2020-2021ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலானது

பதிவு செய்த நாள் : 14 பிப்ரவரி 2020 10:08

சென்னை

2020 - 2021ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

உணவு மானியத்திற்காக 6500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 வது பட்ஜெட் இதுவாகும்...

நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும் உரை சுருக்கம் வருமாறு

அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா

போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் ரூ.218 கோடி மதிப்பில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.


கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக 2020-21 ஆம் ஆண்டு வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கட்டிடங்கள் - கட்டுமானப் பணிகள்

2020-2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களின் கட்டுமான பணிகளுக்காக ரூ.112.92 கோடி உட்பட மொத்தமாக நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.1403.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு ரூ.4073 கோடி ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை உள்ளது; நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்.


நிர்பயா மகளிர் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.71 கோடி ஒதுக்கீடு

புதிய 5 மாவட்டங்களிலும் பெருந்திட்ட அமைக்கும் பணிக்கு ரூ.550 கோடி 

விபத்து மரணம் ரூ. 4 லட்சமாக உயர்வு

வருவாய் பற்றாக்குறை ரூ. 2,1617 கோடி

பள்ளிக்கல்வித்துறை

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக நிதி ஒதுக்கீடு

2020 - 21 ஆம் நிதி ஆண்டிற்கு 34,181.73. கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உயர் கல்வித்துறை - 5,052 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சுகாதாரத்துறை - 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நீர்ப்பாசனத் திட்டம்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1364 நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மீதமுள்ள கிராமங்கள், குளங்கள், ஊருணிகள் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புனரமைப்பு செய்யப்படும்

ரூ.67 கோடி செலவில் காவேரி வடிநிலப்பகுதிகளில் 392 தூர்வாறும் பணிகள் நடைபெறும்

காவிரி பாசனப்பகுதியில் ரூ.1560 கோடி செலவில் பருவ கால மாற்றத் தழுவல் திட்டம்

மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் சாரபங்கா நீரேற்றுப் பாசன திட்டத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

ரூ.610 கோடி செலவில் 37 அணைகள் புனரமைப்பு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு

ரூ.2962 கோடி செலவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்

906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டு பகுதிகளை சீரமைக்க ரூ.583 கோடி ஒதுக்கீடு

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 


மீன்வளத்துறை

மீனவர்களுக்கான மீன் பிடித்தடைக்கால சிறப்பு நிதி உதவிக்கு ரூ.298 கோடி ஒதுக்கீடு

4997 படகுகளில் ரூ.18 கோடி செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்

விழுப்புரம் அழகன் குப்பம் மற்றும் செங்கல்பட்டு ஆலம்பரைக்குப்பத்தில் ரூ.235 கோடி செலவில் மீன் பிடித்துறைமுகங்கள்

நாகை ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும்

மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ. 49,000 கோடி செலவில் அமைக்கப்படும்

தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்


பூச்சி மேலாண்மை நடவடிக்கைக்கு ரூ 20 கோடி ஒதுக்கீடு

மாமல்லபுரத்தை மேம்படுத்த ரூ. 563 கோடியில் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

ரூ.3000 கோடி செலவில் சென்னையில் பேரிடர் தணிப்பு திட்டத்திற்கு பரிந்துரை

சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம்

கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு


தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடி 

2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் 

புதிய அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கீடு,  கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு.

முத்திரைத் தாளுக்கான வரி 1%ல் இருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும்


புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள்

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம், 

உமையாள்புரத்தில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைகத் திட்டம்

சிறு, குரு தொழில்களுக்கு வட்டி மாணியம் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்.

ஒப்பந்தங்கள் பதிவுக் கட்டணங்களும் 1%ல் இருந்து 0.25 சதவீதமாக குறைப்பு


விவசாயம்

திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும் 

உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண்துறைக்கு ரூ.11894 கோடி ஒதுக்கீடு

அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.1450 கோடி ஒதுக்கீடு

வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

கரும்பு விவசாயிகளிடம் நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி ஒதுக்கீடு

டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற வீதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ.110 கோடி

புதிதாக 45 உழவர் - உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ.724 கோடியாக உயர்வு


நிதி ஒதுக்கீடு

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு

கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு

வருவாய் பற்றாக்குறை மாநியமாக ரூ.4025 கோடி வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரை

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

1,12,876 தனி வீடுகள், 65,290 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.504 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள தமிழ்நாடு 5 புதிய மாவட்டங்களில் ரூ.550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்படும்

குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்

நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்.

பேரிடம் மேலாண்மைக்கு ரூ.1360 கோடி ஒதுக்கீடு

பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

தமிழக காவல்துறைக்கு ரூ.8876 கோடி ஒதுக்கீடு

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

சிறைச்சாலைகள் துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1403 கோடி ஒதுக்கீடு

திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு