துடுப்பால் நடக்கும் சுறாக்கள்!

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2020

இந்தோனேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், நான்கு புதிய வகை சுறாக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மீட்டருக்கும் குறைந்த நீளமே உள்ள இந்த சுறாக்கள், தங்கள் துடுப்புகளை கால்களைப் போல பயன்படுத்தி, கடலடி தரையில் வேகமாக நடக்கின்றன என்பதுதான் விந்தை. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், சுறா மீன் கூட்டத்திலிருந்து தனியாக வந்துவிட்ட இந்த சுறாக்கள், குறைவான ஆக்சிஜன் உள்ள ஆழமான பகுதிகளில் வாழப் பழகியிருக்கலாம் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தரையில் நடப்பதால், சிறிய இரைகளை திடீரென பாய்ந்து பிடிக்க வசதியாக இருப்பதால், அவை நீந்துவதைவிட, நடப்பது பயனுள்ளது என, அவை தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.