கிராமங்களில் இலவச மருத்துவம் அளிக்கும் பிந்து... – லட்சுமி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020

நரம்­பி­யல் நிபு­ணர் பிந்து மேனன்,  23 கிரா­மங்­க­ளைச் சென்­ற­டைந்து வேனில் வைத்து நூற்­றுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு இல­வ­ச­மாக சிகிச்­சை­ய­ளித்து வரு­கி­றார். இந்­தி­யா­வில் சுகா­தார பரா­ம­ரிப்பு என்­பது பல ஏழை மக்­க­ளுக்­கும் விளிம்­பு ­நிலை சமூ­கங்­க­ளுக்­கும் எட்­டாக் கனி­யா­கவே உள்­ளது. பெரும்­பா­லான நேரங்­க­ளில் நாட்­டின் தொலை­தூ­ரப் பகு­தி­க­ளுக்கு முறை­யான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு சேவை­கள் சென்­ற­டை­வ­தில்லை.

ஆனால், ஆயுஷ்­மான் பாரத், மொஹல்லா கிளி­னிக் போன்ற மத்­திய மற்­றும் மாநில அர­சுத் திட்­டங்­கள் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது. இந்த நோக்­கத்­தில் தனி­ந­பர்­கள் மற்­றும் நிறு­வ­ னங்­க­ளின் பங்­க­ளிப்பு இருந்து வரு­கி­றது. நரம்­பி­யல் நிபு­ண­ரான பிந்து மேனன் ‘நியூ­ரா­லஜி ஆன் வீல்ஸ்’ என்­கிற தனது அறக்­கட்­டளை மூலம் ஆந்­திர பிர­தே ­சத்­தின் தொலை­தூ­ரப் பகு­தி­க­ளுக்கு சுகா­தார பரா­ம­ரிப்பு சேவை­க­ளைக் கொண்டு சேர்க்­கி­றார். பிந்து இந்த பகு­தி ­க­ளுக்கு மருத்­துவ வேன் ஒன்­றில் பய­ணிக்­கி­றார். இந்த வேன் இல­ வ­ச­மாக நரம்­பி­யல் சிகிச்­சை­ய­ ளிக்­கத் தேவை­யான வசதி கொண்­டது. அத்­து­டன் இவர் விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி ­க­ளை­யும் ஏற்­பாடு செய்து வரு­கி­றார்.

2015ம் ஆண்டு முதல் பிந்து இது­வரை 23 கிரா­மங்­க­ளைச் சென்­ற­டைந்து நூற்­றுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு இல­வ­ச­மாக சிகிச்­சை­ய­ளித்­துள்­ளார். இவர் முகாம் அமைப்­ப­தற்கு முன்பு குழு­வி­னர் அந்த பகு­தியை பார்­வை­யிட்டு உள்­ளூர் மக்­க­ ளி­டையே சுகா­தா­ரம் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். இந்த செயல்­மு­றை­யில் பக்­க­வாத நோயின் ஆபத்­து­கள், அறி­கு­றி­க­ளைக் கண்­ட­றி­வது, சிகிச்­சைக்கு அளிக்­கப்­ப­டும் மருந்­து­க­ளின் பயன்­கள் ஆகி­யவை எடுத்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது.  இவ்­வாறு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­திய பிறகு ஹைபர்­டென்­ஷன், நீரி­ழிவு, பக்­க­வா­தம் ஆகி­ய­வற்­றைக் கண்­ட­றி­யும் ஸ்கிரீ­னிங் முறையை இந்த அறக்­கட்­டளை இல­வ­ச­மாக மேற்­கொள்­கி­றது. அத்­து­டன் சிகிச்­சைக்­குத் தேவை ­யான மருந்­து­க­ளை­யும் வழங்­கு­கி­றது. பிந்து, “கிரா­மங்­க­ளில் பக்­க­ வா­தம் மற்­றும் வலிப்பு நோய் தொடர்­பான விழிப்­பு­ணர்வு இருப்­ப­தில்லை. சிகிச்­சை­யைப் பொறுத்­த­வரை பழ­மை­யான சிகிச்சை முறை­யையே மக்­கள் தேர்வு செய்­கின்­ற­னர். பக்­க­வாத நோய் ஏற்­ப­டா­மல் தடுப்­பதே சிறந்­தது. முகாம்­க­ளில் பக்­க­வா­தம் மற்­றும் வலிப்பு நோயா­ளி­க­ளுக்கு ஆலோ­ச­னை­க­ளும் வழங்­கப்­ப­டு­கி­றது,” என்­றார்.

மேலும், ”மருந்­து­கள் தீர்ந்­து ­போன பின்பு என்ன செய்­வ­தென்று நோயா­ளி­கள் தவிப்­பது முக்­கி­யப் பிரச்­னை­க­ளில் ஒன்று. நோயா­ளி­க­ளுக்கு இது­கு­றித்து ஆலோ­சனை வழங்­கு­கி­றோம். நோய் இருப்­பது கண்­ட­றி­யப்­ப­டா­மல் இருப்­ப­தை­யும் கொடிய நோய்­க­ளி­னால் ஏற்­ப­டும் ஆபத்­து­கள் குறித்து போதிய விழிப்­பு­ணர்வு இல்­லா­த­தை­யும் எங்­க­ளது முகாம்­கள் மூலம் தெரிந்­து­கொண்­டோம். தேவை­யான அள­விற்கு மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை என்­றா­லும் தற்­போது நிலைமை மெல்ல மாறி வரு­கி­றது,” என்­றார்.

பிந்து ஆந்­தி­ரா­வில் உள்ள சில மருத்­து­வ­ம­னை­க­ளில் நரம்­பி­யல் நிபு­ண­ராக பணி­யாற்­றி­யுள்­ளார். 2008ம் ஆண்­டில் திருப்­பதி மருத்­  

­து­வக்கல்­லூ­ரி­யில் நரம்­பி­யல் துறை அமைப்­ப­தி­லும் பங்­க­ளித்­

துள்­ளார். பிந்து மொபைல் செயலி ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ளார்.

“நாங்­கள் ‘எபி­லெப்சி ஹெல்ப்’ என்­கிற செய­லியை வடி­வ­மைத்­துள்­ளோம். இதன் மூலம் மருந்­து­கள் எடுத்­துக்­கொள்ள உரிய நேரத்­தில் அலெர்ட் அனுப்­பும் வசதி, செக் அப் தொடர்­பான உத­வி­கள் போன்­ற­வற்றை நோயா­ளி­கள் பெற­லாம்,” என்­கி­றார்.