பிசினஸ்: நல்ல வருமானம்... நல்ல எதிர்காலம்... – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020

படித்து விட்டு வேலைக்­குப் போய் சம்­பா­திப்­ப­தை­விட, ஏதா­வது ஒரு தொழிலை சொந்­த­மாக ஆரம்­பித்து வெற்றி பெற வேண்­டும் என்­கிற எண்­ணத்­தினை இன்­றைக்கு பல­ரி­ட­மும் வெளிப்­ப­டை­யா­கப் பார்க்க முடி­கி­றது. தவிர, பல தொழில்­க­ளுக்­கும் இப்­போது பிர­கா­ச­மான வாய்ப்­பு­கள் உள்­ளன. சிறிய முத­லீட்­டில் நடத்­தப்­ப­டும் இட்லி கடை இருந்­தா­லும் சரி,ஓர­ளவு பெரிய முத­லீட்­டில் நடத்­தப்­ப­டும் லாண்­டரி ஷாப்­க­ளாக இருந்­தா­லும் சரி, நிறை­யவே வரு­மா­னம் தரு­வ­தாக இருக்­கின்­றன.  இதற்கு முக்­கிய கார­ணம், மக்­க­ளி­டம் காணும் சோம்­பேரி தனம்­தான். அதோடு இன்­றைக்கு எதை­யுமே நினைத்­த­வு­டன் வாங்­கிப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­று­தான் மக்­கள் நினைக்­கி­றார்­கள். இதற்­காக எவ்­வ­ளவு பணத்தை வேண்­டு­மா­னா­லும் செலவு செய்­யத் தயா­ராக இருக்­கி­றார்­கள். தவிர, தற்­போது தொழில் தொடங்­கு­வ­தற்கு ஏற்ற சூழ்­நிலை நிறை­யவே இருக்­கி­றது. தொழில் துவங்­கத் தேவை­யான முத­லீ­டு­க­ளான வங்­கிக் கடன் எளி­தா­கவே கிடைக்­கி­றது. கொஞ்­சம் பெரிய தொழில் எனில், பிரை­வேட் ஈக்­விட்டி என்­னும் பிஇ பண்­டு­கள் பணத்தை முத­லீடு செய்­யத் தயா­ரா­கவே இருக்­கின்­றன.

வித்­தி­யா­ச­மான அணு­கு­மு­றை­யும், கடி­ன­மான உழைப்­பும் உங்­க­ளி­டம் இருந்­தால், நீங்­கள் தொடங்­கும் தொழி­லில் நிச்­ச­யம் வெற்றி பெற­லாம் என்ற சூழ்­நி­லையே தற்­போது உள்­ளது. இந்­தச் சூழ்­நி­லை­யில் அதிக லாபம் தரும் அற்­பு­த­மான ஐந்து தொழில்­களை காண்­போம். இந்த தொழி­லில் உள்ள வாய்ப்­பு­கள் என்ன, இந்த தொழில் துவங்­கு­வ­தற்கு என்­னென்ன தேவை என்­ப­தைக் குறித்து எடுத்­துச் சொல்லி இருக்­கி­றோம். புதி­தாக தொழில் தொடங்க நினைப்­ப­வர்­கள் இந்த தொழில்­களை கவ­னிக்­க­லாமே!

1 ரெடி டு ஈட் புட்ஸ்!

உலக அள­வில் ரெடி டு ஈட் புட்­டுக்­கான வர­வேற்பு அதி­கம் உள்­ளது. மாறி வரும் வாழ்க்கை முறை­யின் கார­ண­மாக இதன் தேவை அதி­க­ரித்­துள்­ளது. இப்­போது பல குடும்­பங்­க­ளில் கண­வ­னும் மனை­வி­யும் வேலைக்­குப் போகி­றார்­கள். மேலும், பல­ரது சம்­ப­ள­மும் இப்­போது குறிப்­பி­டத்­த­குந்த அளவு உயர்ந்­தி­ருப்­ப­தால், செலவு செய்­ய­வும் தயா­ராக இருக்­கி­றார்­கள். தவிர, வேலை கார­ண­மாக சொந்த ஊரை­விட்டு, வெளி­யூ­ருக்கு செல்­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­தி­ருப்­ப­தால், இந்த ரெடி டு ஈட் புட்­டு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­கி­றது. வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­க­ளின் எண்­ணிக்கை கூடு­வ­தால் ஏற்­று­ம­திக்­கும் உகந்த பொரு­ளாக உள்­ளது.

சந்தை மதிப்பு: ரூ. 6 ஆறா­யி­ரம் கோடி, இத்­துறை வரு­டத்­துக்கு 21.99% வளர்ச்சி அடை­கி­றது.  தேவை­யான இயந்­தி­ரங்­கள்: இயந்­தி­ரம், சப்­பாத்தி செய்­யும் இயந்­தி­ரம், டபுள் ஸ்பைரல் மிக்­ஸர், பிரை­யிங் மெஷின் ஆகி­யவை தேவை.

தேவை­யான ஆட்­கள்: 2 நபர்­கள். வரிக்­குப் பிந்­தைய வரு­மா­னம்: 30 சத­வி­கி­தம்

2 லாண்­டரி சர்­வீஸ்!

லாண்­டரி சர்­வீஸ் என்­பது இன்­றைய வேக­மான வாழ்க்கை முறைக்கு அவ­சி­ய­மா­ன­தாக மாறி உள்­ளது. 2021-ம் ஆண்­டுக்­குள் லாண்­டரி சேவை 65 சத­வி­கி­தம் வளர்ச்சி அடை­யும் என சி அண்டு டபிள்யூ ஆய்வு தெரி­வித்­துள்­ளது. மேலும், புதி­தாக 52 ஆயி­ரம் ஓட்­டல்­கள் துவக்­கப்­ப­டும் என­வும் ஆய்­வு­கள் தெரி­வித்­துள்­ளது. மேற்­கூ­றிய துறை­கள் வேக­மாக வளர்ச்சி அடை­யும்­போது லாண்­டரி சேவை­யின் தேவை­யும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. புதி­தாக வேலைக்­குப் போகும் இளை­ஞர்­க­ளின் வளர்ச்சி அதி­க­ரித்து வரு­வ­தா­லும் இந்த லாண்­டரி சேவைக்கு அதிக வர­வேற்பு உள்­ளது. அதா­வது, அவர்­க­ளின் துணி­க­ளைத் துவைத்து அயன் செய்து தரு­வ­தற்­கான கட்­ட­ணம் என்­பது மிக­வும் குறைவு. இந்த தொழி­லுக்கு தண்­ணீர் அதி­கம் தேவை.

தேவை­யான இயந்­தி­ரங்­கள்: தொழில் துறைக்­குத் தேவை­யான வாஷிங் மெஷின், ஹைட்ரோ கரைப்­பன், துணி­களை உலர்த்­தும் இயந்­தி­ரம், அயன் செய்­யும் டேபிள் மற்­றும் அதற்­கான இயந்­தி­ரம். தேவை­யான ஆட்­கள்: அதி­க­பட்­சம் 40 நபர்­கள். தொழில் வாய்ப்­பு­கள்: மருத்­து­வ­மனை, ஓட்­டல், வேலைக்­குப் போகும் தனி­ந­பர்­கள், கல்வி நிறு­வ­னங்­கள், ரயில்வே, பேருந்­து­கள் போன்­றவை. வரிக்­குப் பின் வரு­மா­னம்: 16 சத­வீ­தம் கிடைக்­கும். ‘‘20 முதல் -25 சத­வீ­தம் லாபம் கிடைக்­கும்!’’

3 கார் வாஷிங்/சர்­வீஸ் சென்­டர்!

இரண்டு சக்­கர வாக­னத்­துக்கு இணை­யாக கார்­க­ளின் தேவை இன்று அதி­க­ரித்­துள்­ளது. கார் வாங்­கு­வ­தற்கு எளி­தா­கக் கடன் கிடைப்­பது இதற்கு ஒரு முக்­கி­ய­மான கார­ணம் ஆகும். அடுத்த 20 ஆண்­டு­க­ளில் இந்­தி­யா­வில் கார்­க­ளின் எண்­ணிக்கை 40, -45 கோடி­யாக உயர வாய்ப்­புள்­ளது. தற்­போது 7 கோடி கார்­கள் உள்­ளது. 2025-ம் ஆண்­டுக்­குள் உல­கின் 5-வது மிகப் பெரிய கன்ஸ்­யூ­மர் நாடாக இந்­தியா மாறும். வேக­மாக வளர்ச்சி அடை­யும் நாடு­க­ளில் இந்­தியா இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. எனவே, கார் பரா­ம­ரிப்பு என்­பது அவ­சி­ய­மான ஒன்­றாக மாறி உள்­ளது.

தேவை­யான இயந்­தி­ரம்: பிரஷ், ஜெட் ஸ்பிரே, உலர்த்­தும் இயந்­தி­ரம், சென்­சர், கன்ட்­ரோ­லர், பம்ப், டைர்வ்ஸ், நாசில் போன்­றவை. தொழில் வாய்ப்பு: வளர்ச்சி அடை­யும் அனைத்­துப் பகு­தி­க­ளும். வரிக்­குப் பின் வரு­மா­னம்: 30 சத­வீ­தம் கிடைக்­கும். கவ­ன­மாக செய்­தால் கூடு­தல் லாபம்!’’ குறிப்­பாக ஒரே­நே­ரத்­தில் அதி­க­பட்­ச­மாக ஐந்து கார்­களை வாஷ் செய்­ய­வும், மூன்று கார்­களை பார்க் செய்­யும் அள­வுக்­குக் கட்­டா­யம் இடம் தேவை. மேலும், இந்­தத் தொழி­லில் தொடர் செல­வு­கள் என்­பது கிடை­யாது. அதா­வது, பணி­யா­ளர்­க­ளின் சம்­ப­ளம் மற்­றும் வாஷிங் செய்­வ­தற்கு தேவை­யான பொருட்­க­ளைத் தவிர்த்து வேறு செலவு கிடை­யாது.  மழைக் காலத்­தில் மட்­டும் கார்­க­ளின் எண்­ணிக்கை குறைய வாய்ப்­புள்­ளது. அதிக லாபம் தரக்­கூ­டிய தொழில் இது.  வாடிக்­கை­யா­ள­ரின் தேவை என்ன என்­ப­தைத் தெரிந்து சேவை­செய்­வது முக்­கி­யம்.

4 பயோ­மாஸ்/எரி­பொ­ருள்

தயா­ரிப்பு!

தொழில் துறை வேக­மாக வளர்ச்சி அடைந்து வரு­வ­தால், இந்த பயோ­மாஸ் பொருட்­க­ளின் தேவை அதி­க­ரித்­துள்­ளது. முக்­கி­ய­மாக டீ, புகை­யிலை, லெதர், டெக்ஸ்­டைல்ஸ் தொழிற்­சா­லை­க­ளில் இதன் பயன்­பாடு அதி­க­மாக உள்­ளது. மேலும், நிலக்­க­ரி­யின் விலை அதி­கம் என்­ப­தால், பாய்­லர் உள்ள தொழிற்­சா­லை­கள் அனைத்­தி­லும் இதன் பயன்­பாடு அதி­கம். அதோடு அதி­லி­ருந்து கிடைக்­கும் வெப்­ப­மும் குறை­வா­ன­தா­கவே இருக்­கும். இத­னால் இந்­த கழி­வு­க­ளில் இருந்து தயா­ரிக்­கப்­ப­டும் எரி­பொ­ரு­ளுக்கு அதிக வர­வேற்பு உள்­ளது.

தேவை­யான இயந்­தி­ரம்: கழி­வு­களை அரைக்­கும் இயந்­தி­ரம், ஜென­ரேட்­டர் அவ­சி­யம் தேவை. தொழில் வாய்ப்பு: தொழிற்­சா­லை­கள் அதி­கம் உள்ள இடம். டீ தயா­ரிப்பு தொழிற்­சாலை உள்ள ஊட்­டி­யில் அதிக வர­வேற்பு உள்ள தொழில் இது. இதில் மட்­டும் வரு­டத்­துக்கு 50 ஆயி­ரம் டன் கழிவு தேவைப்­ப­டு­கி­றது. வரிக்­குப் பின் வரு­மா­னம்: 10 சத­வீ­தம் கிடைக்­கும். எப்­போ­தும்  வர­வேற்பு! “பயோ­மாஸ் எரி­பொ­ரு­ளின் தேவை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கி­றது. காற்று மாசு­ப­டாத வகை­யில் எரி­பொ­ருள் பயன்­ப­டுத்­தி­னால்­தான் தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு லைசென்ஸ் கிடைக்­கும். இத­னால் இதன் தேவை எப்­போ­தும் குறை­யாது. வீணா­கும் பொரு­ளி­லி­ருந்து இன்­னொரு பொருளை தயா­ரிக்­கும்­போது 5 சத­வீ­தம் வரி கட்ட வேண்­டும். இது ஒன்­று­தான் இதில் உள்ள ஒரு நெகட்­டிவ் அம்­சம். தொடர்ந்து நிறு­வ­னங்­க­ளு­டன் பேசி தர­மான எரி­பொ­ருளை வழங்­கு­வதே தொழில் வெற்­றிக்கு முக்­கி­ய­மா­னது.

5 டிஷ்யூ பேப்­பர்!

சுத்­த­மாக இருக்க வேண்­டும் என்­பது

இன்­றைக்கு எல்­லோ­ரது எதிர்­பார்ப்பு. இத­னால் மட்­டும்­தான் நோய்­க­ளின் தாக்­கம் குறை­வாக இருக்­கும் என­வும் நம்­பு­கி­றார்­கள். மேலும், ஒரு­முறை பயன்­ப­டுத்­தி­விட்டு தூக்கி எறி­யும் யூஸ் அண்ட் த்ரோ கலாச்­சா­ரம் நம் நாட்­டில் வேக­மாக அதி­க­ரித்து வரு­கி­றது. இத­னால் மனி­த­னின் அன்­றா­டத் தேவை­க­ளுக்கு டிஷ்யூ பேப்­பர் அவ­சி­ய­மாக உள்­ளது. மேலும், ஓட்­டல், மருத்­து­வ­மனை, சுற்­றுலா ஸ்தலங்­கள், வீடு­கள், நிறு­வ­னங்­க­ளில் இதன் தேவை அதி­க­மாக உள்­ளது. டிஷ்யூ பேப்­பர் தொழி­லின்  வளர்ச்சி, வரு­கிற 2021 ஆண்­டுக்­குள் சரா­ச­ரி­யாக 15 சத­வி­கி­த­மாக இருக்­கும்.

தேவை­யான இயந்­தி­ரம்: பல­வி­த­மான டிஷ்யூ பேப்­பர்­கள் சந்­தை­யில் தேவைப்­ப­டு­கி­றது. எனவே, ஒவ்­வொரு வித­மான டிஷ்யூ பேப்­ப­ரைத் தயா­ரிக்க தனித்­தனி மெஷின் உள்­ளது. 27 இன்ட்27 செ.மீ அள­வுள்ள டிஷ்யூ பேப்­பர் தயா­ரிப்­ப­தற்கு டூ கலர் பிரின்­டிங் மெஷின், எம்­போ­ஸிங் மெஷின், ரோலர் ஆகி­யவை தேவை. இந்த இயந்­தி­ரங்­கள் கோவை, டில்லி, பெங்­க­ளூரு ஆகிய இடங்­க­ளில் கிடைக்­கி­றது.

தொழில் வாய்ப்பு: ஓட்­டல், மருத்­து­வ­மனை, பியூட்டி பார்­லர்­கள், வீடு­கள் ஆகிய இடங்­க­ளில் வாய்ப்பு அதி­கம் உள்­ளது. வரிக்­குப் பின் வரு­மா­னம்: 10 சத­வீ­தம்  கிடைக்­கும். நேரடி மார்க்­கெட்... கூடு­தல் லாபம்!  டிஷ்யூ பேப்­ப­ரின் தேவை அதி­கம் உள்­ள­தால், உற்­பத்­தி­யின் அளவு அதி­க­ரித்­துக்­கொண்டே போகி­றது. அனைத்து வகை­யான டிஷ்யூ பேப்­பர் தயா­ரிக்­கும் இயந்­தி­ரம் வைத்­தி­ருந்­தால் அதிக லாபம் பார்க்க முடி­யும். மேலும், நேரடி மார்க்­கெட் செய்­தால் கூடு­தல் லாபம் கிடைக்­கும். டிரே­டர்­க­ளி­டம் பேப்­பரை விற்­கும்­போது மார்­ஜின் குறைய வாய்ப்­புள்­ளது. டிஷ்யூ பேப்­ப­ரின் தேவைக்­கேற்ப சரி­யான தரத்­தில் பேப்­பர் இருந்­தால், வாடிக்கை யாளர்­களை எளி­தில் தக்­க­வைத்­துக் கொள்ள முடி­யும். தொழில் துவங்­கும் போதே பெரிய அள­வில் யூனிட் போடு­வது நல்­லது. அப்­போ­து­தான் உற்­பத்தி செலவு குறை­யும். அத­னால் குறைந்த விலை­யில் டிஷ்யூ பேப்­பரை விற்க முடி­யும். அதி­கப் போட்டி உள்ள தொழில். இதை வெளி­நா­டு­க­ளுக்­கும் ஏற்­று­மதி செய்ய அதிக வாய்ப்­புள்­ளது.”

குறிப்பு: மேற்­கூ­றிய அனைத்து தொழில்­க­ளுக்­கும் என்­இஇ என்ற திட்­டத்­தின் கீழ் இயந்­தி­ரம் வாங்­கும் மதிப்­பில் 25 சத­வீ­தம் மானி­யம் கிடைக்­கும்.