பெண் தொழில் முனைவோர் ஏன் குறைவு – சுமதி

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020

சமீப கால­மாக பணிக்கு செல்­லும் பெண்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து

வரு­கி­றது. பெண்­கள் பணிக்கு செல்­வ­தன் முக்­கிய நோக்­கமே குடும்ப வரு­மா­னத்தை பெருக்கி கொள்­வ­தற்­கு­தான். கிரா­ம­பு­றங்­களில் பெண்­கள் அதிக

அள­வில் விவ­சாய பணி­க­ளுக்­கும், கட்­டிட பணி­க­ளுக்­கும் செல்­கின்­ற­னர். நகர்­பு­றங்­க­ளில் அலு­வல் சார்ந்த பணி­க­ளுக்கு அதிக அள­வில் பெண்­கள் செல்­கின்­ற­னர்.

அதே சம­யத்­தில் சுய­தொ­ழில் முனை­வோர்­

களை பொறுத்­த­வரை பெண்­க­ளின் எண்­ணிக்கை இந்­தி­யா­வில் குறை­வு­தான். ஒரு நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு ஆண்­க­ளின் பங்கை போலவே பெண்­க­ளின்

பங்­கும் முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கி­றது. வளர்ந்த நாடு­க­ளில் குறிப்­பாக அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளில் தொழில் வளர்ச்­சி­யில் பெண்­க­ளின் பங்கு அதி­க­ரித்து வரு­கி­றது.

இந்த நாடு­க­ளில் மூன்­றில் ஒரு பகுதி பெண்­கள் தொழில் முனை­வோர்­க­ளாக திகழ்­கி­றார்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பிரிட்­ட­னில் கடந்த 30 வரு­டங்­க­ளில் பெண் தொழிலதி­பர்­க­ளின் எண்­ணிக்கை 3 மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இதே நிலை­தான் மற்ற ஐரோப்­பிய நாடு­க­ளி­லும் நில­வு­கி­றது.

சீனா­வில் கூட புதிய தொழில்­களை துவங்­கு­வ­தில் பெண்­கள் பெரும் ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். இந்­தி­யாவை பொருத்­த­வரை சிறு தொழில் முனை­வோர்­க­ளாக பெண்­கள் ஏழு சத­வீ­தத்­தி­னர் மட்­டும்­தான் இருக்­கி­றார்­கள். தொழில் நிறு­வ­னங்­களை இயக்­கு­வ­தற்கு ஆண்­கள்­தான் தகு­தி­யா­ன­வர்­கள் என்ற இந்­தி­யர்­க­ளின் எண்­ணமே இதற்கு கார­ண­மா­கும். தொழில் துவங்க நினைக்­கும் பெண்­களை சமூ­கம் கேலி செய்து அவர்­களை முடக்கி விடு­கி­றது. தொழில் துவங்­கு ­வ­தற்­கான  மூல­த­னத்தை பெறு­வ­தி­லும் பெண்­கள் பெரும் இன்­னல்­களை

சந்­திக்க நேரி­டு­

கி­றது.   கண­வன் தொழில் துவங்க நகைகளை தரு­வ­தற்கு பெண்­கள் தயா­ராக இருக்­கும் அதே சம­யத்­தில், பெண்­கள் தொழில் துவங்க குடும்ப சொத்­துக்­களை பயன்­ப­டுத்த பெரும்­பா­லான ஆண்­கள் சம்­ம­திப்­ப­தில்லை.  பெண்­கள் தொழில் துவங்­கு­வ­ தற்­கான கடன்

வச­தி­களை வழங்­கு­வ­தில் வங்­கி­க­ளும் தயக்­கம் காட்­டு­கின்­றன. அப்­ப­டியே கடன் தர முன்­வந்­தா­லும் கண­வ­னின் எழுத்து பூர்­வ­மான சம்­ம­த­மும், உத்­தி­ர­வா­தத்­திற்­கான கையெ­ழுத்­தும் வங்­கி­க­ளால் கோரப்­ப­டு­கின்­றன. இந்த தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்கு ஆண்­கள் தயக்­கம் காட்­டு­கின்­ற­னர். பெண் என்­ப­வள் குடும்ப பரா­ம­ரிப்­பா ­ளர் என்ற எண்­ணமே பல ஆண்­க­ளி­டம் நில­வு­கி­றது. செல­வு­களை திட்­ட­மி ­டு­தல், சேமிப்பு ஆற்­றல், பொறுமை, சகிப்பு தன்மை, விடா­மு­யற்சி போன்ற சிறந்த குணங்­கள் இயற்­கை­யா­கவே பெண்­க­ளி­டம் அமைந்­துள்­ளன. இந்த குண­ந­லன்­கள் தொழில் வெற்­றிக்கு பெரி­தும் உத­வும். இவற்­று­டன் கல்­வி­யும் சேர்ந்­தால் அந்த திறன்­கள் முழுமை பெறும்.  

எனவே, ஆண்­கள் ஊக்­க­ம­ளித்­தால் பெண் தொழில் முனை­வோர்­கள் அதிக அள­வில் உரு­வா­வார்­கள். பெண்­கள் பணிக்கு செல்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு அளிக்க தயா­ராக இருக்­கும் ஆண்­கள், பெண்­கள் தொழில் முனை­வோ­ராக உரு­வா­வ­தற்கு பெரும்­பா­லும் ஒத்­து­ழைப்பு தரு­வ­தில்லை. இந்த நிலை மாற வேண்­டும். அப்­போ­து­தான் இந்­தி­யா­வில் பெண் தொழில் முனை­வோர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும்.