கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 217

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2020

பிரஷாந்த் கிஷோரும் இந்தி ‘பராசக்தி’யும்...

பிரா­ம­ண­ரும் பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வ­ரு­மான பிர­சாந்த் கிஷோர் தலை­மை­யில் இயங்­கும் ஐ-பேக் நிறு­னத்தை 2021ல் வர­வி­ருக்­கும் சட்­ட­மன்ற பொதுத் தேர்­தல் பிர­சா­ரத்­திற்­கா­கத்  திரா­விட முன்­னேற்ற கழ­கம் நிய­மித்­தி­ருக்­கி­றது என்ற செய்தி திட்­ட­வட்­ட­மாக சில நாட்­க­ளுக்கு முன் வந்­தது.

சில மாதங்­க­ளா­கவே இந்த விஷ­யம் செய்­தி­க­ளில் வந்­து­கொண்­டி­ருந்­த­து­தான். கடந்த டிசம்­பர் மாதத்­தின் தொடக்­கத்­தில் கூட, ‘பிர­சாந்த் கிஷோ­ரின் புதிய அசைன்­மென்ட் -- 2021ல் வரப்­போ­கும் சட்­ட­சபை தேர்­த­லில் தி.மு.கவை வெற்­றிப் பெறச் செய்­வது’ என்ற தலைப்­புச் செய்தி வந்­தது.

அப்­பொ­ழுதே கூட ஒரு அர­சி­யல் அதிர்­வேட்­டுப் பேர்­வழி, தி.மு.க. கார்­ப­ரேட் நிறு­வ­னம் போல் செயல்­ப­டு­கி­றது என்று கூறி,        அந்­தக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­வந்­தார். அவர் வெளி­வந்­த­போ­து­தான் தெரிந்­தது, அவர் அந்த  கட்­சி­யில் இருந்­தார் என்று!

 தமிழ்­நாட்­டைப் பொறுத்த வரை பிர­சாந்த் கிஷோ­ரின் பெயர் முதன்­மு­த­லில் அ.இ.அ.தி.மு.க. மற்­றும் நடி­கர் கமல்­ஹா­ச­னின் ‘மக்­கள் நீதி மய்­யம்’ ஆகி­ய­வற்­று­டன் இணைத்­துப் பேசப்­பட்­டது,

இரண்­டுக்­குமே அவர் துணை­போ­வார் என்று!

வேட்டை நாய்­க­ளு­டன் துரத்­தும் போதே எப்­படி முயல்­க­ளு­ட­னும் தோள் சேர்த்து ஓட முடி­யும் என்று யாரா­வது கேட்­டு­வி­டப்­போ­கி­றார்­கள் என்று,  ‘இது டூயல் ஆப்­போர்ச்­சி­யூ­னிட்டி’,   இரட்டை வாய்ப்பு, என்­றது, இந்த செய்­தி­யைக் கிளப்­பி­விட்ட ஆங்­கில தின­சரி!

 கல்­லூ­ரிப்  பரீட்­சை­யில் கோட்­டை­வி­டும் மாண­வர்­கள், மார்ச் போனால் என்ன, செப்­டம்­பர் இருக்­கவே இருக்­கி­றது என்­பார்­கள்.  செப்­டம்­ப­ரில்

பிர­சாந்த் கிஷோர் ரஜி­னி­காந்­து­டன் பேசிக்­கொண்­டி­ருந்­தார்!  

ஆனால் இந்த கடை­வி­ரிப்­பும் கொள்­வார் இல்லை என்­றா­ன­தும், கடை­சி­யில், கடந்த எட்டு வரு­டங்­க­ளுக்கு மேல் மத்­திய மற்­றும் மாநில ஆட்­சிக் கட்­டி­லின் சுகம் காணாத தி.மு.க. நவீன சாணக்­கி­ய­ரின் வசம் ஆயிற்று!

பிப்­ர­வரி 2ம் தேதி, தி.மு.க. தலை­வர் ஸ்டாலின் தன்­னு­டைய டுவிட்­டர் பக்­கத்­தில், ஆங்­கி­லத்­தில் மட்­டும் இப்­படி  டுவீட் செய்­தார் : ‘‘ஹேப்பி டு ஷேர் தட் மெனி பிரைட் அன்ட் லைட்­மைன்­டட் யங் புரோ­ப­ஷ­னல்ஸ் ஆப் தாமிழ்­நாடு ஆர் ஜாய்­னிங் அஸ் அன்­டர் த பேனர் ஆப் ஆட்­இண்­டி­யன் பி.ஏ.சி. டூ ஒர்க் வித் அஸ் ஆன் அவர் 2021 எலக் ஷன் அண்ட் ஹெல்ப் ஷேப் அவர் பிளான்ஸ் டு ரெஸ்­டோர் டீ.என். டு இட்ஸ் பார்­மார் குளோரி’’ .  

ஆங்­கில ஜோட­னை­யு­டன் பல விஷ­யங்­களை மறைக்­கிற வகை­யில் இந்த செய்தி தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பிர­சாந்த் கிஷோ­ரின் பெயர் கூட இதில் இல்லை....அவ­ரு­டைய நிறு­வ­ன­மான ‘ஐபேக்’ மட்­டும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. அது­வும் ஏதோ தமிழ்­நாட்டு இளை­ஞ­ரு­டன் மட்­டும் இணைந்­தி­ருப்­ப­து­போல் ஒரு பிம்­பம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. புதிய பிசி­னஸ் கூட்­டா­ளி­யு­ட­னான அர­சி­யல் பிர­சா­ரத்­தின் திரை­ம­றைவு வேலை­கள் இந்த அறி­விப்­பு­டன் தொடங்கி விட்­ட­தாக நாம் கொள்­ள­லாம்.

இந்த அறி­விப்பு, இது­வரை பல்­வேறு வகை­க­ளில் தி.மு.கவி­ட­மி­ருந்து வளம் பெற்று, திரா­விட பிரச்­சா­ரங்­களை மேல் எடுத்­துச் சென்­று­கொண்­டி­ருந்த நபர்­க­ளுக்­கும் அவர்­கள் நடத்தி வந்த அமைப்­பு­க­ளுக்­கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது!  

எழு­பது வருட சரித்­தி­ரம் கொண்ட ஒரு இயக்­கத்­திற்கு பிர­சாந்த் கிஷோரை நிய­மிக்­க­வேண்­டிய அள­வுக்கு அவ­சி­யம் என்ன என்ற அங்­க­லாய்ப்பு, விசும்­ப­லும் பெரு­மூச்­சு­மா­கப் படர்ந்­தி­ருக்­கி­றது.  வடி­கட்­டிய பெரி­யா­ரிய கருத்­துக்­க­ளில் ஊன்­றி­யி­ருப்­ப­வர்­க­ளின் பார்வை, பிரா­ம­ணர், -பிரா­ம­ணர் அல்­லா­தார், ஆரி­யம் -திரா­வி­டம், வட­மொழி-, தமிழ் மொழி, தெற்கு-, வடக்கு, இந்து –- இந்து அல்­லா­தார் என்­றெல்­லாம் இரு­ம­தங்­க­ளில்  அகப்­பட்­டுக்­கொண்ட பார்வை. அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு பிர­சாந்த் கிஷோர் ஒரு பிர­ம­ண­ரா­க­வும் பீகா­ரி­யா­க­வும் மட்­டும் தெரி­கி­றார்.

ஆட்­சிக்­கட்­டி­லில் அம­ரத்­து­டிக்­கும் ஸ்டாலி­னுக்­கும் அவ­ரு­டைய நெருங்­கிய ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் பிர­சாந்த் கிஷோ­ரின் சமூக பின்­ன­ணி­க­ளைப் பற்றி கவலை இல்லை. அரி­ய­ணை­யைத் தங்­கள் வச­மாக்­கும் வித்­தை­களை அவர் தங்­கள் சார்­பில் பயன்­ப­டுத்­து­வார் என்­ப­து­தான் அவர்­க­ளின் எதிர்­பார்ப்பு. அதற்­காக ஆகும் சில பல கோடி­க­ளின் செலவு அவர்­க­ளுக்கு ஜுஜுபி.

அது­மட்­டு­மல்­லா­மல்,  பிர­சாந்த் கிஷோர் அப்­படி என்ன பெரிய பிரா­ம­ணர்? தன்­னு­டைய தேர்­தல் தந்­தி­ரங்­க­ளை­யும் வியூ­கங்­க­ளை­யும் தனக்கு இடம் கொடுக்­கும் எவ­ருக்­கும்    பயன்­ப­டுத்­தத் தயா­ராக இருப்­ப­வர்­தானே? இது ஒரு வியா­பா­ரி­யின் போக்­கா­கத்­தான் இருக்­கி­றது. மோடி­யின் 2014ம் ஆண்டு தேர்­தல் உத்­தி­க­ளில் வெற்­றி­க­ர­மா­கப் பங்­கெ­டுத்­த­பின், நிதீஷ் குமா­ரின் கட்­சி­யில் சேர்ந்து நம்­பர் 2 என்­ப­து­போல் வளர்ந்­த­வர்,  ‘கொரோனா வைரஸ்’ என்று பெய­ரி­டப்­பட்டு கல்தா கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்! ெஜகன், கேஜ்­ரி­வால், மம்தா, இப்­போது தி.மு.க. என்று தன்­னு­டைய வலை­களை நெடுக விரித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். இது­வரை பிர­சாந்த் கிஷோ­ரின் தேர்­தல் வியா­பா­ரங்­கள் வெற்­றி­க­ர­மான பரி­ணா­மங்­க­ளைக் கொடுத்­தி­ருக்­கின்­றன என்­ப­தால், வியா­பா­ரம் சூடா­கத்­தான் இருக்­கி­றது!

குறு­கிய பார்­வை­கள், துவே­ஷத்தை முன்­னி­றுத்­தும் சித்­தாந்­தங்­கள், சாதீய கண்­ணோட்­டம் இவை மட்­டுமே முன்­னுக்கு நின்ற காலங்­கள் கடந்­து­போய்­விட்­டன. எம்.ஜி.ஆரை முத­லில் சந்­தித்­த­போது, அறி­ஞர் அண்ணா அவரை ஒரு ‘ஆரி­யரோ’ , அதா­வது பிரா­ம­ணரோ என்று நினைத்து விட்­டா­ராம்! அண்ணா பயந்­த­தைப்­போல் எம்.ஜி.ஆர்., இருந்­தி­ருந்­தால், அவ­ரு­டைய ‘இத­யக்­க­னி’­யா­கக் கரு­தப்­ப­டும் சந்­தர்ப்­பம் இல்­லா­மல் போயி­ருக்­க­லாம்!

அதே­போல், தி.க. மாநாட்­டில் மேடை ஏற்­றப்­பட்ட அண்­ணா­து­ரை­யின்  ‘சிவாஜி கண்ட இந்து சாம்­ராஜ்­ஜி­யம்’  நாட­கத்­தில் நடித்த வி.சி. கணே­சன், ‘சிவாஜி’ கணே­சன் என்று ஈ.வே.ரா பெரி­யா­ரால் போற்­றப்­பட்­டார். இதி­லி­ருந்து சிவாஜி கணே­சன் மீது அசைக்க முடி­யாத நம்­பிக்கை வைத்­தார் கடைந்­தெ­டுத்த பெரி­யா­ரிஸ்­டான பி.ஏ. பெரு­மாள் முத­லி­யார்.  ‘பரா­சக்தி’ படத்தை அவர் ஏவி.எம். ஸ்டூடி­யோ­வின் துணை­யு­டன் எடுத்­த­போது, சிவா­ஜி­தான் ‘பரா­சக்­தி’­யின் முக்­கிய வேடத்­தில் நடிக்­க­வேண்­டும் என்று அவர் உறு­தி­யாக இருந்­த­தால்­தான், சிவா­ஜி­யால் ‘பரா­சக்­தி’­யில் வெற்­றி­க­ர­மாக நடித்து முடிக்க முடிந்­தது.  பெரு­மாள் முத­லி­யா­ரைப் போல சிவா­ஜி­யும் அப்­போது பெரி­யார் பாச­றை­யில் இருந்­தார் என்­பது முன்­ன­வ­ரின் ஆத­ரவை இன்­னும் கூட கூட்­டி­யது.

‘என்­னு­டைய முத­லாளி’, ‘என்­னு­டைய தெய்­வம்’ என்று பெரு­மாள் முத­லி­யாரை சிவாஜி அழைப்­பது வழக்­க­மாக இருந்­தது.  பெரு­மாள் முத­லி­யா­ரைப் பொறுத்­த­வரை அவ­ருக்­குத் தெய்வ நம்­பிக்கை இல்லை என்­கி­றார்­கள். பெரி­யா­ரைத்­தான் தெய்­வ­மாக நினைத்­தி­ருக்­க­லாம்.

வேலூர் மாவட்­டத்­தில் உள்ள பூட்­டுத்­தாக்கு என்ற கிரா­மத்தை சொந்த ஊரா­கக் கொண்­ட­வர் பெரு­மாள் முத­லி­யார். நில­பு­லங்­கள் உள்ள குடும்­பத்­தில் பிறந்­த­வர், நெச­வுத்­தொ­ழில், ஜவுளி வியா­பா­ரம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து சினிமா விநி­யோ­கத்­திற்கு வந்­தார்.   ‘பரா­சக்­தி’­யின் வாயி­லாக தயா­ரிப்­பா­ளர் ஆனார். இந்­தத் படம் ஏற்­ப­டுத்­திய தாக்­கம் எல்­லோ­ருக்­கும் தெரிந்­த­து­தான். வச­னம் எழு­திய மு.கரு­ணா­நி­தி­யை­யும் கதா­நா­ய­க­னாக நடித்த சிவாஜி கணே­ச­னை­யும்

உச்­சா­ணிக்­கொம்­பில் தூக்கி வைத்­தது ‘பரா­சக்­தி’­யின்  வெற்றி. பெரு­மாள் முத­லி­யா­ரும் தயா­ரிப்­பா­ள­ராக முன்­னே­றி­ னார்.

திரை உல­கத்தை பல வரு­டங்­க­ளா­கப் புறக்­க­ணித்து விட்டு, தி.க. கொள்­கை­களை தன் பாணி­யில் நாட­கங்­க­ளின் வாயி­லாக பரப்­பிக்­கொண்­டி­ருந்த எம்.ஆர்.ராதாவை வைத்து ‘ரத்­தக் கண்­ணீர்’ படம் தயா­ரித்­தார் பெரு­மாள் முத­லி­யார் (1954). ‘பரா­சக்தி’  விஷ­யத்­தில் வெற்றி நாட­கம் வெற்­றி­க­ர­மான பட­மா­கப் உரு­வா­ன­தைப்­போல, ராதா­வின் பிர­பல ‘ரத்­தக் கண்­ணீர்’ நாட­க­மும் திரைப்­ப­ட­மாக வெற்­றி­யைக் கண்­டது.

விநி­யோ­கஸ்­த­ரா­கப் படு பிசி­யாக இருந்த பெரு­மாள் முத­லி­யார், சிவாஜி நடித்த   ‘பெற்ற மனம்’  படத்தை  வெகு தாம­த­மாக, 1960ம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் வெளி­யிட்­டார்.  படம் தோல்வி அடைந்­தது.

கடை­சி­யாக அவர் தயா­ரித்த பட­மான, ‘தங்­க­துரை’, நவம்­பர் 1972ல் வந்­தது. திரு­வா­ரூர் தங்­க­த­ராசு வச­னம் எழுத, ஏ. காசி­லிங்­கம் இயக்­கிய ‘தங்­க­து­ரை’­யில் பிரா­ம­ணர்­கள் கேலிக்­கும் கிண்­ட­லுக்­கும் உரி­ய­வர்­க­ளாக சித்­த­ரிக்­கப்­பட்­டார்­கள். ‘‘எம­னுக்கு என்ன வாக­னம்னு கேளுங்க, தம்பி எரு­மைக்­க­டான்னு பட்­டு­பட்­டுன்னு பதில் சொல்­லு­வான்,’’ என்­ப­து­போன்ற திரா­விட வச­னங்­கள், மர­புச் செல்­வங்­களை எள்ளி நகை­யா­டின. பார­தி­தா­சன்­தான் தமி­ழின் தலை­சி­றந்த கவி­ஞர் என்று கூறிக்­கொண்டு வகுப்­பில் குமு­றும் ஒரு  பையன், அதை மறுக்­கும் இன்­னொரு தறு­தலை மாண­வ­னைத் தாக்க முற்­ப­டு­கி­றான்.

மைதா­னத்­தில் கால்­பந்து விளை­யா­டு­கிற பையன்­கள், ஆற்­றுக்கு வரும் பிரா­ம­ணர்­களை அடித்­துத் துன்­பு­றுத்­து­வ­தாக ஒரு பாடல் காட்­சியே படத்­தில் உள்­ளது. கண்­ண­தா­சன் எழுதி, எம்.எஸ்.வி. இசை­ய­மைப்­பில்  எல்.ஆர். ஈஸ்­வரி பாடிய இந்த பாடல், ‘ஊருக்­குள் சாரு, உலவ வந்­தாரு, உல­கத்­தில் இவ­ருக்கு என்ன பேரு’ என்று தொடங்­கு­கி­றது.

‘‘சந்­திர மண்­ட­லம் போகிற உல­கத்­தில்

தந்­திர மண்­ட­லம் போவாரு’’ என்று செல்­லும் இந்­தப் பாடல், பிரா­ம­ணர்­களை தந்­தி­ர­மிக்­க­வர்­க­ளாக சித்­த­ரிக்­கி­றது. இது­போன்ற பல அம்­சங்­க­ளு­டன் விளங்­கி­யது, பெரு­மாள் முத­லி­யார் திரா­வி­டப் பிர­சா­ர­மா­கத் தயா­ரித்த ‘தங்­க­துரை’.

இந்த நிலை­யில் ‘தங்­க­துரை’ காலத்­தி­லி­ருந்து சுமார் ஒரு இரு­பது வரு­டங்­க­ளுக்­குப் பின்னே செல்­வோம்.

‘பரா­சக்தி’ வந்து சக்­கைப்­போடு போட்­ட­வு­டன், ஏ.வி.மெய்­யப்­பச் செட்­டி­யா­ருக்கு ஒரு எண்­ணம். இந்­தப் படத்தை  இந்­தி­யில் எடுத்­தால் வர­வேற்பு எப்­படி இருக்­கும் என்று அவர் சிந்­தித்­தார். யாரி­டம் கேட்­பது? ரவீந்­தி­ர­நாத் தாகூ­ரின் சாந்­தி­நி­கே­த­னத்­தில் ஆசி­ரி­ய­ராக இருந்த மோகன்­லால் வாஜ்­பாய் நினை­வுக்கு வந்­தார்.  இந்த வாஜ்­பாய், ‘ஹம்­ராஹி’ (1945), ‘நமூனா’ (1949) உட்­பட சில படங்­க­ளுக்கு வச­னம் எழு­தி­யி­ருந்­தார். ‘பரா­சக்தி’  பட ரீல்­கள் சாந்­தி­நி­கே­த­னத்தை அடைந்­தன.  அங்கே இருந்த ஒரு திரை­ய­ரங்­கில் ‘பரா­சக்­தி’யை பாஜ்­பாய்  பார்த்­தார். படக்­க­தை­யும் வச­னங்­க­ளும் அவ­ருக்கு விளக்­கப்­பட்­டன.

மோகன் பாஜ்­பாய் அன்­றைய இந்­தித் திரைத்­து­றையை அறிந்­த­வர் என்­ப­து­டன், நல்ல படிப்­பாளி, ஆராய்ச்­சி­யா­ளர். ஆங்­கி­லம், இந்தி, வங்­கா­ளம் ஆகிய மொழி­க­ளில் ஆழ­மான புரி­தல் உள்­ள­வர், கவி­ஞர். ‘பரா­சக்­தி’யை பார்த்த பிறகு, அதை இந்­தி­யில் எடுக்க முடி­யும் என்று நம்­பி­னார். அப்­ப­டி­யா­னால் சென்னை வாருங்­கள் என்று அவர் அழைத்து வரப்­பட்­டார்.

சென்­னை­யில் ஏவி.எம்.ஸ்டூடி­யோ­வில் ஒரு சந்­திப்பு. முக்­கி­ய­மாக ஏ.வி.மெய்­யப்ப செட்­டி­யா­ரும், பெரு­மாள் முத­லி­யா­ரும் இருந்­தார்­கள். செட்­டி­யா­ருக்கு வேண்­டிய இன்­னும் சில­ரும் இருந்­தார்­கள். இந்­தி­யில் ‘பரா­சக்­தி’யை எடுத்­தால் படம் வெற்றி அடை­யுமா? அடை­யும் என்­றால் எப்­படி? இந்தி ரசி­கர்­க­ளுக்­கான ரச­னைக்­கு­ரிய அம்­சங்­கள் எவை? இப்­ப­டிப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு விடை­ய­ளிக்­கும் வகை­யில் பாஜ்­பாய் பேசும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார்.

பாஜ்­பாய் அரு­மை­யா­கப் பேசி­னார். ‘பரா­சக்­தி’­யின் கதை அம்­சங்­களை தேசிய அள­வில் எப்­படி  கொண்டு செல்­ல­லாம் என்­ப­தைக் குறித்து அவர் யோசித்து வைத்­தி­ருந்த கருத்­துக்­க­ளை­யெல்­லாம் அடுக்­கி­னார். கேள்­வி­க­ளுக்­குத் தெளி­வாக பதில் அளித்­தார். பிறகு அவர்  ஓய்­வெ­டுக்­கச் சென்­றார்.

இதன் பிறகு, பெரு­மாள் முத­லி­யார் பக்­கம் ஏவி.எம். செட்­டி­யார் திரும்­பி­னார். ஏனென்­றால் அவர்­தான் அதைக் குறித்து முடிவு எடுக்க வேண்­டும்.

பெரு­மாள் முத­லி­யார் இந்த நிலை­யில் கேட்­டார், ‘இப்போ வந்து நம்­ம­கிட்ட பேசி­னாரே, அவர் பிரா­மினா?’ என்­றார்!

ஏவி.எம்­முக்கு இந்த கேள்வி புரி­ய­வில்லை. ஏனென்­றால் அவர் தி.க.காரர் இல்லை!

எப்­ப­டி­யும், பாஜ்­பாய் பிராம்­ம­ணர்­தான் என்ற தக­வல் பெரு­மாள் முத­லி­யா­ருக்­குக் கூறப்­பட்­டது.

அப்­ப­டி­யென்­றால் ‘பரா­சக்­தி’யை இந்­தி­யில் எல்­லாம் எடுக்­க­வேண்­டாம் என்று முடி­வா­கக் கூறி­விட்­டார் முத­லி­யார்!

இது 2020. பிர­சாந்த் கிஷோர் பிரா­ம­ணர் என்­றால் அவர் வேண்­டாம் என்று கூறு­கிற நிலை­யில்  ஸ்டாலின் இல்லை. தி.க.காரர்­க­ளும் இந்த முடிவை ஏற்க வேண்­டும் என்­றால், பயன்­ப­டுத்­தி­விட்­டுத் தூக்கி எறி­யப்­ப­ட­வேண்­டிய கரு­வேப்­பி­லை­தான் பிர­சாந்த் கிஷோர் என்று அவர்­க­ளுக்கு விளக்­க­லாம். என்ன, இந்த  கரு­வேப்­பி­லை­யின் விலை ரொம்ப அதி­கம், அவ்­வ­ள­வு­தான்!  

(தொட­ரும்)