டி.வி.பேட்டி: கல்யாணத்துக்கு அவசரமில்லை!

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020

*    “கோபுரங்கள்  சாய்வதில்லை”யில்  (ஜெயா  டிவி)  ஹீரோயினாக  அன்ஷு  ரெட்டி  நடித்துக்கொண்டிருக்கிறார்.

*    ’அனு,’ ’அனுஷா  ரெட்டி’ ஆகியவை அவரு டைய  மற்ற பெயர்கள்.

*    தெலங்கானாவிலுள்ள வரங்கல்  அவரு டைய  பூர்வீகம்.

*    ஜனவரி  29, 1992ல்  பிறந்தார்.

*    தற்போது  ஐதராபாத்தில்  வசித்து  வருகிறார்.

*    5  அடி  5  அங்குல  உயரம்  உடையவர்.  

*    எடை  -  55  கிலோ.

*    அமுல்யா  ரெட்டி  என  ஓர்  அக்காளும்,  வினய்  ரெட்டி  என ஒரு  தம்பியும்  அவருக்கு  இருக்கிறார்கள்.   அமுல்யா  ஒரு  பிரபல  தெலுங்கு  நடிகை.

*    தாய்மொழி  தெலுங்கு  தவிர  தமிழ்,  ஆங்கிலம் ஆகிய  மொழிகள்  தெரியும்.

*    தெலுங்கு  நடிகர்  பவன்  கல்யாணின்  தீவிர  ரசிகை.

*    இன்னும்  திருமணமாகவில்லை.  “இன்னும்  நான்  எவ்வளவோ  சாதிக்க வேண்டியிருக்கிறது.  அதற்குள்  கல்யாணத்துக்கு  என்ன  அவசரம்?  நான் கல்யாணம்  பண்ணுவதற்கு  சில  வருடங்கள்  ஆகும்!”  என்கிறார்  பரபரப்புடன்.

*    “மேகமாலா”   (2014)  தெலுங்கு  சீரியலில்   முதன்முதலில்   நடித்தார்.

*    அதன்பின்,  “ஆஷ்டா  சம்மா,”  “கதா  லோ  ராஜகுமாரி,”  “கோகுலம்லோ  சீதா,”  “இத்தாரு  அம்மாயிலு”  ஆகிய  தெலுங்கு  சீரியல்களில்  நடித்திருக் கிறார்.

*    யோகா,  தியானம்  ஆகிய வற்றில்  மிகுந்த  ஆர்வம்  உண்டு.

*    அசைவ உணவை  விரும்பி சாப்பிடு வார்.  குறிப்பாக,  தாய்லாந்து உணவுக்கு அவர் ஓர் அடிமை என்றே  சொல்லலாம்.

*    சற்று  படபடப்பானவர்  ஆனால்  தைரியமானவர்.  

* நேர்மையாக  இருப்பது  அவரிட முள்ள பாசிட்டிவான விஷயம்.

* ஜிம்முக்கு போவார்,  ஜாக்கிங்  செய்வார்.

* முலாம் பழம், ஜாவா பிளம் ஆகிய பழங்கள் ரொம்ப பிடித்தமானவை.

*    டார்க் பிரவுன் ( உதாரணம்: குதிரை கலர்),  பிலிப்பைன் தங்கம் ஆகியவை அவருக்கு பிடித்த கலர்கள்.

* ஹிப் ஹாப் இசையை ரசித்து  கேட்பார்.

* சமையல் பண்ணுவது அவருடைய மெயின்  ஹாபி.

     இருளாண்டி