தமிழ்நாடு பட்ஜெட்: அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 11:42

2020 - 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளை ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள ஒருமுறை சிறப்பு திட்டம் விரைவில் அறிமுகம்

அதிகாரிகள் - விவசாயிகளை இணைக்க உழவர் - அலுவலர் தொடர்பு எனும் பெயரில் புதிய திட்டம்

நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கம்

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கான நிதி ரூ.2.1 லட்சமாக உயர்த்தப்படும்

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.3099 கோடியும், முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு

நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் 53 ஏக்கரில் ரூ.77 கோடி செலவில் பிரமாண்ட உணவுப் பூங்கா

1,28,463 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது

சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.218 கோடி செலவில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1033 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கப்படும்

தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு திட்டத்தை செயல்படுத்த ரூ.47.50 கோடி ஒதுக்கீடு

சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு

சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்திற்கு 295 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்

கோவில்களுக்கு சொந்தமான 7233 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன

அரசு ஊழியர்களுக்கு சென்னை தாண்டர் நகரில் ரூ.76 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ.253.14 கோடி ஒதுக்கீடு

பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது

சென்னையில் 8 இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது

ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு ரூ.4,109.53 கோடி ஒதுக்கீடு

ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கான நிதியில் கல்வித் திட்டங்களுக்காக ரூ.2,018.24 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு

நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டம்

சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.660 கோடியில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது

பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் நலனுக்காக ரூ.1034.02 கோடி ஒதுக்கீடு

பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.302.98 கோடி ஒதுக்கீடு