கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 220

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2020

நூற்றாண்டு காணும் கவிஞர் மருதகாசி – 2

கண்­ண­தா­சன் அவ­ச­ர­மாக மரு­த­கா­சியை சந்­திக்க பின்­ன­வ­ரின் வீட்­டுக்கு வந்­த­தற்கு என்ன கார­ணம்? பாட­லா­சி­ரி­யர் என்ற முறை­யிலே கண்­ண­தா­சன் ஒரு­வி­த­மான போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­தார். அது தொடர்­பாக இன்­னொரு முன்­ன­ணிப் பாட­லா­சி­ரி­ய­ரான மரு­த­கா­சி­யின் உத­வியை நாடி அவர் வந்­தி­ருந்­தார்.

‘பாவ­மன்­னிப்பு’, ‘பாச­ம­லர்’, ‘பாலும் பழ­மும்’ முத­லிய படங்­க­ளின் பெரிய வெற்­றிக்­குப் பிறகு, இந்த  படங்­க­ளின் பாடல்­கள், குறிப்­பாக அவற்­றின் பாடல் வரி­கள் மிகப்­பெ­ரிய வர­வேற்­பைப் பெற்­றி­ருந்­தன என்­பதை  கண்­ண­தா­சன் உணர்ந்­தி­ருந்­தார். இதன் கார­ண­மாக சிவா­ஜி­யின் நெருங்­கிய பால்ய நண்­பர் பெரி­யண்­ணன், சிவா­ஜி­யின் மகள் சாந்­தி­யின் பெய­ரில் சாந்தி பிலிம்ஸ் என்ற பேன­ரில் ‘பந்­த­பா­சம்’ தயா­ரிக்க  தொடங்­கிய போது, தன்­னு­டைய ரேட்டை கணி­ச­மாக உயர்த்­தி­விட்­டார்.

தயா­ரிப்­பா­ள­ரும் அவ­ரு­டைய கூட்­டா­ளி­க­ளும் அதிர்ந்­து­போ­னார்­கள்! ஒரு நடிகை நடித்த படம் நன்­றா­கப்­போ­னால், அவ­ளு­டைய ரேட்டை பல மடங்கு உயர்த்­தித்­தர சலி­யா­த­வர்­கள், ஒரு கவி­ஞன் வெற்றி பெற்ற பிற­கும் அவனை கிள்­ளுக்­கீ­ரை­யாக நடத்­து­வதா என்­கிற தோர­ணை­யில் கண்­ண­தா­சன் தயா­ரிப்­பா­ளரை எதிர்­கொண்­டார்.

இந்த  தரு­ணத்­தில் மிக­வும் கம்­பீ­ர­மாக  தன்­னு­டைய கட்­சியை அவர் நிலை­நி­றுத்­தி­னார் என்­பார், இந்­தக் காட்­சியை  குறித்து என்­னி­டம் கூறிய வலம்­புரி சோம­நா­தன். இந்த போராட்­டத்­தின் அடுத்த அத்­தி­யா­யத்­தில்­தான், கண்­ண­தா­சன் மரு­த­கா­சியை சந்­திக்க வந்­தி­ருந்­தார். ஏனென்­றால், தயா­ரிப்­பா­ளர் சார்­பாக, ‘பந்­த­பா­ச’த்­திற்­குப் பாட்­டெ­ழுத மரு­த­கா­சியை நாடி­யி­ருந்­தார்­கள்!

மரு­த­கா­சி­யு­டன் அப்­போது வீட்­டி­லி­ருந்த அவ­ரு­டைய தம்பி முத்­தை­ய­னின் கூற்­றுப்­படி, சக பாட­லா­சி­ரி­ய­ரான கண்­ண­தா­ச­னின் கோரிக்­கையை ஏற்று, ‘பந்­த­பா­சம்’ படப்­பா­டல்­களை எழு­து­வ­தற்கு தனக்கு அழைப்பு வந்­தி­ருந்­தும், அதை ஏற்­கா­மல் சொந்த ஊருக்கு மரு­த­காசி கிளம்பி சென்­று­விட்­டார்!

திரைப்­பா­டல் எழுத எண்­ணிக்­கை­யில் அடங்­காத வாய்ப்­பு­க­ளைப் பெற்­றி­ருந்­த­வர் மரு­த­காசி. அவர் வாய்ப்­பு­களை  தேடிப்­போ­க­வில்லை. அவ­ரைத்­தேடி அவை வந்­தன. ஆனால், இப்­போது வந்த வாய்ப்பு, ஒரு வில்­லங்­கத்­து­டன் வந்­தி­ருந்­தது. ஆகவே கண்­ண­தா­ச­னின் வேண்­டு­கோளை ஏற்று அவர் பந்­த­பா­சத்­தி­லி­ருந்து தன்னை  துண்­டித்­துக்­கொண்­டு­விட்­டார்! அவர் அப்­போது அதை அறிந்­தி­ருக்­க­மாட்­டார் என்­றா­லும், அதன் பிறகு சிவா­ஜிக்கு அவர் பாடலே எழு­தப்­போ­வ­தில்லை என்­கின்ற நிலை வரும்.

இந்த  கால­கட்­டத்­தில் மரு­த­கா­சி­யின் மன­நி­லையை அவர் சென்னை தமி­ழில் அற்­பு­த­மாக எழு­திய பாடல் பிர­தி­ப­லிக்­கி­றது. ‘‘ஆனாக்க அந்த மடம், ஆவாட்டி சந்த மடம், அது­வும் கூட இல்­லாக்­காட்டி பிளாட்­டு­பா­ரம் சொந்த இடம்’’ என்­ப­து­தான், ‘ஆயி­ரம் ருபாய்’ படத்­தில், கே.வி.மகா­தே­வன் இசை­யில் பி.சுசீலா பாடிய அந்த  பாடல்.

சென்னை நக­ரின் அடித்­தட்டு மக்­க­ளின் மொழி­யிலே அமைந்த இந்த  பாடல், மிக உயர்ந்த உண்­மை­களை, மனித மாண்­பு­களை வெளிப்­ப­டுத்­து­கி­றது. தாளத்­தில் வராத ‘தொகை­யறா’ வரி­கள், தாளத்­தில் வரு­கிற வரி­கள் என்று மாறி­மாறி வரு­கிற இந்த  பாடலை, தெருக்­கு­ர­லாக ஒலிக்­கும் ‘திருக்­கு­றள்’ என்று கூற­லாம்!

‘‘ஒயிங்கு தவ­றாமெ, ஊரை எத்தி வாயாமெ

பொயிதே வீணாக்­காமெ, ‘புவ்­வா’­வைத் தேடிக்­க­ணும்’’ என்று தொடங்­கு­கி­றது பாடல்!

நேரத்தை வீணாக்­கா­ம­லும், யாரை­யும் ஏமாற்­றா­ம­லும் அவ­ர­வர்­கள் தங்­கள் கட­மை­யாற்றி, தங்­கள் வயிற்­றுப்­ப­சி­யைப் போக்­கிக்­கொள்­ள­வேண்­டும் என்­கி­றது பாடல்.

இப்­படி  செய்­யும் போதும், சில தர்­ம­சங்­க­டங்­கள் தலை தூக்­கு­கின்­றன, சில விப­ரீ­தங்­கள் விளை­கின்­றன, சில தடை­கள் முளைக்­கின்­றன, சில வேத­னை­கள் வந்து தாக்­கு­கின்­றன....என்­ப­து­தான் அறு­ப­து­க­ளின் ஆரம்ப ஆண்­டு­க­ளில் மரு­த­கா­சி­யின் அனு­ப­வ­மாக இருந்­தது.

புதி­தாக எழுந்த மெல்­லிசை அலை தமிழ் சினிமா உல­கத்­தின் சில உச்­சங்­களை  துச்­சங்­கள் ஆக்­கி­விட்­டது! மலை­மு­டி­யி­லி­ருந்த ஜி.ராம­நா­தன் சரே­லென்று அடி­வா­ரத்­திற்கு வந்து விட்­டார்! மரு­த­கா­சி­யி­ட­மி­ருந்து மன­வே­று­பாட்­டின் கார­ண­மாக வில­கிப்­போன எம்.எஸ்.விஸ்­வ­நா­தன் உச்­சத்­திற்கு சென்­று­விட்­டார்! மாறிப்­போன திரை உலக

சூழ்­நி­லை­யில் மரு­த­கா­சிக்கு ஆரம்­பத்­தி­லி­ருந்து இணக்­க­மாக இருந்த தேவர், தன்­னு­டைய படப்­பா­டல்­க­ளைக் கண்­ண­தா­ச­னுக்­குக் குத்­தகை எழு­திக்­கொ­டுத்­த­தைப்­போல் செயல்­பட்­டார்.

எந்த கூட்­டா­ளி­யின் நிர்ப்­பந்­தத்­தால் மரு­த­காசி திரைப்­ப­டத் தயா­ரிப்­பில் தள்­ளப்­பட்டு கட­ல­ளவு துன்­பங்­களை சந்­தித்­தாரோ அந்த ஏ.பி.நாக­ரா­ஜன் கூட இத்­த­கைய ஒரு திருப்­பத்­தில்­தான் இருந்­தார். இந்த நிலை­யில்,  வீட்­டுக்கே வந்து  கண்­ண­தா­சன் இன்­னு­மொரு விவ­கா­ரத்தை விருத்தி செய்­கி­றார்.

‘‘கொள்­ளி­டக்­க­ரை­யோ­ரும் மேலக்­கு­டிக்­காடு, அங்கு வெள்­ளாமை செய்­யப்­போ­றேன் முடிஞ்சா வந்து பாரு’’ என்று யார் முகத்­தை­யும் எதிர்­பா­ரா­மல் (பூமி) தாய் முகம் பார்த்து வாழ­லாம் என்று கிரா­மத்­திற்கு கிளம்­பி­விட்­டார் மரு­த­காசி! கிரா­மத்­தி­லே­யும் நண்­பர்­கள் குழாம் அவ­ருக்கு இருக்­கவே செய்­தது.   அவ­ரு­டைய கை தாரா­ள­மான கை ஆயிற்றே!

‘‘மச்­சிலே இருந்­தாத்­தான், மவு­சு­யின்னு எண்­ணாதே குச்­சிலே குடி­யி­ருந்தா, குறைச்­சல்­லின்னு கொள்­ளாதே மச்சு குச்சு எல்­லாமே, மன­சி­லே­தான் இருக்கு மனசு நிறைஞ்­சி­ருந்தா, மத்­த­தும் நெறஞ்­சி­ருக்­கும்....’’ என்று ஏழை­க­ளின் மொழி­யில் ஏற்­ற­மிகு கரு­துக்­க­ளைக் சென்­னை­யில் கூறி­விட்டு வந்­த­வர், பொற்­கால நினை­வு­களை அசை­போட்­டுக்­கொண்­ட­ப­டி­யும், சில கசப்­பான அனு­ப­வங்­களை மூழ்­க­டிக்­கும் எத்­த­னத்­தி­லும் ஊரிலே ஏற்­றம் இறைத்­துக் கொண்­டி­ருந்­தார்!

ஏ.பி.நாக­ரா­ஜ­னின் முதல் பட­மான ‘நால்­வ’­ரி­லி­ருந்து தொடர்ந்து அவர் படங்­க­ளுக்கு வெற்­றிப்­பா­டல்­கள் எழுதி வந்­தி­ருந்த மரு­த­காசி, இந்த கால­கட்­டத்­தில் நாக­ரா­ஜ­னின் ‘நவ­ராத்­திரி’, ‘திரு­வி­ளை­யா­டல்’ போன்ற படங்­க­ளின் பாடல்­கள், முழு­தும் கண்­ண­தா­சன் மய­மா­கிப்­போன காட்­சி­க­ளை­யெல்­லாம் கண்­டார்! நண்­பர்­கள் மாறி­விட்­டார்­களே என்று கொள்­ளி­டம் கொள்­ளாத அள­வுக்கு மரு­த­கா­சிக்கு வருத்­தம் இருந்­தது. ஆனால், காலம் அவர் கைக­ளைக் கட்­டிப்­போட்­டி­ருந்­தது!  

‘‘சூழ்­நி­லை­க­ளால் எங்­கள் யூனிட் உடைந்­து­போ­னது. எனக்கு லோ பிர­ஷர் ஏற்­பட்டு நான் ஊருக்­குத் திரும்­பிச்­செல்ல நேர்ந்­தது. போகும் முன் நான் கடை­சி­யாக இயற்­றிய பாடல், ‘ஆனாக்க அந்த மடம்!’ பணம் கூட வாங்­கிக்­கொள்­ளா­மல் ஊருக்­குச் சென்­று­விட்­டேன்.

யாரை நான் நல்ல நண்­பர்­கள் என்று நினைத்­தேனோ, அவர்­க­ளின் பொறா­மை­யால் மிக­வும் பாதிக்­கப்­பட்­டேன். இரண்­டரை ஆண்­டு­கள் நான் ஊரி­லேயே இருந்­து­விட்­டேன்,’’ என்­பது பின்­னா­ளில் மரு­த­காசி வெளிப்­ப­டுத்­திய பிளாஷ்­பேக்.

தான் தி.மு.கவி­லி­ருந்த காலத்தை, ‘வன­வா­சம்’ என்று கூறிய கண்­ண­தா­சன், தன்­னு­டைய கடந்­த­கால வர­லா­று­களை எழுதி புகழ் பெற்­றார். மரு­த­கா­சி­யும் தன்­னு­டைய ஆற்­றா­மை­களை அப்­படி எழு­தி­யி­ருக்க முடி­யும். ஆனால் அவர் எழு­த­வில்லை. பாடல்­கள் எழு­து­வதை விட்டு உரை­ந­டை­யைத்­தொட்­டுப் பார்ப்­ப­தைக்­கூட அவர் விரும்­ப­வில்லை. பாடல் என்ற ஒற்றை சாள­ரத்­தின் வாயி­லாக உல­கத்தை  பார்த்­துக் கொண்­டி­ருந்­த­வர் மரு­த­காசி. அந்த ஒற்றை வழி­யும் அடை­பட்­டுப்­போ­ன­தில் அவர் அனு­ப­வித்த வருத்­த­மும் வேத­னை­யும் அதி­க­மா­கத்­தான் இருந்­தி­ருக்­க­மு­டி­யும்.

மரு­த­காசி சொந்த ஊருக்­குப் போய் அங்­கேயே தங்­கி­விட்­டார் என்ற பல்­ல­வியை மாற்றி, ஓர­ள­வுக்­கான மீட்­சியை எதிர்­பா­ரா­த­வி­த­மாக அமைத்­துக்­கொ­டுத்­த­வர், எம்.ஜி.ஆர்.

அவர் துப்­பாக்கி தாக்­கு­த­லுக்கு ஆளாகி மீண்ட பின், தேவ­ரின் ‘விவ­சாயி’ படத்­தில், ‘விவ­சாயி! விவ­சாயி! கட­வுள் என்­னும் முத­லாளி கண்­டெ­டுத்த தொழி­லாளி, விவ­சாயி’ என்ற அவ­ரு­டைய முழக்­கம், மரு­த­கா­சி­யின் வரி­க­ளில்­தான் அமைந்­தது.

சில வரு­டங்­க­ளுக்கு முன் எந்த மேலக்­கு­டிக்­காட்­டில் மரு­த­காசி தஞ்­சம் அடைந்­தி­ருந்­தாரோ, அந்த ஊரி­லேயே, ‘தேர்த்­தி­ரு­விழா’ படப்­பி­டிப்­பிற்­காக தேவர், எம்.ஜி.ஆர், ஜெய­ல­லிதா ஆகி­யோர் முகா­மிட்­ட­னர்!

‘‘மழை, முத்து முத்­துப் பந்­த­லிட்டு, கிட்ட கிட்ட தள்­ளுது’’ என்று இந்த ‘குளு­குளு’ இணைவை மரு­த­காசி கொண்­டா­டி­னார்!  

திரும்பி வரும் சமிக்­ஞை­க­ளைத் தெரி­விக்க,    பூக்­களை வசந்­தம் தூத­னுப்­பத் தொடங்­கி­விட்­டது!  (தேவ­ரின்) தண்­டா­யு­த­பாணி பிலிம்ஸ் தயா­ரித்த ‘துணை­வன்’  இந்த எண்­ணத்தை 1969ல் ஊர்­ஜி­தப்­ப­டுத்­தி­யது. சிறந்த திரைப்­பா­டல் ஆசி­ரி­ய­ருக்­கான தமி­ழக அர­சின் விருது மரு­த­கா­சிக்­குக் கிடைத்­தது! இந்த  படத்­தில் மரு­த­கா­சி­யின் ஒரு பாட­லைத் தவிர மற்ற பாடல்­களை எழு­தி­ய­வர் கண்­ண­தா­சன்­தான். ஆனால், ‘மரு­த­ம­லை­யானே, நாங்­கள் வணங்­கும் பெரு­மானே’ என்று மரு­த­காசி எழு­திய மிக நீண்ட தல­யாத்­தி­ரைப் பாடல், மகா­தே­வ­னால் மிக அழ­கான ராக­மா­லி­கை­யாக அமைக்­கப்­பட்டு, டி.எம்.எஸ்., சுசீலா ஆகி­யோ­ரால் உணர்ச்­சிப்­பெ­ருக்­கா­கப் பாடப்­பட்­டது. எது­கை­யும் மோனை­யும் கைகோர்த்து, அந்­தந்த  புண்­ணிய தலத்­திற்கு ஏற்ற சொற்­கள் அழ­காக வந்­த­ம­ரும் நெஞ்சை அள்­ளும் பாடலை மிக அழ­காக மரு­த­காசி எழு­தி­யி­ருந்­தார்.

‘‘திரு­மு­ரு­கன் பூண்­டி­யில் பர­மன் அருள் வேண்­டியே சிவ­லிங்­கம் தனை­வைத்­துப் பூஜித்த குமரா, தென்­சேரி மலை­தன்­னில் நெஞ்­சா­ரத் துதிப்­போர்க்கு

அஞ்­சாதே என அப­யன் தரு­கின்ற அமரா....’’ என்­ப­தைப்­போன்ற வரி­க­ளில், தத்­த­கா­ர­மும் தாள­மும் பிச­காத மரு­த­கா­சி­யின் பாடல், தெய்­வத்­த­மிழ் கீத­மாக மணக்­கி­றது. தண்­டா­யு­த­பாணி பிலிம்­சின் ‘வெள்­ளிக்­கி­ழமை விர­தம்’ படத்­தில், நான்கு பாடல்­க­ளை­யும் சங்­கர் – கணேஷ் இசை­யில் மரு­த­காசி எழு­தி­னார். மூன்று பாடல்­கள் ஹிட்­டா­கின.

சினிமா உல­கில் வெற்­றி­யும் லாப­மும்­தான் தலை­யாய நோக்­கங்­கள். பழைய நண்­பர்­கள் என்று பார்ப்­ப­தெல்­லாம் மிகக் குறைவு. வி.கே.ராம­சாமி பார்த்­தார். அவ­ரு­டைய தயா­ரிப்­பு­க­ளான   ‘பொன்­னான வாழ்’­வி­லும் ‘டில்லி மாப்­பிள்­ளை’­யி­லும் மரு­த­கா­சி­யைப் பாடல்­கள் எழு­த­வைத்­தார்.

‘எங்கே, எங்கே, நீ எங்கே’ என்று தொடங்கி, ‘‘குங்­கு­மச் சிமிழே, கோபுர விளக்கே, தங்­கக் கல­சமே, தாம­ரைப்­பூவே’’ என்ற ‘பொன்­னான வாழ்வு’ பாடல், மரு­த­கா­சி­யின் மனோ­க­ர­மான பேனா­வில் மை தீர்த்­து­போய்­வி­ட­வில்லை என்று காட்­டி­யது!

வி.கே.ஆரைப்­போல், கே.எஸ்.கோபா­ல­கி­ருஷ்­ண­னும்  மரு­த­கா­சி­யைக் கடைசி வரை மறக்­க­வில்லை. அவ­ரு­டைய குறத்தி மகன் (1971), வாழை­யடி வாழை (1972),  சுவாதி நட்­சத்­தி­ரம் (1974), தசா­வ­தா­ரம் (1976), பாலா­பி­ஷே­கம் (1977), ரவுடி ராக்­கம்மா (1977), காஞ்சி காமாட்சி (1978), அடுக்கு மல்லி (1979), நாயக்­கர் மகள் (1982) முத­லிய படங்­க­ளில் மரு­த­கா­சி­யைத் தொடர்ந்து பாடல்­கள் எழு­த­வைத்­தார்.

இவற்­றில், ‘ஆல­ம­ரத்­துக் கிளி’, ‘தாயாகி வச்ச என் தங்­கமே’ போன்ற பாடல்­கள், இசை­யின் புதிய அலை­வ­ரி­சை­க­ளில் அழ­காக வலம் வந்­தன. எம்.ஜி.ஆருக்கு மரு­த­காசி எழு­திய, ‘கண்ணை நம்­பாதே, உன்னை ஏமாற்­றும்’, மரு­த­கா­சி­யின் மீள்­வ­ர­வின் இன்­னொரு உச்­சம். ‘யூ கேன்­னாட் கீப் அ குட் மேன் டவுன்’. ஒரு வல்­ல­வனை கீழே போட்டு அழுத்­தி­விட முடி­யாது. ரஜி­னி­காந்­துக்கு ‘நேரம் வந்­தாச்சு, நல்ல யோகம் வந்­தாச்­சு’­என்று அன்றே பாடி­ய­வ­ரும் மரு­த­கா­சி­தான்  (தாய் மீது சத்­தி­யம்) .

தன்­னு­டைய திரைப்­பா­டல்­க­ளின் தொகுப்பை, 1986ல் மரு­த­காசி வெளிக்­கொண்டு வந்­தார். பழைய நண்­பர் ஏ.கே.வேலன் அவ­ருக்­கதை அச்­ச­டித்­துக்­கொ­டுத்­தார். தன்­னு­டைய தொகுப்பை எம்.ஜி.ஆருக்­கும், தேவ­ருக்­கும்  அர்ப்­ப­ணம் செய்­தி­ருந்­தார், மரு­த­காசி.

மரு­த­காசி ஐம்­ப­து­க­ளில் கொடி­கட்­டிப்­ப­றந்­த­போது, அவ­ரு­டன் சென்­னை­யில் இருந்து கல்­லூ­ரி­யில் படித்­த­வர், அவ­ரு­டைய தம்பி, முத்­தை­யன். மரு­த­கா­சி­யின் திரை உலக வாழ்க்­கையை ஓர­ள­வுக்கு நேர­டி­யா­கக் கண்­ட­வர். அவர் அரசு கல்­லூ­ரி­க­ளில் தாவ­ர­வி­யல் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்த பிறகு, தன்­னு­டைய அண்­ணனை  குறித்து,   ‘திரைக்­க­வித்­தி­ல­கம் கவி­ஞர் அ.மரு­த­கா­சி­யின் திரை­யு­லக  சாத­னை­கள்’ என்ற தலைப்­பில் நூல் எழுதி, தன்­னு­டைய நினை­வு­க­ளைப் பதிவு செய்­தி­ருக்­கி­றார்.

மரு­த­கா­சிக்கு ஆறு மகன்­கள், மூன்று பெண்­கள். ஆண் மக்­க­ளில் மூன்று பேர் அர­சுப்­ப­ணி­யில் இருந்­தார்­கள். பொன்­முடி என்­ப­வர் ஓவி­யக்­கல்­லூ­ரி­யில் படித்­து­விட்டு அச்­சுத் தொழிலை அரு­மை­யாக செய்­கி­றார். இன்­னொரு மக­னான மரு­த­ப­ரணி, பல நூறு படங்­க­ளைத்  தமி­ழில் மொழி­மாற்­றம் செய்து சாத­னைப்­ப­டைத்­த­வர். அவர் முன்­னின்று அப்­பா­வின் நூற்­றாண்டை சகோ­தர்­க­ளு­டன் கொண்­டாடி இருக்­கி­றார்.

எப்­ப­டி­யும், தமிழ் இசைப்­பா­டல் துறை­யில் சாத­னை­கள் பல செய்த மரு­த­காசி, இன்­னும் பல நூற்­றாண்­டு­கள் நினை­வில் இருப்­பார் என்­ப­தில் சந்­தே­கம் இல்லை.

(தொட­ரும்)