து­வம் பார்க்­கி­றான் அலெக்ஸ். திவ்யா சுய­நி­னை­

வில்­லா­மல் இருந்­த­தால் ஒளிந்­தி­ருந்த அலெக்ஸ், குணம­ டைந்­த­தும் அவ­ளது தந்­தை­யி­டம் ஒப்­ப­டைக்க முயற்­சிக்கி­ றார். முதல்­வ­ரின் பிஏ (பிர­தாப் போத்­தன்) திவ்­யாவை அழைத்­துப் போக வரு­கி­றார். அவ­ரும் விரோ­தி­க­ளு­டன் கூட்­டணி அமைத்து திவ்­யாவை பண­ய­மாக வைத்து முதல்­வ­ரி­டம் கையெ­ழுத்து வாங்க நினைக்­கி­றார்.  முதல்­வர் கோப்­பில் கையெ­ழுத்­திட ஒரு மணி நேரம் தாம­திக்க, அலெக்ஸ் எதி­ரி­க­ளோடு போராடி அவர்­களை அழிக்­கி­றான். சரி­யான நேரத்­தில் தந்­தையை தொடர்பு கொள்­ளும் திவ்­யா­வால் எதி­ரி­க­ளின் திட்­டம் தோற்­கி­றது. கையெ­ழுத்­திட மறுத்த முதல்­வரை துப்­பாக்கி முனை­யில் மிரட்­டும் அவ­ரது பிஏ, கமி­ஷ­னர் மற்­றும் போலிச்­சா­மி­யார் அனை­வ­ரும் முதல்­வரை பாது­காக்­கும் தனிப்­ப­டை­யால் சுட்­டுக்­கொல்­லப்­ப­டு­கின்­ற­னர். வெற்றி பெற்ற மகிழ்ச்­சி­யோடு காத­லர்­கள் ஒன்று சேர்­கின்­ற­னர்.