குழந்தையிடம் அத்துமீறுவோர் யார்.... – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 06 பிப்ரவரி 2020

குழந்­தை­க­ளி­டம் பாலி­யல் அத்­து­ மீ­றல்­களை நிகழ்த்­து­வோ­ருக்­கென சில குணா­தி­ச­யங்­களை ஆய்­வா­ளர்­கள் வகைப்­ப­டுத்­தி ­யுள்­ள­னர். அவற்­றைத் தெரிந்­து­கொள்­ள­ வேண்­டி­யது பெற்­றோ­ரின் கடமை. அப்­ப­டிப்­பட்ட நபர்­க­ளி­ட­மி­ருந்து குழந்­தை­களை வில­கி­யி­ருக்­கச் செய்­வது அவர்­க­ளின் பொறுப்பு. குழந்­தை­க­ளி­டம் பாலி­யல் வன்­மு­றை­களை நிகழ்த்­து­வோ­ரி­டம் பொது­வான சில குணங்­க­ளைப் பார்க்க முடி­யும். அவற்றை விவ­ரிக்­கி­றார், மன­நல ஆலோ­ச­கர் பிர­பா­க­ரன்.

பொறுப்­பெ­டுத்­துக் கொள்­ள­மு­டி­யாத தன்மை: குழந்­தை­யி­டம் பாலி­யல் வன்­மு­றையை நிகழ்த்­து­வ­தைக் கேள்­விப்­ப­டு­கிற நமக்­கெல்­லாம் ஒவ்­வொரு முறை­யும் நெஞ்­சம் பத­றும். அப்­ப­டிப்­பட்ட குற்­ற­வா­ளி­க­ ளுக்கோ தம் செய்­கை­கள் எத்­த­கை­யவை, அவை என்ன மாதி­ரி­யான பின் விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் எந்த அக்­க­றை­யும் கவ­லை­யும் இருக்­காது. அதா­வது தவ­று­க­ளில் துளி­யும் பொறுப்­பெ­டுத்­துக்­கொள்ள மாட்­டார்­கள். ‘என்­னு­டைய இள­மைக் காலம் மிக மோச­மா­ன­தாக இருந்­தி­ருக்­கி­றது, என் மனைவி என்­னை­விட்­டுச் சென்று விட்­டாள்’ என்­றெல்­லாம் கார­ணங்­களை அடுக்­கு­வார்­கள். ஆனால், தங்­கள் செய்­கை­க­ளுக்­குப் பொறுப்­பெ­டுத்­துக் கொள்­வ­தைத் தவிர்ப்­பார்­கள். ‘குழந்­தை­கள்­தாம் தம்­மு­டன் செக்ஸ் விளை­யாட்­டு­க­ளில் ஈடு­பட அழைத்­தார்­கள்’ என்று குழந்­தை­ க­ளையே குற்­ற­வா­ளி­கள் ஆகி­வி­டு­வார்­கள்.

சாடிஸ்ட்­டு­கள்: ஆங்­கி­லத்­தில் ‘சென்ஸ் ஆப் என்­டைட்­டில்­மென்ட்’ என்று சொல்­வார்­கள். குழந்­தை­க­ளி­டம் பாலி­யல் அத்­து­மீ­றல்­களை நிகழ்த்­து­ப­வர்­க­ளில் ஒரு பிரி­வி­னர், தாம் பெற்ற துன்­பத்­தைப் பிற­ரும் அனு­ப­விக்க வேண்­டும் என்­கிற எண்­ணம் கொண்­ட­வர்­கள். ‘எனக்­குச் சிறு­வ­ய­தில் இது­போன்ற அனு­ப­வங்­கள் நிகழ்ந்­தி­ருக்­

கின்­றன. அந்த ஆற்­றா­மை­யைத் தீர்த்­துக்­

­கொள்­ளும் வகை­யில்­தான் பிறர் கஷ்­டப்­ப­டும் அள­வுக்கு அதே­போன்ற செயல்­க­ளில் ஈடு­ப­டு­கி­றேன்’ என்று தம் செயலை

நியா­யப்­ப­டுத்­து­ வார்­கள்.

தன்­னம்­பிக்­கை­யற்ற தாழ்­வு­ம­னப்­பான்­மைக்­கா­ரர்­கள்: புறத்­தோற்­றத்­தில் மிக­வும் தைரி­ய­சா­லி­க­ளாக, நம்­பிக்­கை­யா­ன­வர்­க­ளாக, நல்­ல­வர்­க­ளா­கத் தெரி­வார்­கள். உண்­மை­யில் இவர்­கள் தைரி­ய­மற்­ற­வர்­க­ளா­க­வும் தன்­னம்­பிக்கை அற்­ற­வர்­க­ளா­க­வும், இந்த உல­கத்­துக்­குப் பய­னற்­ற­வர்­க­ளாக உணர்­ப­வர்­க­ளா­க­வும் இருப்­பார்­கள். இது மிக­வும் தவ­றான விஷ­ய­மும்­கூட. இந்த குண­மா­னது இவர்­க­ளுக்­குக் கடு­மை­யான மன உளைச்­ச­லைத் தந்­து­கொண்டே இருக்­கும். சக வயது மனி­தர்­க­ளி­டம் பேசு­வது, பழ­கு­வது, செக்ஸ் வைத்­துக்­கொள்­வது போன்­ற­வற்­றைத் தவிர்த்து, குழந்­தை­க­ளி ­டம் அவற்­றைச் செய்­வது இவர்­க­ளுக்கு எளி­தாக இருக்­கும். குழந்­தை­க­ளி­டம் தவ­றாக நடந்­து­கொள்­வ­தும் அவர்­க­ளைத் தம் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருப்­ப­தும் இவர்­க­ளுக்­குப் பிடித்த விஷ­யங்­க­ளாக இருக்­கும். தாழ்வு மனப்­பான்­மையே இதற்­கான பிர­தான கார­ணம் என்­கி­றார்­கள் ஆய்­வா­ளர்­கள்.

அதி­கார விரும்­பி­கள்: சக வயது மனி­தர்­க­ளி­டம் இவர்­க­ளால் தங்­கள் அதி­கா­ரத்­தைக் காட்ட முடி­யாது. வீட்­டில் மனை­வி­யி­டம் கூட அதி­கா­ரத்­தைச் செலுத்த முடி­யா­த­வர்­ க­ளாக இருப்­பார்­கள். ஆனால், குழந்­தை­ க­ளி­டம் பாலி­யல் இச்­சை­க­ளைத் தீர்த்­துக்­ கொள்­வ­தன் மூலம் அவர்­க­ளைத் தம் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருப்­ப­தா­க­வும் அதி­கா­ரத்­தைக் கையில் வைத்­தி­ருப்­ப­தா­க­வும் உணர்­வார்­கள். இவர்­க­ளைப் போன்ற மனி­தர்­களை நாம் பர­வ­லா­கப் பார்க்­க­லாம்.

பச்­சா­தா­பம் அற்­ற­வர்­கள்: ‘அண்ணா என்ன விட்­டு­டுங்­கண்ணா...’ என்று கத­றிய பெண் குரலை பொள்­ளாச்சி வீடி­யோ­வில் பார்க்­கவோ கேட்­க­வோ­கூ­டப் பல­ருக்­கும் திராணி இல்லை. மாதக்­க­ணக்­கில் அந்­தக் கொடூ­ரச் செயல்­க­ளில் எப்­படி ஈடு­பட்­டி­ருப்­பார்­கள் என்று யோசித்­துப் பார்ப்­பதே நமக்­கெல்­லாம் கொடு­மை­யாக இருந்­தது. அந்த குரலை நினைத்­தாலே இப்­போ ­தும் குலை நடுங்­கும் பல­ருக்­கும். ஆனால், அந்த மனித மிரு­கங்­க­ளால் மட்­டும் எப்­படி அப்­படி நடந்து கொண்­டி­ருக்க முடிந்­தி­ருக்­

கும்? அது­தான் ‘லாக் ஆப் எம்­பதி’. அதா­வது எதி­ரா­ளி­யின் இடத்­தி­லி­ருந்து அவர்­க­ளின் உணர்­வு­க­ளைப் பார்க்­கிற தன்மை இல்­லா­தது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் இடத்­தில் தன்­னை­வைத்­துப் பார்க்க முடி­யாத நிலை. அந்­தக் குரூ­ரம் இவர்­க­ளுக்­குப் பழ­கி­வி­டும். அதன் தொடர்ச்­சி­யா­கத்­தான் இத்­த­கைய அரக்­கர்­கள் குழந்­தை­க­ளி­டம் தொடர்ச்­சி­யான பாலி­யல் வன்­கொ­டு­மை­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­கள்.

இயற்­கைக்­குப் புறம்­பா­ன­வர்­கள்: குழந்­தை­க­ளி­டம் பாலி­யல் ரீதி­யாக அத்­து­மீ­று­ப­வர்­கள் பெரும்­பா­லும் சக வய­தி­ன­ரு­டன் உற­வு­வைத்­துக் கொள்ள முடி­யா­த­வர்­க­ளாக இருப்­பார்­கள். அத­னால்­தான் இவர்­க­ளின் இலக்கு குழந்­தை­க­ளாக இருக்­கி­றார்­கள். இவர்­கள் குழந்­தை­க­ளி­டம் இது­போன்ற அத்­து­மீ­றல்­க­ளைப் பல இடங்­க­ளில் பல­முறை செய்­தி­ருப்­பார்­கள். ஏதோ ஒரு சம்­ப­வத்­தில்­தான் மாட்­டி­யி­ருப்­பார்­கள். பல இடங்­க­ளில் தப்­பித்­தி­ருப்­பார்­கள்.

குழந்­தைப்­ப­ரு­வத்­தைத் தொலைத்­த­வர்­கள்: குழந்­தைப் பரு­வத்­தில் தாயின் அர­வ­ணைப்போ, தந்­தை­யின் பரா­ம­ரிப்போ கிடைக்­கா­மல் மோச­மான சூழ­லில் வளர்ந்­த­வர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளும் இந்­தக் குற்­ற­ வா­ளி­க­ளின் பட்­டி­ய­லில் முக்­கிய இடம்­ ­பி­டிக்­கி­றார்­கள். பெற்­றோ­ரில் ஒரு­வரை இழந்­தி­ருக்­க­லாம். பள்­ளிக்­கூட வாழ்க்­கை­யும் இவர்­க­ளுக்­குச் சரி­யாக அமைந்­தி­ருக்­காது. மொத்­தத்­தில் அவர்­க­ளது குழந்­தைப் பரு­வமே மோச­மா­ன­தாக இருந்­தி­ருக்­கும். எப்­படி நடந்­து­கொள்ள வேண்­டும் என்பதை  எடுத்­துச்­சொல்­லவோ, வழி­ந­டத்தவோ ஆட்­கள் இருந்­தி­ருக்க மாட்­டார்­கள்.

பாலி­யல் பிறழ்­வு­க­ளுக்­குப் பழ­கி­ய­வர்­கள்: பீடோ­பீ­லியா... அதா­வது தம் பாலி­யல் வேட்கை. இச்சை போன்ற எல்­லா­வற்­றை­யும் குழந்­தை­க­ளை­வைத்­துத் தீர்த்­துக்­

கொள்ள நினைக்­கிற மன­நிலை. இவர்­க­ளுக்கு குழந்­தை­க­ளின் வயது ஒரு பொருட்­டாக இருக்­காது. மூன்று மாதக் குழந்­தை­

யாக இருந்­தா­லும் அப்­ப­டித்­தான் நடந்து கொள்­வார்­கள். இவர்­களை ‘பீடோ­பீ­லி­யாக்’ என்­கி­றோம். இவர்­கள் சிறு­வ­ய­தில் ஆபா­சப் படங்­க­ளைப் பார்த்த, ஆபா­சப் புத்­த­கங்­க­

ளைப் படித்த அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளா­க­வும் இருப்­பார்­கள்.

போதை அல்­லது மது அடி­மை­கள்: இந்த இரண்டு பழக்­கங்­க­ளும் இருப்­ப­வர்­க­ளுக்­குத் தங்­க­ளின் தவ­று­கள் புரி­யாது. அவற்­றின் ஆழம் தெரி­யா­ம­லேயே தொடர்ந்து கொண்­டி­ருப்­பார்­கள். போதை அல்­லது

மது எடுத்­துக் கொள்­ளும்­போது ஒரு திரில்­லுக்­காக சட்­டத்­துக்­குப் புறம்­பான பல செயல்­க­ளில் ஈடு­ப­டு­வார்­கள். அவற்­றுள் ஒன்­று­தான் குழந்தைகளி­டம் ஆபா­ச­மாக நடந்து கொள்­வது.