‘‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள், சிலர் நோக்கினாலும் காதல் ஏன் எட்டாக்கனி...’’ – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020

காதல் இன்றி வாழ்­வது சாத்­தி­யமா? இந்த பூமி­யில் பிறந்த எந்த உயி­ரி­னத்­துக்­கும் அது சாத்­தி­யம் இல்லை. காதல் என்ற ஒற்­றைப்­புள்­ளி­யில்­தான் உல­கமே இயங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. தன் குடும்­பம், குழந்­தை­கள், உற­வி­னர்­கள், நண்­பர்­கள்...  இப்­படி யாரோ ஒரு­வ­ரின் மீதான நேசம்­தான்  நம் இலக்கை நோக்கி நம்மை அனு­தி­ன­மும் நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

அன்பு, பாசம், நேசம், ஈர்ப்பு, பற்று, இனக்­க­வர்ச்சி, காமம்... எல்­லா­வற்­றுக்­கும் பொத்­தாம் பொது­வாக `காதல்’ என்று ஓர் அர்த்­தத்தை வைத்­த­தன் விளை­வு­தான் காதல் என்­றாலே சிலர் முகம் சுளிக்­கக் கார­ணம்!  ஆனால், இவை  அனைத்­துமே `காதல்’ என்ற ஒற்றை வார்த்­தைக்­குள் அடங்­கி­வி­டும் என்று அறி­வி­யல்

மற்­றும் மனித ஒழுங்­கி­யல் தொடர்­பான ஆராய்ச்­சி­கள் கூறு­கின்­றன’’ என்­கி­றார் மன­நல மருத்­து­வர் ஆனந்­த­பா­லன் காதல் குறித்து பல மனோ ரீதி­யான விளக்­கங்­க­ளை­யும் தரு­கி­றார்.

``மேலே சொன்ன  இந்த உணர்­வு­கள் தூண்­டப்­ப­டும் நேரங்­க­ளில், மனித மூளை­யின் செய­லாற்­றலை ஆராய்ந்­த­தில், அனைத்­துமே ஒன்­றோ­டொன்று மிக­வும் நெருங்­கிய தொடர்­பு­டை­யவை என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. உதா­ர­ண­மாக. ஒரு குழந்தை தன் தாயைக்­கண்டு சிரிக்­கும்­போ­தும், ஒரு தாய் தன் குழந்­தைக்­குப் பாலூட்­டும்­போ­தும், ஓர் ஆண் தனக்­குப் பிடித்த பெண்­ணைக் காணும்­போ­தும் ஒரே­வி­த­மான ரசா­யன மாற்­றங்­க­ளும் நம் மூளை­யில் நிகழ்­கின்­றன. ஆக, இவற்றை வித்­தி­யா­சப்­ப­டுத்­து­வது எது? நம் வள­ரும் பரு­வத்­தில் கற்­றுத்­த­ரப்­ப­டும் பழக்க வழக்­கங்­களும், சமூக நெறி­மு­றை­க­ளும் தான். இந்த விளக்­கத்தை மன­தில் வைத்­துக்­கொண்டு, இங்கு நாம் காதல் என்­பதை, `பருவ வய­தி­னர் ஒரு­வர் மீது ஒரு­வர் கொள்­ளும் தீவிர நேசத்­தால் ஏற்­ப­டும் பாலின ஈர்ப்பு’ என்ற விளக்­கத்­தோடு மேலும் இதைப்­பற்றி அல­சு­வோம்.

காதல்­வ­யப்­ப­டு­வது சரியா... தவறா?

உல­கில் உயிர்­கள் அழி­யா­மல் நிலைத்­தி­ருப்­ப­தன் முக்­கி­யக் கோட்­பாடு இனப்­பெ­ருக்­கம். இதற்­குச் சமூக ஒருங்­கி­ணைப்பு, ஒன்­று­கூடி வாழ்­தல், இணை தேடல், கலவி ஆகி­யவை இன்­றி­ய­மை­யா­தவை. இவற்­றுக்­கெல்­லாம் முதல் படி காதல் என்று அமை­யும்­போது, நாம் காதல் வயப்­ப­டு­வது இயற்­கை­யின் செயல்­பாடே. மேலும் இனப்­பெ­ருக்­கத்­துக்கு அப்­பாற்­பட்டு இந்த காதல், நம்­பிக்­கை­யான நீண்­ட­கால உற­வு­க­ளுக்கு வழி­வ­குப்­ப­தன் மூலம், வாழ்க்­கை­யின் சவா­லான சூழ்­நி­லை­க­ளில் நமக்கு அர­வ­ணைப்­பும் பாது­காப்பு உணர்­வும் கிடைக்­கச் செய்­கி­றது.

காத­லிக்க ஏற்ற வயது எது?

பிறந்த குழந்­தை­கூட தாயின் மீது காதல் கொள்­ளும்­போது, காத­லுக்கு வயது வரம்பை எப்­படி நிர்­ண­யிக்க முடி­யும்? மூன்று வய­தி­லேயே குழந்­தை­கள் எதிர் பாலி­னத்­த­வரை அடை­யா­ளம் கண்­டு­கொள்­கி­றார்­கள். மேலும் பருவ வயதை அடை­யும்­போது, உட­லில் ஏற்­ப­டும் கூடு­தல் உடற்­கூறு மற்­றும் ஹார்­மோன் மாற்­றங்­கள் இவர்­களை அடுத்த கட்­டத்­துக்­குத் தயார்ப்­ப­டுத்­து­கின்­றன... ஏறக்­கு­றைய 12 வயது முதலே நம் உடல் அதற்­குத் தயா­ரா­கி­வி­டும்.

கண்­ட­தும் காதல் வருமா?

ஆணும், பெண்­ணும் இதில் வேறு­ப­டு­கின்­ற­னர். ஆண்­க­ளது தேடல் மிக எளிது. ஆண்­க­ளுக்கு பெரும்­பா­லும் புற அழகு ஒன்றே போது­மா­னது. பார்த்­த­தும் பொறி தட்­டி­வி­டும். இதில் அவர்­க­ளைக் கேலி செய்­வ­தற்கோ, குறை கூறு­வ­தற்கோ ஒன்­று­மில்லை. ஏனெ­னில், இயற்­கைத் தெரிவு முறை-­­­­­யின்­படி இது மறை­மு­க­மாக, ஒரு பெண்­ணின் கரு­வு­று­தல் திற­னைக் குறிக்­கி­றது.  கூடு­த­லாக, தனக்கு நெருக்­க­மான பெண்­க­ளின் (தாய், அக்­காள், பாட்டி) குண­ந­லன்­களை இது­போன்ற பெண்­ணி­டம் காணும்­போது எளி­தில் காதல் வயப்­ப­டு­கி­றார்­கள். இன்­றைய கால­கட்­டத்­தி­லும், இதில் பெரிய மாற்­றங்­கள், ஏது­மில்லை. ஆனால், ஒரு பெண்­ணின் தெரி­வுப் பட்­டி­யல் சற்று சிக்­க­லா­னது. தான் தேர்ந்­தெ­டுக்­கும் ஆண், எதிர்­கா­லத்­தில் தன்­னை­யும் தன் பிள்­ளை­க­ளை­யும் காக்­கும் திறன் உடை­ய­வனா என்­பதே இவர்­க­ளது முதல் தேவை. அந்த காலத்­தில், ஒரு­வ­னது வீர­மும் உழைக்­கும் திற­னும் இதற்­குப் போது­மா­ன­தாக இருந்­தன. ஆனால், பெண்­க­ளும் ஆண்­க­ளுக்கு இணை­யாக முன்­னே­றியி­ருக்­கும் இந்­தக் காலத்­தில், 1,000 ஆண்­க­ளுக்கு 940 பெண்­களே இருக்­கி­றார்­கள் (2011 மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­புப்­படி... ) என்­கிற பட்­சத்­தில், சிக்­கல் இன்­னும் (முக்­கி­ய­மாக ஆண்­க­ளுக்கு) அதி­க­மா­கி­றது.   அழகு, அறி­வுத்­தி­றன், தனித்­தன்மை, நம்­ப­கத்­தன்மை, தன்­னு­டன் அதிக நேரத்­தை­யும் காசை­யும் செல­விட யோசிக்­கா­த­வன், தன்­னைச் சம­மாக நடத்­து­ப­வன்... என்று நீளும் பட்­டி­ய­லில் மற்­ற­வ­னை­விட, தான் சிறந்­த­வன் என்று நிரூ­பிக்க வேண்­டிய கட்­டா­யத்­துக்கு ஆண்­கள் தள்­ளப்­படு ­கிறார்­கள். இது போதா­தென்று, சினிமா, சீரி­யல்­கள், வலை­த­ளம் மூலம் ஒரு முன்­மா­திரி ஆண் என்­ப­தற்­குத் தேவை­யற்ற ஹீரோ­யி­சம் (ஒரே நேரத்­தில் பத்து பேரைப் பறக்­க­வி­டு­வது, பைக்­கில், ஏரோப்­ளேன் சாக­சம் காட்­டு­வது, சிக்ஸ்­பேக் பேர்­வ­ழி­கள் என்று) முன் ­வைக்­கப்படுகி றது. சொல்­லப்­போ­னால் இவற்­றை­யெல்­லாம் காணும் ­போது காதல் உணர்­வை­விட, காமெடி உணர்­வு­தான் பெண்­ணுக்கு ஏற்­ப­டும். கூடு­த­லாக, நம் சமூ­கத்­தில் ஊறிக்­கி­டக்­கும் சாதிக்­கட்­ட­மைப்பு. இத்­தனை குழப்­பத்­தில், தான் ஓர் ஆணி­டம் என்ன எதிர்­பார்க்­கி­றோம் என்ற தெளி­வுக்கு வந்து, ஒரு­வ­னைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­குள் சில பல காதல் தோல்­வி­கள் அரங்­கே­றி­வி­டும். `கண்­ட­தும் காதல்’ இனிக்­க­லாம், ஆனால், நிலைக்­காது.

காதல் ஏன் பல­ருக்கு எட்­டாக்­க­னி­யாக இருக்­கி­றது?

அள­வுக்கு மிஞ்­சி­னால் அமு­த­மும் நஞ்சு.’ இது காத­லுக்­கும் பொருந்­தும். எடுத்த எடுப்­பில் கண்­மூ­டித்­த­ன­மாக, அது அங்­கீ­க­ரிக்­கப்­ப­டுமா என்­ப­தைப் பற்றி யோசிக்­கா­மல், ஒட்­டு­மொத்த பாசத்­தை­யும் ஒருத்­தி­யி­டம் கொட்­டு­வது.  வீட்­டில் “உனக்­கென்­னடா நீ சிங்­கக்­குட்டி மாதிரி இருக்கே”, “எம்­புள்­ளைக்கு ஆயி­ரம் பொண்­ணுங்க வரி­சை­யில நிப்­பாங்க” போன்ற அடை­மொ­ழி­களை ஆணா­கப் பிறந்த ஒரே தகு­திக்­காக ஊட்டி ஊட்டி வளர்த்­து­வி­டு­வது நம் தாய்­மார்­க­ளின் வாடிக்கை. அதை­யும் நம்­பிக்­கொண்டு இந்த ரோமி­யோக்­கள், `எனக்கு என்ன குறை, இந்த பொண்­ணுங்க ஏன் இவ்ளோ சீன் போடு­றாங்க..?’ என்று அங்­க­லாய்ப்­பது இன்­னும் வேடிக்கை. இந்த பெண்­கள் மட்­டும் சளைத்­த­வர்­களா என்ன? தனக்­குப் பொருத்­த­மா­ன­வனா என்று யோசிக்­கா­ம­லேயே, தனக்­கும் ஒரு ரசி­கன் கிடைத்­து­ விட்­டான் என்ற குஷி­யில், சும்மா

சுற்­றிக்­கொண்­டி­ருந்­த ­வனை உசுப்­பி­விட்­டு­விட்டு, பின்பு அவ­ச­ரப்­பட்­டு­விட்­டோமோ என்று புலம்­பு­வது. மேற்­சொன்ன இரு போக்­கு­க­ளா­லும், இரு­பா­லி­னத்­த­வர்­க­ளுக்­கும் இன்­னல்­கள் உரு­வா­கும்.  எட்­டும் கனி­கள் அனைத்­தும் ருசிக்­காது.

காத­லைக் கையாள்­வது எப்­படி?

`காத­லெ­னும் தேர்­வெ­ழுதி காத்­தி­ருந்த மாண­வன் நான்...’

காதல் என்­பது இணைத்­தே­டல் எனும் சவா­லான அத்­தி­யா­யத்­துக்­கான நுழை­வுத்­தேர்வு. முத­லில் நம் வாழ்க்­கைத்­து­ணை­யி­டம் நாம் என்ன எதிர்­பார்க்­கி­றோம் என்­ப­தில் நாம் தெளி­வுற வேண்­டும். மேலும், அன்று முதல் இன்று வரை, இந்த உல­கம் பெண் வழிச் சமூ­கமே. என்­ன­தான் ஆணா­திக்­கம் என்று நாம் கூப்­பாடு போட்­டா­லும், அப்­ப­டிப்­பட்ட ஆணை­யும் ஆளுமை செய்­ப­வள் பெரும்­பா­லும் ஒரு பெண்­ணா­கத்­தான் (தாய், தமக்கை, மனைவி, தோழி, காதலி) இருப்­பாள். ஆக, இங்கு தேர்­வின் விதி­களை­ யும், மதிப்­ப­ள­வை­யும் நிர்­ண­யிப்­ப­வள் பெண்ணே.

காத­லில் ஒரு பெண்­ணின் முக்­கி­யத் தேவை­கள் என்­ன­வென்று முன்­னரே பார்த்­தோம். அதற்­கேற்­பத் தன்­னைத் தயார் செய்­து­கொள்­வதே ஓர் ஆண்­ம­க­னின் சாமர்த்­தி­யம். இதை­யெல்­லாம் எப்­ப­டியோ சமா­ளித்து, ஒரு­வ­ழி­யாக ஒரு­வ­ரைத் தேர்ந்­தெ­டுத்­தால், இவன்/இவள் நம்ம சாதி இல்­லையே என்று கம்பு சுற்­றும் பெற்­றோர், உற­வி­ன­ரின் இடர்ப்­பாடு இந்த விளக்­கங்க­ ளுக்கு அப்­பாற்­பட்­டது.

பழ­கப் பழக காத­லும் புளித்­து­வி­டுமா?

டைம்­பா­சுக்கு, கெத்து காண்­பிக்­கக் காத­லிப்­பது, எடு­பிடி ஏவ­லுக்கு ஆள் பிடிப்­பது, நம்­மு­டைய விரக்­தி­களை/செல­வு­களை எல்­லாம் ஈடு­கட்ட ஒரு­வரை பலி­கடா ஆக்­கு­வது, ஒத்­திகை பார்ப்­பது... இவற்­றுக்­காக மட்­டும் காத­லைப் பயன்­ப­டுத்­தும்­போது புளிக்­கத்­தான் செய்­யும். முக்­கி­ய­மாக, இந்த கண்­ட­தும் காதல் வகை­ய­றாக்­கள்.

`பழ­கப் பழ­கத்­தானே உள்­ளி­ருக்­கும் உண்­மை­யான குண­ந­லன்­கள் வெளிப்­ப­டும்... அப்போ, பழ­கிப் பார்ப்­ப­தில் என்ன தவறு?’ என்­ப­வர்­க­ளுக்கு, பழ­கிப் பார்த்­து­விட்டு பிடிக்­க ­வில்­லை­யென்­றால் எந்த அவப்­பெ­ய­ரும், மனக்­க­சப்­பும், பின்­வி­ளை­வு­க­ளும் ஏற்­ப­டா­மல் அவ­ர­வர் வாழ்க்­கையை வாழத் தயாரா நம் சமூ­கக் கட்­ட­மைப்பு அதை அனு­ம­திக்­குமா என்ற கேள்வி கேட்­டால், அதற்­கான பதில் கிடைக்­கும். இந்த மேற்­கத்­திய வாழ்க்கை முறைக்கு நாம் மாற, இன்­னும் நீண்ட தூரம் போக வேண்­டி­யி­ருக்­கி­றது.

என்­ன­வெல்­லாம் செய்­யக் கூடாது ?

ஆணோ, பெண்ணோ நச்­ச­ரிக்­கும் குண­மு­டைய­ வரின் மேல் கவர்ச்சி ஏற்­ப­டும் வாய்ப்­பு­கள் மிகக் குறைவு. விடா­மு­யற்­சிக்­கும் நச்­ச­ரிப்­புக்­கும் ஒரு

மெல்­லிய கோடே வித்­தி­யா­சம். இதற்கு அடுத்­த­வர் மன­நி­லை­யி­லி­ருந்து ஒரு விஷ­யத்தை அணு­கும் திறன் மிக அவ­சி­யம். அடித்­துப் பிடித்து ஏறி, இடம் பிடித்­துப் பேருந்­தில் வேண்­டு­மா­னால் பய­ணம் செய்­ய­லாம்; நம்­மேல் ஈர்ப்பு இல்­லாத ஒரு­வர் மன­தில் இடம்­பி­டித்து வாழ்க்­கைப் பய­ணம் மேற்­கொள்­வது மிக ­கடி­னம்.

காத­லில் உண்மை, போலி என்று எது­வு­மில்லை. நம் எதிர்­பார்ப்­பு­களே அதை தீர்­மா­னிக்­கின்­றன. நம் காத­லின் நம்­ப­கத்­தன்மை ஆட்­டம் காண்­பது, கருத்து வேறு­பா­டு­கள், முன்­னு­ரி­மை­கள், விருப்­பு-­­­­­வெ­றுப்­பு க­ளின் அடிப்­ப­டை­யில் பிரச்னை என்று ஒன்று வரும்­போ­து­தான். அதை நாம் எப்­ப­டிக் கையாள்­கி­றோம் என்­ப­தைப் பொறுத்தே, காதல் அடுத்த கட்­டத்­துக்கு நக­ரும். எல்­லாம் செய்­தா­கி­விட்­டது, இருந்­தும் கைகூ­டிய காதல் நிலைக்­க­வில்லை...

எப்­ப­டிச் சமா­ளிப்­பது? பகுத்­த­றிந்து ஏற்­றுக்­கொள்­ளு­தல் (மேற்­கூ­றப்­பட்ட எந்­தக் கார­ணத்­தால் சிக்­கல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை ஆராய்ந்து, அதை கோபத்­தில், ஆதங்­கத்­தில், இய­லா­மை­யால் கொந்­த­ளிக்­கும் மூளைக்­குக் கொண்டு சேர்ப்­பது.

உணர்ச்சி மடை­மாற்­றம் :

நமக்­கும் மற்­ற­வ­ருக்­கும் இடை­யூறு இல்­லாத வகை­யில் நம்­முள் எழும் உணர்ச்­சிக் குமு­றலை வெளிப்­ப­டுத்­து­வது. உதா­ர­ண­மாக கவிதை எழு­து­வது, உடற்­ப­யிற்சி, பிரா­ணி­கள் வளர்ப்பு... போன்­றவை.

நம் நீண்ட நாள் லட்­சி­யத்தை/இலக்கை நோக்கி (அப்­படி ஒன்று இன்று வரை இல்­லாத பட்­சத்­தில், தாம­திக்­கா­மல் ஒன்றை நிர்­ண­யித்து) முழு மன­தை­யும் அதில் செலுத்­து­வது. நம்­மேல் பிரி­ய­முள்­ள­வர்­கள் (குடும்­பத்­தார்), நமக்­குப் பிரி­ய­மா­ன­வர்­க­ளு­டன் (நண்­பர்­கள்) அதிக நேரம் செல­வி­டு­வது.

தவிர்க்க வேண்­டி­யவை...

நம்மை நாமே குறை கூறு­வது, நம் கோபத்தை/ஏமாற்­றத்தை நம்­மீது அல்­லது பிறர் மீது காட்­டு­வது, தங்­கள் காத­ல­ரையோ, காத­லி­யையோ பற்றி அவ­தூறு பரப்­பு­வது), போதைப் பழக்­கங்­க­ளுக்கு அடிமை ஆகு­தல். இந்த போதைப் பழக்­கம் மேற்­சொன்ன, தவிர்க்க வேண்­டிய அனைத்­தை­யும் செய்­யத் தூண்­டும் குருட்டு தைரி­யத்­தைத் தரும் ஆபத்­து­டை­யது.

அடுத்த காத­லுக்கு மனம் தயா­ரா­கும்­போது, நம்­மு­டைய கடந்த காலம் கற்­றுத்­தந்த பாடங்­களை மட்­டும் எடுத்­துக்­கொண்டு, எதிர்­கால உற­வுக்கு வழி­வ­குக்க வேண்­டும்.

நம் முன்­னாள் காத­லன்/காத­லியை நேரில் கண்­டாலோ அல்­லது அவர்­க­ளைப் பற்­றிக் கேள்­விப்­பட்­டலோ, `எல்­லாம் நன்­மைக்கே’ என்ற சிறு புன்­மு­று­ வ­லு­டன் கடந்து செல்ல முடி­கி­ற­தென்­றால், நீங்­கள் ஒரு மனி­த­னாக வெற்றி பெற்­று­விட்­டீர்­கள் என்று அர்த்­தம்” என்­கி­றார் மன­நல மருத்­து­வர் பாலன்.