சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 17–2–2020

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2020


இந்திய பங்குச் சந்தை நிலவரம்

இந்த வாரம் சந்­தை­கள் ஒரு முனேற்­றத்­து­டன் தான் ஆரம்­பித்­தன. இந்த இடத்­திற்கு எஃப் எம் சி ஜி பங்­கு­கள், ஃபார்மா பங்­கு­கள் ஆகி­யவை முக்­கிய கார­ண­மாக இருந்­தன.  வார இறு­தி­யான வெள்­ளி­யன்று சந்­தை­கள் பெரிய அள­வில் இறங்­கி­னா­லும், மொத்­த­மாக வாரத்­தின் இறுதி அளவு சென்ற வார இறுதி அளவை விட கூடு­த­லா­கவே முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச்­சந்தை 202 புள்­ளி­கள் குறைந்து 41 ஆயி­ரத்து 257 புள்­ளி­க­ளு­ட­னும்,   தேசிய பங்­குச்­சந்தை 61 புள்­ளி­கள் குறைந்து 12113 புள்­ளி­க­ளு­ட­னும் முடி­வ­டைந்­தது. இந்த வாரம் நன்­றாக சென்று கொண்­டி­ருந்த சந்­தை­களை வார இறுதி தினம் கீழே இறக்கி விட்­டது.  இறங்­கி­விட்­டது கார­ணம் மற்­றும் வங்கி பங்­கு­கள் ஆகும்.

மிட் கேப் பங்­கு­கள்

மிட் கேப் பங்­கு­கள் கடந்த ஒன்­றரை மாத­மாக சந்­தை­யில்  நன்­றாக பரி­ண­மித்து வந்­தன. ஆனால் கடந்த வாரம் இந்த செக்­டா­ரில் சற்று அதி­க­மான செல்­லிங் இருந்­தது. மிட் கேப் இண்­டெக்ஸ் கிட்­டத்­தட்ட 2 சத­வீ­தம் கீழே விழுந்­தது.  இதி­லி­ருந்து தெரி­வது என்­ன­வென்­றால் சந்­தை­யில் லாபம் பார்ப்­ப­வர்­கள் விற்க ஆரம்­பித்து இருக்­கி­றார்­கள்.

நாம்  சொல்லி சொல்­லி­ய­போது மிட் கேப் பங்­கு­க­ளில் முத­லீடு செய்­தி­ருந்­தால் பல மிட் கேப் பங்­கு­கள் 25 சத­வீ­தத்தை லாபத்தை எட்டி இருக்­கும். அல்­லது அதைத் தாண்­டி­யும் சென்­றி­ருக்­கும்.

ஒவ்­வொரு இறக்­கத்­தை­யும் முத­லீட்­டின் வாய்ப்­பாக பாருங்­கள்.

யெஸ் பாங்க்

பல புதிய இன்­வஸ்­டர்­களை கடந்த ஆறு மாத­மாக கொண்டு வர முயற்­சித்து வரு­கி­றது. ஆனால் கொண்டு வந்த இன்­வஸ்­டர்­கள் எல்­லாம் சந்­தைக்கு பிடிக்­க­வில்லை. ஆத­லால் யெஸ் பாங்க் அவர்­களை விட்டு விலக வேண்­டி­யி­ருந்­தது. தற்­போது மறு­படி சில இன்­வஸ்­டர்­கள் வந்­துள்­ள­னர்.

குறு­கிய கால நோக்­கில் பல முத­லீட்­டா­ளர்­கள் இந்த பங்­கில் முத­லீடு செய்து வரு­கின்­ற­னர். இது நல்­ல­தல்ல. இன்­வஸ்­டர் இவர் என சரி­யான முடிவை இந்த வங்கி எடுத்­த­வு­டன் அவர் நல்­ல­வர் என்று மார்க்­கெட் சொல்­லும் பட்­சத்­தில் முத­லீடு செய்­யுங்­கள்.

இவர்­கள் காலாண்டு முடிவை இன்­னும் அறி­விக்­கா­மல் தள்­ளிப் போட்டு வரு­வது வேறு சந்­தை­யில் இந்த கம்­பெ­னி­யின் பங்கை கீழே தள்ளி வரு­கி­றது.

வங்­கிப் பங்­கு­க­ளில் செல்­லிங்

வெள்­ளி­யன்று சந்­தை­கள்  நன்­றாக தான் ஆரம்­பித்­தது. மேலே தான் இருந்­தது. ஆனால் வங்­கி­க­ளில் வோடோ­போன் வாங்­கி­யி­ருந்த கடன்­கள் எங்கு வாராக் கடன் ஆக முடி­வ­டைந்து விடுமோ என்ற அச்­சம் சந்­தை­யில் பர­வி­யது போது சந்­தை­யில் வங்­கிப்­பங்­கு­க­ளில் இறக்­கம் ஆரம்­பித்­தது.

பார்மா ஸ்டாக்­கு­கள்

கடந்த  சில மாதத்­தில் பார்மா ஸ்டாக்­கு­கள்  நல்ல ஏற்­றத்தை பெற்­றுத் தந்­தி­ருக்­கின்­றன.  கார­ணம் விற்­பனை அதி­க­ரித்­தி­ருப்­பது, காலாண்டு லாபங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது  தான். இந்த செக்­டா­ரில் முத­லீட்­டா­ளர்­கள் அப­ரி­த­மான லாபத்தை சமீ­பத்­தில் பெற்­றி­ருக்­கி­றார்­கள்.

இந்த செக்­டா­ரில் தொடர்ந்து நல்ல பங்­கு­களை பார்த்து முத­லீடு செய்­யுங்­கள். அல்­லது மியூச்­சு­வல் பண்­டு­க­ளில் பார்மா செக்­டா­ரில் மொத்­த­மாக  முத­லீடு செய்­யுங்­கள்.

என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

ஆர்த்தி இண்­டஸ்­டீ­ரீஸ் (இந்த பங்கை பல­முறை ரெக­மெண்ட் செய்­தி­ருக்­கி­றோம். வாங்­கி­ய­வர்­கள் நல்ல லாபங்­களை பார்த்­தி­ருக்­க­லாம்).

மஹா­ந­கர் கேஸ், ஐ டி டி சிமெண்­டே­ஷன், அஸ்ட்ர  மைக்­ரோ­வேவ் ஆகிய பங்­கு­கள் உங்­கள் போர்ட்ஃ­போ­லி­யோ­வில் இருக்­க­லாம்.

எஸ் பி ஐ கார்ட்ஸ் புதிய வெளி­யீடு

எஸ் பி ஐ கார்ட்­ஸின் புதிய வெளி­யீடு செபி­யின் அப்­ரூ­வல் பெற்­றி­ருக்­கி­றது. இத­னால் வெளி­யீடு விரை­வில் வர­லாம். இந்த மாத இறு­தி­யில் வர­லாம் அல்­லது மார்ச் முதல் வாரத்­தில் வர­லாம். போடத்­த­குந்த வெளி­யீடு. ரெடி­யாக இருக்­க­வும்.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

கொரோனோ வைரஸ் இன்­னும் கட்­டுப்­டு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது கவ­லை­ய­ளிக்­கக்­கூ­டிய விஷ­யம் ஆகும். ஆகவே சந்­தை­யில் சிறிது கவ­ன­மா­கவே இருக்­க­வும். ஆனால் சந்­தை­க­ளில் ஒரு முன்­னேற்ற செண்­டி­மெண்ட் இருப்­பது வர­வேற்­க­தக்­கது.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com