கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 6–1–2020

பதிவு செய்த நாள் : 06 பிப்ரவரி 2020

ஆங்கிலம் ரொம்ப ஈஸின்ட்

ஆத்­திச்­சூ­டி­யில் அறம் இருந்­தது.

‘அறம் செய விரும்பு’ என்று பாடம் தொடங்­கி­யது.

ஏ.பி.ஸீ.டியில் (A, B, C, D) அறம் இல்லை.

ஆனால் அது­தான் கோலோச்­சு­கி­றது!  

‘நல்­லது செய்’, ‘நல்­ல­வ­னாய் இரு’ என்­கிற உணர்வை விடா­மல் ஆங்­கி­லம் கற்­ப­து­தான் நம்­மு­டைய முறை­யாக இருக்க வேண்­டும்.

‘அறம் செய (செய்ய) விரும்பு’ என்­பதை ஆங்­கி­லத்­தில் எப்­ப­டிக் கூறு­வது?

ஹவ் டு ஸே ‘அறம் செய விரும்பு’  இன் இங்­கி­லிஷ்?  How to say Aram seiyya virumbu in English?

‘விருப்­பம்’ என்­றால் அதைப் பல­வி­த­மாக ஆங்­கி­லத்­தில் பொருள் கொள்­ள­லாம்.

‘நான் உன்னை விரும்­பு­கி­றேன்’ என்­பது காதல் சூழ்­நி­லை­யில்…..’ஐ லவ் யூ’ (I love you) என்று பொருள் படு­கி­றது.

‘நான் உன்னை விரும்­ப­வில்­லை’…­என்­றால் ‘ஐ டோன்ட் லவ் யூ’ (I don’t love you) என்று பொருள் (அப்­படி ஒரு­வர் கூறி­விட்­டால், விருப்­பம் இல்­லா­த­வரை பல­வந்­தப்­ப­டுத்­து­வது சரி­யில்லை… அப்­படி செய்­ப­வர்­கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும்… dதே மஸ்ட் bபீ பனிஷ்ட் They must be punished.

வேறு எடுத்­துக்­காட்­டு­கள் பார்ப்­போம்.

‘அவன் அந்­தக் கட்­சி­யில் சேர்ந்­து­கொள்னு உங்­கிட்ட சொன்­னானே, நீ ஏன் சேர­வில்லை’ என்று தன் நண்­ப­ரி­டம் ஒரு­வர் கேட்­டார்.

அப்­ப­டிக் கேட்­கப்­பட்­ட­வர் பதில் சொன்­னார், நான் சேர மாட்­டேன், அது என்­னு­டைய விருப்­பம்…’­இட் இஸ் மை விஷ்’…(It is my wish).  ஆக ‘விருப்­பம்’ என்­பது ‘விஷ்’ என்ற பொரு­ளில் இங்கே வந்­தது.

‘விஷ்’ பண்­றது என்­பது தமிழ் மொழிச் சொல் போல் ஆகி­விட்­டது.

‘’நாம எதி­ருல வரும்­போது கூட அந்­தப் பய ‘விஷ்’ பண்­றது இல்­லை…­க­வ­னிச்­சயா’’ என்று கூறும் போது,  ‘விஷ்’ (wish) செய்­வது, மற்­ற­வ­ருக்­குக்­கூ­றும் ‘குட்d  மார்­னிங்’ (good morning), ‘குட் ஈவி­னிங்’ (good evening), ‘வணக்­கம்’ என்ற பொரு­ளில் வரு­கி­றது. இந்த ‘விஷ்’ எப்­ப­டி­யெல்­லாம் வாக்­கி­யங்­க­ளில் வரு­கி­றது என்று பார்ப்­போம்.

‘விஷ் மீ குட்d லக்’. Wish me good luck. இது இன்­னொ­ரு­வ­ரி­டம் கூறும் விஷ­யம். ‘ ‘ (நீ) எனக்கு வாழ்த்­துக் கூறு’ நான் போகிற அல்­லது எடுத்­துக்­கொண்­டி­ருக்­கிற காரி­யம் வெற்­றி­க­ர­மாக அமை­ய­வேண்­டும் என்று ‘ என்னை வாழ்த்து’ என்று பொருள்.

‘ஐ  விஷ் யூ லக்’ (I wish you luck). நீ வெற்­றி­பெ­ற­வேண்­டும் என்று வாழ்த்­து­கி­றேன்.

dத சீஃப் மினிஸ்­டர் விஷ்dட் dத பீபில் ஹேப்பி பொங்­கல். The Chief Minister wished the people happy Pongal. முதல்வர் மக்­க­ளுக்­குப் பொங்­கல் வாழ்த்­துத் தெரி­வித்­தார்,  என்று பொருள்.

‘dடூ யூ விஷ் டு ஸ்டே? ‘ Do you wish to stay? நீ இருக்க விரும்­பு­கி­றாயா?

‘இஃப் யூ விஷ், ஐ வில் ஆஸ்க் ஹிம்’. If you wish, I will ask him. நீ விருப்­பப்­பட்­டால், நான் அவ­னைக் கேட்­கி­றேன்.

‘அறம் செய விரும்பு’ என்ற அற்­பு­த­மான ஆத்­திச்­சூ­டிக்கு வரு­வோம்.

‘dடிஸ­யர் டு dடூ குdட் dடீdட்ஸ்’ (Desire to do good deeds) என்று அதை மொழி

பெயர்க்­க­லாம்.

இங்கே ‘dடிஸ­யர்’ (desire) என்ற சொல்­லுக்கு விருப்­பம் என்று பொருள்.

‘அறம்’ என்­பது மொழி­பெ­யர்ப்­புக்கு அப்­பால் உள்ள பாரத நாக­ரிக்த்­தின் ஒரு சொல். ‘தர்­மம்’ என்ற சம்ஸ்­கி­ரு­தச் சொல்லை அதற்கு இணை­யா­கக் கூற­லாம்.

ஆனால் ‘தர்­மம்’ என்­பது ஏழை­க­ளுக்கு செய்­கிற தானம் (சாரிடி charity) என்ற பொரு­ளி­லும் இல­வ­சம் என்­ப­தைக் குறிக்­கும் அடை­மொ­ழி­யா­க­வும் (தர்­மாஸ்­பத்­திரி) வரு­கி­றது.

gகுdட் dடீdட்ஸ் என்­றால் நல்ல செயல்­கள், நல்ல காரி­யங்­கள்.

dடூ gகுdட் dடீdட்ஸ் Do good deeds…என்­றால் நல்ல செயல்­கள் செய்….என்று பொருள்.

ஆனால் அப்­ப­டிக் கூட அவ்­வை­யார் கூற­வில்லை…

நல்­ல­தைச் செய்ய ஆசைப்­படு என்­றார்.

‘dடிஸ­யர் டு dடூ குdட் dடீdட்ஸ்’ Desire to do good deeds… or  ‘dடிஸ­யர் டு dடூ குdட் திங்ஸ்’ Desire to do good things என்­றார் அவர்.

மன­தில் நல்­லதை செய்ய வேண்­டும் என்று ஆசைப்­பட்­டாலே நல்­லவை நிக­ழும் என்ற நம்­பிக்கை அவ­ருக்கு.

நேர­டி­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் இப்­ப­டிக்­கூ­ற­லாம்:

(யூ) bபீ அ குdட் bபாய் (You) Be a good boy. நல்ல பைய­னாக இரு.

(யூ) bபீ அ குdட் ஸ்டூடென்ட் (You) Be a good student. நல்ல மாண­வ­னாக இரு.

(யூ) bபீ அ குdட் எம்­பி­ளாயி. (You) Be a good employee, நல்ல ஊழி­ய­னாக இரு.

(யூ) bபீ அ குdட் ஸிடி­ஸென் ஆஃப் இண்­டியா (You) Be a good citizen of India. இந்­தி­யா­வின் நல்ல குடி­ம­க­னாக இரு.

மேற்­படி ஆங்­கில வாக்­கி­யங்­க­ளில் ஒரு என்ற அர்த்­தத்­தில் ‘a’ வரு­வ­தைக் கவ­னித்­துக் கொள்­ளுங்­கள். அதை விட்­டு­விட்டு இத்­த­கைய வாக்­கி­யங்­க­ளைப் பயன்­ப­டுத்­தா­தீர்­கள்.

bபீ அ gகுdட் bபாய் (நல்ல பைய­னாக இரு), bபீ அ gகுdட் gகர்ள் (நல்ல பெண்­ணாக இரு) போன்ற வாக்­கி­யங்­க­ளில் வரும் bபீ (இரு) தான், இஸ் is, ஆர் are, ஆம் am என்று மாறி­வ­ரு­கி­றது என்­பது ஆங்­கில மொழி­யின் அடிப்­படை சூத்­தி­ரம் என்று நீங்­கள் மறக்­கா­மல் நினைக்க வேண்­டும்.

ஹீ இஸ் அ gகுdட் bபாய் He is a good boy. அவன் (ஒரு) நல்ல பையன்.

ஷீ இஸ் அ gகுdட் gகர்ள் She is a good girl. அவள் (ஒரு) நல்ல பெண்.

ஹீ இஸ் அ gகுdட் ஸ்டூdடென்ட் He is a good student. அவன் ஒரு நல்ல மாண­வன்.

ஹீ இஸ் அ gகுdட் எம்­பி­யாயி He is a good employee. அவன் (ஒரு) நல்ல ஊழி­யன்.

ஹீ இஸ் அ gகுdட் ஸிடி­ஸென் ஆஃப் இண்­டியா . He is a good citizen of India.

யூ ஆர் அ gகுdட் bபாய். You are a good boy.

யூ ஆர் அ gகுdட் gகர்ள். You are a good girl.

யூ ஆர் அ gகுdட் ஸ்டூdடென்ட். You are a good student.

யூ ஆர் அ gகுdட் எம்­பி­ளாயி. You are a good employee.

யூ ஆர் அ gகுdட் ஸிடி­ஸென் ஆஃப் இண்­டியா . You are a good citizen of India.

ஐ ஆம் அ gகுdட் bபாய். I am a good boy.

ஐ ஆம் அ gகுdட் gகர்ள். I am a good girl.

ஐ ஆம் அ gகுdட் ஸ்டூdடென்ட். I am a good student.

ஐ ஆம் அ gகுdட் எம்­பி­ளாயி. I am a good employee.

ஐ ஆம் அ gகுdட் ஸிடி­ஸென் ஆஃப் இண்­டியா . I am a good citizen of India.

நல்ல பைய­னாக ‘இரு’ (bபீ அ gகுdட் bபாய்)  என்­பது போன்ற வாக்­கி­யத்­தில் உள்ள ‘bபீ’ தான், ‘ஹீ’ (He) மற்­றும் ‘ஷீ’யு­டன் (She) ‘இஸ்’­ஸா­க­வும் (is), ‘யூ’வு­டன் (you) ஆர் ஆக­வும் (are), ‘ஐ’யு­டன் ‘ஆம்’ (am) ஆக­வும் வந்­தது என்று புரிந்­து­கொள்­ளுங்­கள். இந்த அஸ்­தி­வா­ரத்தை மன­தில் நன்­றா­கப் போட்­டுக் கொள்­வது அதி­கப்­ப­லன் தரும்.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in