பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2020 12:22

சென்னை,

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மார்ச் 2 தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 2) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 மாணவர்கள் எழுத உள்ளனர்.

தேர்வு பொறுப்பாளர்கள் நியமனம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

+2, +1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்வு பொறுப்பாளர்கள் தேர்வு நிலவரங்களைக் கண்காணிப்பர் என பள்ளிக்கல்வித்துறை, தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.