சாதித்த நிர்மலா ... – சுமதி

பதிவு செய்த நாள் : 06 பிப்ரவரி 2020

2020 மத்­திய பட்­ஜெட்டை தாக்­கல் செய்த நிர்­மலா சீதா­ரா­மன்,  எத்­தனை மணி நேரம் பட்­ஜெட் உரை ஆற்­றி­னார் தெரி­யுமா?

நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன், கால அள­வில், மிக­வும் நீள­மான ஒரு பட்­ஜெட் உரையை (2 மணி நேரம் 40 நிமி­டங்­கள்) நிகழ்த்­தி­னார். 2020 – 20-21 ம் ஆண்­டுக்­காக ஒதுக்­கீ­டு­களை அறி­விப்­ப­தற்கு முன், அவர் பட்­ஜெட்­டிற்­கான மூன்று முக்­கி­யக் கருத்­தாக்­கங்­க­ளைக் குறிப்­பிட்­டார்.

2019 ஜூலை­யில் அவர் தாக்­கல் செய்த முதல் மத்­திய பட்­ஜெட்­டின் போது 2 மணி நேரம் 17 நிமி­டங்­கள் உரை நிகழ்த்­தி­னார். தொடர்ந்து உரை நிகழ்த்த முடி­யாத நிலை­யில் அவர், எஞ்­சிய பட்­ஜெட் உரை வாசிக்­கப்­பட்­ட­தாக கருத வேண்­டும் என சபா­நா­ய­க­ரி­டம் வேண்­டு­கோள் விடுத்து அமர்ந்து கொண்­டார்.  தனி­ந­பர் வரு­மான வரி விகி­தம் குறைப்பு உள்­ளிட்ட பல அறி­விப்­பு­கள் ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளின் ஆர­வா­ர­மான வர­வேற்­பைப் பெற்­றது. பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் உறுப்­பி­னர்­க­ளு­டன் இணைந்து கர­வொலி எழுப்­பி­னார். எனி­னும், ஒரு சில திட்­டங்­கள் தொடர்­பான அவ­ரது அறி­விப்­பு­கள் எதிர்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுன் அதி­ருப்­திக்கு இலக்­கா­னது.   “தொழில்­மு­னைவு எப்­போ­துமே இந்­தி­யா­வின் பல­மாக இருந்து வரு­கி­றது. இந்­திய இளை­ஞர்­க­ளின் ரிஸ்க் எடுக்­கும் ஆர்­வத்தை மதிக்­கி­றோம்,” என்று நிதி அமைச்­சர் இந்­தி­யா­வின் தொழில்­மு­னைவு திற­னைப் பாராட்டி கூறி­னார்.

இந்­திய ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் வர்த்­த­கம் செய்­வதை எளி­தாக்­கும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அவர் அறி­வித்­தார். ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்­க­ளுக்­கான விதை நிதி, தொழில்­மு­னை­வோ­ருக்­கான முத­லீட்டு அனு­மதி மற்­றும் ஆலோ­சனை மையம் உள்­ளிட்­ட­வற்றை அவர் அறி­வித்­தார்.  

ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ ளுக்கு நிதி­ய­மைச்­சர் அறி­வித்­துள்­ளது என்ன?

இந்­தி­யா­வின் தொழில்­மு­னை­வோர், வேலை­வாய்ப்பை உரு­வாக்­கு­ப­வர்­க­ளாக உரு­வாக வேண்­டும் என கூறிய நிதி அமைச்­சர், இன்­றைய இளம் தலை­மு­றை­யி­னர் இந்­தி­யா­வில் புதிய வர்த்­த­கம் மற்­றும் வேலை­வாய்ப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக, செழிப்­பான வாய்ப்­புகளை உத­றித்­தள்­ளு­வது வளர்ச்­சிக்கு உத­வு­கி­றது என தெரி­வித்­தார்.  தொழில்­மு­னைவு தவிர, புதிய பொரு­ளா­தா­ரம் மற்­றும் வளர்ந்து வரும் தொழில்­நுட்­பங்­கள் குறித்­தும் நிதி அமைச்­சர் குறிப்­பிட்­டார். 3டி பிரிண்­டிங், டேட்டா ஸ்டேரேஜ், குவாண்­டம் கம்ப்­யூட்­டிங், போன்­றவை உல­கின் முகத்தை மாற்­றிக்­கொண்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். நேரடி மானி­யம் அளிப்பு போன்­ற­வற்­றுக்கு அரசு புதிய தொழில்­நுட்­பங்­களை நாடு­வ­தா­க­வும் நிதி அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அறி­வுச்­சொத்து காப்­பு­ரிமை உரு­வாக்­கம் மற்­றும் காப்பு பற்றி குறிப்­பிட்­ட­வர், இதற்­கான டிஜிட்­டல் மேடை உரு­வாக்­கம் பற்­றி­யும் தெரி­வித்­தார்.   “இந்த மேடை சீரான செயல்­பாடு கொண்­டி­ருக்­கும். அறி­வுச்­சொத்­து­ரிமை தொடர்­பான பணி­க­ளுக்­காக ஒரு மையம் அமைக்­கப்­ப­டும். அறிவு பரி­மாற்­றம் பற்­றிம் அவர் குறிப்­பிட்­டார்.

நாடு முழு­வ­தும் டேட்டா செண்­டர் பார்க் உரு­வாக்­கப்­ப­டும் என்­றும் நிதி அமைச்­சர் தெரி­வித்­தார். குவாண்­டம் தொழில்­நுட்­பத்­திற்­கான ரூ.8,000 கோடி ஒதுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.