டி.வி. பேட்டி: பன்முகம் கொண்ட ஆதித்யா!

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2020

*    “ராசாத்தி”யில்  ஹீரோ ராஜதுரை பாண்டியனாக நடிப்பவர், புதுமுகம் ஆதித்யா.

*    அவர் தமிழ் சீரியலுக்கு மட்டும்தான் புதுசு.

*    அவருடைய முழு பெயர், பாலாதித்யா.

*    ஆந்திரா பூர்வீகம்.

*    மார்ச் 9,1979ல் ஆந்திரா மாநிலத்திலுள்ள எளுருவில் பிறந்தார்.

*    ஒய்.எஸ். சங்கர், ஒய்.பி.டி.எஸ். கல்யாணி ஆகியோர் அவரது பெற்றோர்.

*    5 அடி 9 அங்குல உயரமும், 70 கிலோ எடையும் கொண்டவர்.

*    ஆரம்பத்தில், சென்னையிலுள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூலிலும், பின்பு ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ சத்யசாய் வித்யா விஹார் ஹை ஸ்கூலிலும் படித்தார்.

*    ஐதராபாத்திலுள்ள நலந்தா ஜூனியர் காலேஜில் பட்டப்படிப்பை முடித்தார்.

*    ஆகஸ்ட் 6, 2016ல்  மனைவி மானஸ லட்சுமியை கைப்பிடித்தார்.

*    பார்ப்பதற்கு ஒரு ‘பச்ச புள்ள’ மாதிரி தெரியும் அவர்,   நடிகர் – வசனகர்த்தா – பாடலாசிரியர் – டப்பிங் கலைஞர் – டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர்!

* குழந்தை நட்சத்திரமாக சுமார் 40 படங்களில் நடித்தவர் – தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்.

* ராஜேந்திர பிரசாத் டைரக்ட் செய்த “எடுரிண்டி மொகுடு பக்கிந்தி பெல்லம்” தெலுங்கு காமெடி படத்தில்தான் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

*    “அண்ணா,” “லிட்டில் சோல்ஜர்ஸ்” ஆகிய தெலுங்கு படங்களில் நடித்ததற்கு ‘சிறந்த குழந்தை நட்சத்திர’த்துக்கான இரண்டு ‘நந்தி’ அவார்டுகளை பெற்றவர்.

*    அவர் ஹீரோவாக நடித்த முதல் படம், “சந்திக்காடு” (2003) தெலுங்கு படம்.

*    மொத்தம் அவர் 10 தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவற்றில் “1940 லோ ஒக்க கிராமம்” படம் தேசிய விருதை வென்றது.

*    இ டிவியில் ஒளிபரப்பான ‘சாம்பியன்’  சீசன் 3 குழந்தைகளுக்கான குவிஸ் ஷோவை ஆதித்யா தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் மூலம், சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான நந்தி அவார்டு அவருக்கு கிடைத்தது.

* “ஷாம்பவி” தெலுங்கு சீரியலில் நடித்திருக்கிறார்.

* இப்போது “ராசாத்தி” தவிர “சுபத்ரா பரிணயம்” தெலுங்கு சீரியலிலும் நடித்துக் கொண் டிருக்கிறார்.

* சினிமா பார்ப்பது, மியூசிக் கேட்பது ஆதித்யா வின் ஹாபீஸ்.

– இருளாண்டி