ஏற்­று­மதி உல­கம்: மாநில ஏற்­று­மதி அபி­வி­ருத்தி கழ­கம் – தமிழ்­நாட்­டி­லும் வர­வேண்­டும்

பதிவு செய்த நாள் : 17 பிப்ரவரி 2020

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் ஆரம்­பித்­தி­ருக்­கும் ஏற்­று­மதி அபி­வி­ருத்தி கழ­கம் இணைய தளம் மிக­வும் சிறப்­பாக இருக்­கி­றது.

இந்த கழ­கத்­தில் அந்த மாநி­லத்­தைச் சேர்ந்த ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பதிவு செய்­து­கொள்­ள­லாம். அப்­ப­டிப் பதிவு செய்து கொள்­ளு­வ­தற்கு மிக­வும் குறை­வான கட்­ட­ண­மான ரூபாய் 200 மட்­டும் வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது. இது தவிர ஏற்­று­மதி செய்­யும் விரும்­பும் பொருட்­களை அவர்­க­ளின் இணைய தளத்­தில் பதி­வி­ட­லாம் இதற்கு வரு­டத்­திற்கு ரூபாய் 500 மட்­டுமே கட்­ட­ண­மாக வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது.

இப்­படி பதிவு செய்து கொள்­ளும் நண்­பர்­க­ளுக்கு அவர்­கள் வெளி­நா­டு­க­ளில் சென்று ஏற்­று­மதி சம்­பந்­தப்­பட்ட எக்­ஸி­பி­ஷன் கலந்­து­கொள்ள வாய்ப்­பு­களை அளிக்­கி­றது. அதா­வது அதற்கு 60% மானி­ய­மாக கொடுக்­கி­றது. அதி­க­பட்ச மானி­யத் தொகை ஒரு லட்­சம் ரூபா­யாக இருக்­கி­றது.  இது தவிர அப்­படி வெளி­நாடு செல்­லும் போது பய­ணக் கட்­ட­ணத்­தில் 50 சத­வீ­தம் மானி­ய­மாக கிடைக்­கி­றது. அதற்கு அதி­க­பட்­ச­மாக 50 ஆயி­ரம் ரூபாய் கிடைக்­கி­றது.

கேட்­லாக் உங்­களை பிரிண்ட் செய்ய, இணை­ய­த­ளத்தை உரு­வாக்க வரு­டத்­திற்கு அதி­க­பட்­ச­மாக 60 ஆயி­ரம் ரூபாய் மானி­ய­மாக கொடுக்­கி­றது.

வெளி­நா­டு­க­ளுக்கு ப்ராடக்ட்­களை  சாம்­பி­ளாக அனுப்­பும்­போது ஆகும் செல­வு­க­ளில் 75 சத­வீத மானி­ய­மாக அதி­க­பட்­ச­மாக 50 ஆயி­ரம் ரூபாய் வரை கிடைக்­கி­றது.

கம்­பெ­னியை ஐஎஸ்ஓ, ஹால்­மார்க்,  வுல் மார்க், சி மார்க் ஆகிய தரச் சான்­றி­தழ்­கள் பெற ஆகும் செல­வு­க­ளில் 50 சத­வீ­தம் மானி­ய­மாக கிடைக்­கி­றது. அதி­க­பட்­ச­மாக 75 ஆயி­ரம் ரூபாய் வரை கிடைக்­கி­றது.

இந்த மேலே கண்ட மார்க்­கெட்­டிங் சப்­போர்ட்­களை பெற ஒரு கண்­டி­ஷன் என்­ன­வென்­றால்  கம்­பெனி எம் எஸ் எம் இ கம்­பெ­னி­யாக இருக்க வேண்­டும்.

இது­த­விர உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில் உள்ள ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் சிறந்த ஏற்­று­மதி பொருளை கண்­டு­பி­டித்து ஒரு மாவட்­டம் ஒரு ஏற்­று­மதி பொருள் என்று பிர­ப­லப்­ப­டுத்தி வரு­கி­றது.

இதை­யெல்­லாம் ஏன் விரி­வாக எழுதி இருக்­கி­றோம் என்­றால் தமிழ்­நா­டும் இது­போல வச­தி­களை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு செய்து தந்­தால் தமிழ்­நாடு ஏற்­று­ம­தி­யில் இன்­னும் சிறக்க முடி­யும்.

கிளாத் டெக்

உல­க­ள­வில் இருக்­கும் கிளாத்­டெக் துறை சிறப்­பாக வளர்ந்து வரு­கி­றது. இந்­தியா கிளாத்­டெக் துறை­யில் அதி­கம் ஈடு­பட வேண்­டும், உல­க­ள­வில் சிறந்து விளங்­கும் கம்­பெ­னி­க­ளில் ஒன்­றாக வர­வேண்­டும்.

உல­க­க­ள­வில் கிளாத்­டெக் துறை­யில் சிறந்து விளங்­கும் கம்­பெ­னி­கள் கீழே கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

Dupont

Ahlstrom-Munksj

3M

SKAP

Kimberly-Clark

TORAY

Asahi Kasei

Hyosung Corporation

Shandong Weiqiao Pioneering

Ruyi

Sunshine

Shanghai Textile

நாக்­பூர் ஆரஞ்சு பழங்­கள்

இந்­தி­யா­வில் நாக்­பூர் ஆரஞ்சு பழங்­க­ளுக்கு மிக­வும் பிர­சித்தி பெற்­றது. ஆனால் நாக்­பூர் ஆரஞ்சு இது­வரை துபாய் மார்க்­கெட்டை பார்த்­த­தில்லை

இந்த வரு­டம் பிப்­ர­வரி மாதம் 13ம் தேதி 1500 கிரேட் நாக்­பூர் ஆராஞ்­சு­கள் துபாய் மார்க்­கெட்­டுக்கு சென்­றுள்­ளன.

நாக்­பூர் ஆரஞ்­சின் விசே­ஷம் இது பிப்­ர­வரி, மார்ச் மாதங்­க­ளில் அதி­க­மாக கிடைக்­கி­றது. அதே சம­யத்­தில் உலக அள­வில் ஆரஞ்சு பழங்­கள் குறை­வாக விளை­கின்­றன. இத­னால் நாக்­பூர் ஆரஞ்­சுக்கு ஏற்­று­மதி வாய்ப்­பு­கள் கூடி வரு­கின்­றன என்று தான் கூற வேண்­டும்.

நாக்­பூ­ரும்  அதைச் சுற்­றி­யுள்ள இடங்­க­ளி­லும் நாற்­பது லட்­சம் எக்­டே­ரில் ஆரஞ்சு பழங்­கள் பயி­ரி­டப்­பட்டு வரு­கின்­றன. அங்­கி­ருக்­கும் சீதோஷ்­ண­நிலை ஆரஞ்சு பழங்­கள் பயி­ரிட ஏது­வாக உள்­ளது.

இத­னால் அபிடா இந்த மாவட்­டத்தை ஆரஞ்சு பழ கிளஸ்­டர் ஆக அறி­வித்­துள்­ளது.

உல­க­ள­வில் ஆரஞ்சு பழ மார்­கெட் 10,000 மில்­லி­யன் டாலர் மதிப்­புள்­ள­தாக இருக்­கி­றது.  இந்­தியா 2018 19 ஆம் வரு­டத்­தில் 8771 ஆயி­ரம் தங்­கள் ஆரஞ்சு பழங்­களை உற்­பத்தி செய்­துள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தி­யா­வி­லேயே அதி­கம் உப­யோ­கப்­பட்­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.