கரோனா வைரஸ் பாதிப்பு: ஒரே நாளில் 242 பேர் பலி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020 15:51

பெய்ஜிங்,

   கரோனா வைரசால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஒரே நாளில் மட்டும் 242 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி  மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

சீன சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சீனாவில் கோவிட் 19 கரோனா வைரஸுக்கு கோவிட் - 19 என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 1,113 பேரும், ஹாங்காங் மற்றும் பில்ப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிப்பிற்கு ஹூபேய் மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15,000க்கும் அதிகமானோருக்கு ஒரு நாளில் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

கரோனா வைரஸுக்கு சுமார் 48,206 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீனா தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

.