ஸ்டார்ட் அப் உல­கம் : உடை­கள் வாட­கைக்கு… வித்­தி­யா­ச­மான ஸ்டார்ட் அப்

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2020

பல சம­யங்­க­ளில் ஒரு முறை உப­யோ­கிப்­ப­தற்­காக / அணி­வ­தற்­காக  உடை­களை மிக­வும் அதி­கம் பணம் கொடுத்து வாங்­கும். இவை 10 ஆயி­ரம் முதல் 150,000 ரூபாய் வரை மதிப்­புள்ள தான் இருக்­கும். ஆமாங்க, கல்­யாண ரிசப்­ஷ­னுக்கு போடும் டிரஸ் இவ்­வ­ளவு ரூபாய்க்­கும் வாங்­கு­றாங்க…

அவ்­வ­ளவு பணம் கொடுத்து வாங்­கிய பிறகு, ஒரு­முறை அணிந்த பிறகு அதை என்ன செய்­வ­தென்று தெரி­யா­மல் நன்­றாக பேக் செய்து அல­மா­ரி­யில் அடைத்து வைத்­து­வி­டு­வோம்.  இது போன்று பல­ருக்கு பல சம­யங்­க­ளில் நடந்­தி­ருக்­க­லாம்.  இதற்கு உதா­ர­ணங்­கள் கூறப்­போ­னால் கல்­யாண ரிசப்­ஷன், மெஹந்தி பங்­க்ஷன், சங்­கீத், கல்­யா­ணம், திரு­விழா, கல்­யா­ணத்­திற்கு முன்பு எடுக்­கப்­ப­டும் போட்டோ ஷுட் போன்­றவை.

பல­ருக்கு பல சம­யங்­க­ளில் ஒரு முறை அணிந்த உடை­களை அணி­வது பிடிக்­காது. ஒவ்­வொரு முறை­யும் வித்­தி­யா­ச­மான புதிய உடை­களை அணி­வது பிடிக்­கும்.

உங்­க­ளுக்கு இந்த விஷ­யத்­தில் உத­வு­வ­தற்­கா­கவே ஒரு ஸ்டார்ட் அப் முளைத்­துள்­ளது. ப்ளைராப் (FLYROBE) என்ற இவர்­க­ளின் இணை­ய­த­ளம் வித்­தி­யா­ச­மான இந்த விஷ­யத்தை கையில் எடுத்து அதில் வெற்­றி­யும் பெற்­றி­ருக்­கி­றார்­கள்.

லெகேங்கா, ஷெர்­வானி, கோட், கெள­வுன், சேலை, குர்தா, அனார்­கலி,  போன்­றவை பெண்­க­ளுக்கு இந்த கம்­பெனி மூலம் ஆன்­லை­னில் ஆர்­டர் செய்­ய­லாம்.  சில ஊர்­க­ளில் தங்­கள் ஷோ-ரூம்­க­ளும்  வைத்­தி­ருக்­கி­றார்­கள்.  

இது தவிர இந்­தி­யா­வின் புகழ்­பெற்ற டிசை­னர்­கள் டிசைன் செய்த உடை­க­ளை­யும் வாட­கைக்கு என்று காட்­சிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். ப்ராண்­டட் கம்­பெனி ரெடி­மேட் உடை­க­ளை­யும் வாட­கைக்கு எடுக்­க­லாம்.

4 நாள் முதல் 8 நாள் வரை வாட­கைக்கு கிடைக்­கும்.

உங்­க­ளி­ட­மும் இது போன்ற நிகழ்ச்­சி­க­ளுக்கு வாங்­கிய உடை­கள் ஒரு முறை உப­யோ­கப்­ப­டுத்தி விட்டு அப்­ப­டியே இருக்­கும். அவை நன்­றாக இருக்­கும் பட்­சத்­தில் இவர்­கள் மூலம் நீங்­க­ளும் வாட­கைக்கு விட­லாம்.

சிலர் தங்­க­ளி­டம் இருக்­கும் உப­ரிப் பணத்­தில் விலை உயர்ந்த உடை­களை வாங்கி இவர்­க­ளி­டம் வாட­கைக்கு விட்டு அந்த உடை­கள் வாங்­கிய பணத்தை ஒரிரு வரு­டங்­க­ளில் சம்­பா­தித்து விடு­கி­றார்­கள் என்­றால் பார்த்­துக் கொள்­ளுங்­க­ளேன். வங்­கி­க­ளில் பணத்தை டெபா­சிட் செய்து வைப்­பதை விட இவை நல்ல வரு­மா­னத்தை தரு­கி­றது ஆயி­ரக்­க­ணக்­கா­னோர்­க­ளுக்கு.

அவர்­க­ளின் இணை­ய­தள முக­வரி https://flyrobe.com.


ஸ்டார்ட் – அப் மற்­றும் ஏற்­று­மதி கருத்­த­ரங்­கம்.

தவ­றில்­லா­மல் ஏற்­று­மதி செய்­வ­தற்­கும், ஸ்டார்ட் – அப் தொடங்­கு­வது மற்­றும் அதற்கு நிதி பெறு­வ­தற்­கும் வழி­காட்­டும் ஒரு நாள் கருத்­த­ரங்­கம் மது­ரை­யில் மார்ச் 1ம்- தேதி தெப்­பக்­கு­ளத்­தில் உள்ள தியா­க­ரா­சர் கலைக் கல்­லூ­ரி­யில் நடக்­கி­றது. இதை ஏற்­று­மதி பயிற்­சி­யா­ளர், வங்­கி­யா­ளர் சேது­ரா­மன் சாத்­தப்­பன் நடத்­து­கி­றார்.

கல்­லூரி  மாண­வர்­க­ளுக்கு, பயிற்­சிக்  கட்­ட­ணத்­தில் 50 சத­வீத சலுகை அளிக்­கப்­ப­டு­கி­றது.

முன்­ப­திவு விப­ரங்­க­ளுக்கு 986 961 6533, 999 402 9969  என்ற எண்­க­ளில் பேச­லாம்.

இந்த கருத்­த­ரங்கை தின­ம­லர், ப்ரஸ் ஸ்பான்­ஸர் செய்­கி­றது.