ஆட்டு பால் சரும பராமரிப்பு பிரான்ட் உருவான கதை ! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 06 பிப்ரவரி 2020

2017ம் ஆண்டு தொடங்­கப்­பட்ட கோய­முத்­தூ­ரைச் சேர்ந்த இந்த நிறு­வ­னம், ரசா­ய­னங்­கள் இல்­லாத இயற்­கை­யான காஸ்­மெ­டிக் தயா­ரிப்­பு­களை ஆட்­டுப் பால் கொண்டு தயா­ரிக்­கி­றது.

பொறி­யா­ள­ரான 32 வய­தான கிருத்­திகா அனைத்து வகை­யான சரு­மங்­க­ளுக்­கும் ஏற்­ற­வா­றான ரசா­ய­னங்­கள் இல்­லாத தயா­ரிப்­பு­க­ளின் அவ­சி­யத்தை உணர்ந்­தார். இவ­ரது அம்மா சரும வியாதி ஏற்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ளார். ”என்­னு­டைய அம்­மா­விற்கு சென்­சி­டிவ் சரு­மம். பத்­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக சரும பிரச்­னை­யால் அவ­திப்­பட்­டார். சரு­மத்­திற்கு அவர் பயன்­ப­டுத்­திய தயா­ரிப்­பு­கள் அவ­ரது நிலையை மேலும் மோச­மாக்­கி­யது. அவர் உயி­ரி­ழந்­த­தால் சொந்­த­மாக இயற்கை சோப்பு தயா­ரிக்­கத் தொடங்­கி­னேன். சரு­மத்­திற்கு பாது­காப்­பான தயா­ரிப்­பு­களை நான் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்­பதே அவ­ரது விருப்­ப­ மாக இருந்­தது. இதுவே எனக்கு உந்­து­த­லாக இருந்து இன்­றைய நிலையை எட்ட உத­வி­யது,” என்­றார்

கிருத்­திகா.

கிருத்­திகா முத­லில் இயற்கை காஸ்­மெ­டா­லஜி பிரி­வில் ஆன்­லைன் டிப்­ளமோ முடித்­தார். சோப்­பு­களை ஆய்வு செய்­யத் தொடங்­கி­னார். இதுவே கோய­முத்­தூ­ரில் ’வில்வா ஸ்டோர்’ என்­கிற ஆன்­லைன் ஆர்­கா­னிக் சரு­மப் பரா­ம­ரிப்பு பிராண்ட் உரு­வாக வழி­வ­குத்­தது. சுய­நி­தி­யில் இயங்­கும் இந்த ஸ்டார்ட் அப் 10,000 ரூபாய் முத­லீட்­டு­டன் 2017ம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. இன்று இந்­நி­று­வ­னத்­தின் விற்­று­மு­தல் 15 கோடி ரூபாய். இதன் தயா­ரிப்­பு­கள் அமே­சான், பிளிப்­கார்ட், நைகா போன்ற பிர­பல மின்­வ­ணிக தளங்­க­ளில் கிடைக்­கி­றது.

கிருத்­தி­கா­வின் சமை­ய­ல­றை­யில் தொடங்­கப்­பட்ட முயற்சி கிருத்­திகா ஆரம்­பத்­தில் தனது சமை­ய­ல­றை­

யி­லேயே குளிர் அழுத்த சோப்­பு­கள் தயா­ரித்து சோதனை செய்­யத் தொடங்­கி­னார். பின்­னர் கிருத்­தி­கா­ வின் கண­வ­ரும் வில்வா நிறு­வ­னத்­

தின் இணை நிறு­வ­ன­ரு­மான குமரன் அவ­ரு­டன் இணைந்­து­கொண்­டார். கும­ரன் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்­னி­யில் எம்­பிஏ முடித்­துள்­ளார்.

கோய­முத்­தூர் அருகே காசி­பா­ளை­யம் என்­கிற கிரா­மத்­தில் கிருத்­தி­கா­ வின் குடும்­பத்­திற்கு சொந்­த­மாக பண்ணை (வில்வா பண்ணை) உள்ளது. ஆட்­டுப் பால் கொண்டு சோதனை முயற்­சி­யைத் தொடங்­கி­னார். ”பல ஆய்­வு­கள் நடத்­திய பின்­னர் எங்­க­ளது குடும்­பத்­திற்­கென ஒரு பிரத்­யேக ரெசி­பியை உரு­வாக்­கி­னோம். இதைத் தான் எங்­க­ளது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் வழங்கி வரு­கி­றோம். எங்­க­ளது பண்­ணை­யில் இரண்டு, மூன்று ஆடு­க­ளு­டன் தொடங்­கி­னோம். இன்று பண்­ணை­யில் ஒரு மந்­தையே உள்­ளது. பிரெஷ்­சான பாலைக் கறந்த பிறகு அவற்­றைக் கொண்டு வெவ்­வேறு ஆட்­டுப் பால் தயா­ரிப்­பு­களை

உரு­வாக்­கு­கி­றோம்,” என்­றார் கிருத்­திகா.

வில்வா பிராண்ட் மூலம் வேளாண் விளைப்­பொ­ருட்­கள், கேரி­யர் எண்­ணெய், நறு­மண எண்­ணெய் ஆகி­ய­வற்­றின் சரி­யான கல­வையை உரு­வாக்க விரும்­பு­வ­தாக

கிருத்­திகா தெரி­வித்­தார். விளைப்­பொ­ருட்­கள் கடி­ன­மான ரசா­ய­னங்­கள், சேர்க்கை பொருட்­கள், செயற்கை

எண்­ணெய் அல்­லது பெர்ப்­யூம் போன்­றவை சேர்க்­கப்­ப­டா­மல் சுத்­த­மாக பெறப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

தயா­ரிப்பு செயல்­மு­றை­கள் வெளிப்­புற உத­வி­யின்றி

நிறு­வ­னத்­திற்­குள்­ளேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.  

ஒரு தயா­ரிப்பு அறி­மு­க­மா­வ­தற்கு முன்பு பல மாதங்­கள் ஆய்வு செய்­யப்­ப­டு­கி­றது. தயா­ரிப்­பு­கள் கூந்­தல் பரா­ம­ரிப்பு, சரு­மப் பரா­ம­ரிப்பு மற்­றும் இதர அழகு சாத­னப் பொருட்­கள் வில்வா தயா­ரிப்­பு­க­ளில் அடங்­கும். சிட்­ரோ­ நெல்லா, எலு­மிச்­சைப்­புல் ஆகி­ய­வற்­றைக் கொண்டு குழந்­தை­க­ளுக்கு பாது­காப்­பான கொசு விரட்டி எண்­ணெயை உரு­வாக்­க­வும் இக்­கு­ழு­வி­னர் திட்­ட மிட்­டுள்­ள­னர். மஸ்காரா, லிப்ஸ்­டிக் போன்­ற­வற்­றை­யும் வீட்­டி­லேயே தயா­ரித்த இந்த ஸ்டார்ட் அப் தற்­போது இவற்­றைத் தயா­ரிப்­ப­தில்லை என்­றார் கிருத்­திகா.

இந்­நி­று­வ­னத்­தின் பெரும்­பா­லான தயா­ரிப்­பு­க­ளில் ரசா­ய­னங்­கள் சேர்க்­கப்­ப­டு­வ­தில்லை. கண்­க­ளுக்­கான கிரீம், பாடி பாலிஷ் ஆகி­ய­வற்­றில் மட்­டும் பதப்­ப­டுத்­தும் பொருட்­கள் பயன்­ப­டுத்­தப் படு­கி­றது. இவை பாது­காப்­பா­னவை. அத்­து­டன் குறைந்த காலத்­திற்கு மட்­டுமே கெடா­மல் இருக்­கும். நறு­மண எண்­ணெய் முற்­றி­லும் பாது­காப்­பாக இருக்­க­வேண்­டும் என்­ப­தில் மிக­வும் கவ­ன­மாக இருப்­ப­தாக கிருத்­திகா தெரி­வித்­தார். முழு­மை­யாக ஆர்­கா­னிக்­காக இருப்­பது உறு­தி­செய்­யப்­ப­டு­கி­றது. ஈரோட்­டில் இருந்து முருங்கை எண்­ணெ­யும் காஷ்­மீ­ரில் இருந்து லாவண்­டர் எண்­ணெ­யும் கேர­ளா­வில் இருந்து ஓமம், மிள­குக்­கீரை, எலு­மிச்­சைப்­புல் எண்­ணெ­யும் பஞ்­சா­பில் இருந்து தேன்­மெ­ழு­கும் பெறப்­ப­டு­கி­றது. தற்­ச­ம­யம் இந்­நி­று­வ­னத்­தின் சிறிய தொழிற்­சாலை கோய­முத்­தூ­ரில் உள்­ளது. விரை­வில் 40,000 சதுர அடி கொண்ட தொழிற்­சா­லைக்கு மாற உள்­ளது.  விற்­ப­னை­யா­ளர்­கள் “ஆரம்­பத்­தில் எங்­க­ளது தேவை­களை பூர்த்­தி­செய்­யும் சரி­யான விற்­ப­னை­யா­ளர்­க­ளைக் கண்­ட­றி­வ­தில் சிர­மம் இருந்­தது. ஆனால் தற்­போது விற்­ப­னை­யா­ளர்­களே நேர­டி­யாக எங்­களை அணு­கு­கின்­ற­னர். எங்­க­ளது தயா­ரிப்­பு­க­ளில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் எண்­ணெய் வகை­கள் ஆர்­கா­னிக் முறை­யில் உள்­ளூர் விவ­சா­யி­க­ளால் தயா­ரிக்­கப்­ப­டு­பவை. எங்­க­ளது பண்­ணை­யில் வள­ரும் மூலப்­பொ­ருட்­க­ளை­யும் நாங்­கள் பயன்­ப­டுத்­து­கி­றோம்,” என்­றார் கிருத்­திகா.

ஒரு சில பொருட்­கள் அரு­கி­லுள்ள பண்­ணை­க­ளில் பணி­பு­ரி­யும் விவ­சா­யி­க­ளி­டம் இருந்து பெறப்­ப­டு­கி­றது. இதன் மூலம் விற்­ப­னை­யா­ளர் பிரச்­னைக்கு தீர்­வு­காண முடிந்­தது. இந்­தத் தயா­ரிப்­பு­கள் ஓர­ள­விற்கு வர­வேற்­பைப் பெற்­ற­தைத் தொடர்ந்து இக்­கு­ழு­வி­னர் முத­லில் 2017-ம் ஆண்டு இன்ஸ்­டா­கி­ரா­மில் விற்­ப­னை­யைத் தொடங்­கி­னார்­கள். அடுத்த இரண்­டாண்­டு­க­ளில் இக்­கு­ழு­வி­னர் வலை­த­ளம் அமைத்­தல், விநி­யோ­கம், லாஜிஸ்­டிக்ஸ்

உள்­ளிட்­ட­வற்­றில் கவ­னம் செலுத்­தி­னர். இதற்­காக முன்­னணி டெலி­வரி மற்­றும் லாஜிஸ்­டிக்ஸ் நெட்­வொர்க்­க­

ளு­டன் இந்­நி­று­வ­னம் இணைந்­து­கொண்­டது. தற்­போது இதன் 80 சத­வீத வணி­கம் ஆன்­லைன் ஸ்டோர் மூல­மா­கவே பெறப்­ப­டு­கி­றது.

”அனைத்து சரும வகை­க­ளுக்­கும் ஏற்­ற­வாறு இருப்­ப­து­டன் சுற்­றுச்­சூ­ழ­லுக்­கும் உகந்­த­வா­றான புது­மை­யான தயா­ரிப்­பு­களை அறி­மு­கப்­ப­டுத்­தத் திட்­ட­மிட்­டுள்­ளோம். ஆட்­டுப்­பால் சார்ந்த சரும பரா­ம­ரிப்­பில் முன்­னோ­டி­யா­கத் திக­ழ­வேண்­டும் என்று விரும்­பு­கி­றோம்,” என்­றார்

கிருத்­திகா.