திருமணம் நடக்குமா, நடக்காதா? – ஜோதிடர் டாக்டர் என். ஞானரதம்

பதிவு செய்த நாள் : 09 பிப்ரவரி 2020

ஒரு சில பெற்றோர் தங்கள் மகனுக்கோ அல்லது தங்கள் மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டும் என்று ஆவலுடன் வரன் பார்க்க ஆரம்பிக் கின்றார்கள். ஆனால், திருமணத் தாமதமாவதிலேயோ அல்லது பார்த்து பார்த்து சலித்து போய்விடுகிறார்கள். ஆதலால், ஒரு சில பெற்றோர் என் மகனுக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்று கண்ணீர் மல்க கேட்டுவிடுகிறார்கள்.  காரணம், அவர்கள் பல வருடங்களாக பல இடங்களில் அதாவது பல திருமண தகவல் நிலையங்களில் பதிவு செய்தும் தங்கள் மகளுக்கோ அல்லது தங்கள் மகனுக்கோ வரன் தேடியும் இன்னும் திருமணம் செட் ஆகவில்லை என்ற ஆதங்கத்தில்தான் இவ்வாறு மன சோர்வு அடைந்துவிடுகிறார்கள். இதற்காகவே இந்த கட்டுரையை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், அனைவருக்கும் மனிதனாக பிறந்தால் நிச்சயம் அவர்கள் திருமண வாழ்வில் நுழைந்து பல பிள்ளைகளை பெற்று வாழ்வார்கள் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கின்றார்கள். அதாவது சொந்த வீடு அமைவது நல்ல வேலை கிடைப்பது, நல்ல பிள்ளை அமைவது, உழைக்காமலேயே செல்வம் சேருவது போன்று எண்ணற்ற விஷயங்களுக்கு இந்த பிராப்தம் என்ற சொல்லை பலர் பயன் படுத்துவதை நாம் பார்க்கலாம். காரணம், பல பேருக்கு திருமணம் நடக்காமலேயே அப்படியே வாழ்ந்துவிடுகிறார்கள்.

இதனை நாம் பல குடும்பங்களில் பார்த்திருப் போம். பல நபர்கள் திருமணம் செய்யாமல் பொது வாழ்வில் ஈடுபட்டும் இன்னும் ஒரு சிலர் திருமணமாகாமலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவதும், சிறிய வாலிப வயதில் விபத்தில் சிக்கி இறந்து போவதையும் நாம் பார்க்கின்றோம். அப்படி யென்றால் அவர்கள் ஜாதகத்தில் திருமண யோகம் இல்லாததால்தான் இந்த நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆதலால், நாம் முதலில் அவர்கள் ஜாதகத்தில் திருமணம் நடக்குமா என்பதை நன்கு ஆராய்ந்துவிட்டு திருமண யோகம் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு திருமண ஆலோசனையை வழங்கலாம்.

முதலில் திருமணம் நடக்க வேண்டுமானால் நிச்சயம் அந்த ஜாதகத்தில் திருமணத்திற்குண்டான கிரக அமைப்புகள் இருந்தால்தான் அவர்களுக்கு திருமணம் நடக்கும். இல்லை யென்றால் நிச்சயம் நடக்காது. திருமண அமைப்புகளுக்கான கிரக அமைப்புகள் என்னவென்றால், அவர்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் நன்கு வலு பெறுதல் அவசியம். அதாவது ஆட்சியோ, உச்சமோ அல்லது கேந்திரத்திலோ அல்லது திரிகோண ஸ்தானத்திலோ இருந்து அந்த இடத்தை குரு பார்த்தல் மிக சிறப்பு. மேலும் குடும்ப ஸ்தானம் நன்கு வலுபெறுதல் அவசியம். அதாவது ஆட்சியோ உச்சமோ அல்லது கேந்திரத்திலோ அல்லது திரிகோண ஸ்தானத்திலோ இருந்து சுபர் பார்வை பெறுவது நல்லது. களத்திர காரகனான சுக்கிரன் நல்ல நிலையில் அதாவது தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அமர்ந்து அந்த ஸ்தானம் கேந்திர ஸ்தானமாகவோ அல்லது திரிகோண ஸ்தானமாகவோ இருந்து சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் நிச்சயம் அவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.                        (தொடரும்)