திருமணம் நடக்குமா, நடக்காதா? – ஜோதிடர் டாக்டர் என். ஞானரதம்

பதிவு செய்த நாள் : 16 பிப்ரவரி 2020

சென்ற இதழ் தொடர்ச்சி...

திருமணம் நடப்பதற்கான கிரக அமைப்பு?

கீழ்கண்ட உதாரண ஜாதக கட்டங்களில் கிரக அமைப்பு எப்படி  இருந்தால் திருமணம் கைகூடும் என்பதை பார்க்கலாம்.

உதாரண ஜாதகம் 1

மேற்கண்ட உதாரண ஜாதகம் 1ல் இந்த ஜாத கருக்கு  லக்னத்தில் குருவும் களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் நன்கு வலு பெற்று ஆட்சி பலத்துடன் குரு பார்வையும் கிடைத்துள்ளது. மேலும் களத்திர ஸ்தானாதிபதியும் சுக்கிரனே என்பதால் திருமணம் நிச்சயம் உண்டு என்பதை அறியலாம்.

உதாரண ஜாதகம் 2

மேற்கண்ட உதாரண ஜாதகம் 2ல் இந்த ஜாத கருக்கு லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் நன்கு வலுபெற்று ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். அவருக்கு குரு பார்வையும் கிடைத்துள்ளது. மேலும் களத்திரகாரகன் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் லக்ன கேந்திரத்தில் அமர்ந்திருப்பது மேலும் சிறப்பு. ஆதலால் நிச்சயம் திருமண ப்ராப்தம் உண்டு என்பதை அறியலாம்.

உதாரண ஜாதகம் 3

மேற்கண்ட உதாரண ஜாதகம் 3ல் இந்த ஜாத கருக்கு  லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளார். மேலும், அவரே களத்திர ஸ்தானாதிபதியாகவும் இருந்து, நன்கு வலு பெற்று ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். அவருக்கு உச்ச பலமுள்ள குரு பார்வையும் கிடைத்துள்ளது. ஆதலால் நிச்சயம் திருமண ப்ராப்தம் உண்டு என்பதை அறியலாம்.

களத்திர ஸ்தானத்தைக் கொண்டு மட்டும் திருமணம் நடக்கும் என்றும் கணக்கிட முடியாது. அதன் அதிபதி எங்கே இருக்கின்றார் என்பதையும் பார்க்க  வேண்டும். திருமண தோஷம் ஏதேனும் உள்ளதா மற்றும் பாப கிரகங்களின் நிலை எப்படி உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். அவர்களின் ஆயுள் பலம் எப்படி உள்ளது என்பதை யும் பார்க்க வேண்டும்.

மேலும், மற்ற கிரகங்களின் அமைப்பையும் மற்றும் அவரவர் இருக்கும் நட்சத்திர சாரம் மற்றும் நவாம்சம் போன்ற அமைப்பையும் என்பதையும் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுத்தான் அவர்களுக்கு திருமண யோகம் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும். மேலோட்டமாக பார்த்து விட்டு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

(முற்றும்)