அதிமுக வளர்ச்சி குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆலோசனை

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 15:42

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4-வது நாளாக இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து சென்னை - ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் ஆலோசனை நடைபெறுகிறது.

காலையில் நடைபெற்ற ஆலோசனையில் தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி முதலமைச்சருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.