முதலமைச்சர் பழனிசாமிக்கு அமைச்சர் உதயகுமார் புகழாரம்

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020 13:11

மதுரை,

எவராலும் முடியாது என கூறியவர்களிடம் முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

ஜெயலலிதா மறைந்த பின்னர் ஆட்சியை யாராலும் தொடர முடியாது என்று கூறியவர்கள் முன்னிலையில், முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து பதிலளித்த அமைச்சர் உதயகுமார்,

சி.ஏ.ஏ. பற்றி தெரியாதவர்கள்தான் அதற்கு எதிராக போராடுகிறார்கள்.

சி.ஏ.ஏ. பற்றி தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

4வது ஆண்டில் முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு 3 ஆண்டுகளைக் கடந்து நான்காவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது.

சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.