பிசினஸ்: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் வணிகம்! – ஞானசேகர்

பதிவு செய்த நாள் : 06 பிப்ரவரி 2020

பல காலங்­க­ளா­கவே நிதி­யு­தவி தேடு­வதே தொழில்­மு­னை­வோ­ருக்கு பெரும் பிரச்­னை­யாக இருந்து வரு­கி­றது. இந்த கடி­ன­மான போராட்­டத்தை எதிர்­கொண்டு தங்­க­ளது திட்­டத்தை அடுத்த கட்­டத்­திற்கு நகர்த்தி புதுமை படைக்­கும் கனவை பலர் கைவி­டு­கின்­ற­னர். சிறப்­பான வணிக திட்­ட­மா­னது சந்­தை­யில் தனக்­கென தனி இடத்தை பிடித்­து­விட்­டால் செழிக்­கத் துவங்­கி­வி­டும் என்­பதை இவர்­கள் உணர்­வ­தில்லை. உங்­க­ளது திட்­டம் வாயி­லாக நிறு­வ­ன­மும் அதன் மூலம் மக்­க­ளும் வந்­த­டை­வார்­கள். அந்த மக்­கள் உங்­க­ளுக்­கான சந்­தை­யைக் கொண்டு சேர்ப்­பார்­கள். ஒரு நல்ல திட்­டம் சிறப்­பான வணி­கத்­திற்­கான வழி­வ­குக்­குமே தவிர அதுவே வரு­வாய் ஆகாது என்­பது நம் அனை­வ­ரும் அறிந்­ததே.

இன்று பில் கேட்ஸ், மார்க் ஸக்­கர்­பெர்க், எலன் மஸ்க் போன்ற உல­கின் வெற்­றி­க­ர­மான தொழில்­மு­னை­வோர் எவ­ருமே சிறி­ய­ள­வில் செயல்­ப­டத் துவங்கி படிப்­ப­டி­யா­கவே முன்­னே­றி­னர்.  பேஸ்­புக் ஹார்­வர்ட் பல­க­லைக்­க­ழ­கத்­தின் தங்­கு­ம­றை­யி­லி­ருந்து மிகக்­கு­றைந்த செல­வி­லேயே துவங்­கப்­பட்­டது.  

பில் கேட்ஸ் கல்­லூ­ரிப் படிப்பை பாதி­யி­லேயே நிறுத்­தி­விட்டு இரண்­டாண்­டு­க­ளுக்கு பிறகு மைக்­ரோ­சாப்ட் நிறு­வ­னத்தை உரு­வாக்­கி­னார். எனவே வெற்­றி­க­ர­மான தொழில்­மு­னை­வுக் கதை­களை நினை­வு­கூர்ந்­தால் அத்­த­கைய பய­ணத்தை தேர்ந்­தெ­டுக்­கும் பல­ருக்கு பல முக்­கிய படிப்­பி­னை­கள் கிடைக்­கும். ஒரே ஒரு சிறப்­பான திட்­டம்­தான் மிகப்­பெ­ரிய வணி­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆரம்ப புள்­ளி­யா­கும். அந்த திட்­ட­மி­டல் முறை­யாக இருப்­பின் மிக­வும் குறை­வான செல­வில் அதிக லாபம் ஈட்­டக்­கூ­டிய வணி­க­மாக மாறக்­கூ­டும்.  நம் நாட்­டின் வணி­கம் சார்ந்த வர­லாறை புரட்­டிப்­பார்த்­தோ­மா­னால் ஆர்­வ­முள்ள தொழில்­மு­னை­வோர்­க­ளுக்கு சந்­தை­யில் சிறப்­பான வாய்ப்பு இருப்­பது தெரி­ய­வ­ரும். சில­ருக்கு சந்­தையை கைப்­பற்­றும் அள­விற்கு வணி­கம் சார்ந்த புத்­திக்­கூர்மை இருப்­பி­னும் ஆரம்ப கட்ட திட்­டத்தை வகுக்க இய­லா­த­வர்­க­ளாக இருப்­பார்­கள். வால்ட் டிஸ்னி குறிப்­பி­டு­வது போல,  “நீங்­கள் கனவு கண்­டால் நிச்­ச­யம் உங்­க­ளால் சாதிக்க முடி­யும்.” ஆரம்­பக் கட்ட முத­லீ­டாக 10,000 ரூபாய் கொண்டு துவங்க சாத்­தி­ய­மான சில வணி­கங்­கள்

இதோ உங்­க­ளுக்­காக: பயண நிறு­வ­னம் :

இன்று மக்­கள் அதி­கம் பய­ணிக்­கின்­ற­னர். இத­னால் ஊக்­க­முள்ள தொழில்­மு­னை­வோர் இந்­தப் பகு­தி­யில் செயல்­ப­டத் துவங்­கி­னால் சிறப்­பு­ற­மு­டி­யும். ஹோஸ்ட் ஏஜென்­சி­யு­டன் இணைந்து செயல்­பட்­டால் அதிக பல­ன­டை­ய­லாம்.

மொபைல் ரீசார்ஜ் கடை : பலர் ஆன்­லை­னில் ரீசார்ஜ் செய்து வந்­தா­லும் இன்று பலர் கடை­க­ளையே நாடு­கின்­ற­னர். ஒரு சிறிய இடத்தை வாட­கைக்கு எடுத்து அந்­தப் பகு­தி­யில் நெட்­வொர்க் வழங்­கு­வோ­ரு­டன் இணைந்து கமி­ஷன் அடிப்­ப­டை­யில் செயல்­ப­ட­லாம்.

சிற்­றுண்­டி­ய­கம் : உணவு பிரி­விற்­கான சந்தை எப்­போ­தும் சிறப்­பா­கவே இருக்­கும். சிறிய அறையை வாட­கைக்கு எடுத்து தகுந்த அனு­மதி பெற்று துவங்­கி­வி­ட­லாம். வாட­கைக்­கும் மூலப்­பொ­ருட்­க­ளுக்­கும் செல­விட்­டால் போதும்.  

டியூ­ஷன் மையம் : வீட்­டி­லி­ருந்தே செயல்­ப­ட­லாம் என்­ப­தால் எந்­த­வித செல­வும் இல்லை. சமூக ஊட­கங்­கள் வாயி­லா­கவோ, துண்டு பிர­சு­ரங்­கள் வழங்­கியோ, பரிந்­து­ரை­கள் மூல­மா­கவோ உங்­கள் முயற்சி மக்­களை சென்­ற­டைய முயற்­சி­யெ­டுக்க வேண்­டும்.

பழச்­சாறு கடை : தக்க அனு­மதி பெற்­று­விட்­டால் ஒரு கடையை வாட­கைக்கு எடுத்து துவங்­கி­வி­ட­லாம். மூலப்­பொ­ருட்­கள், ஜூஸ் போடு­வ­தற்­கான இயந்­தி­ரம், உத­வி­யா­ளர் நிய­மித்­தால் அவ­ருக்­கான சம்­ப­ளம் ஆகி­ய­வையே இந்த வணி­கத்­திற்­கான செல­வா­கும்.

தையல் பணி : மக்­கள் தாங்­க­ளா­கவே ஆடை­களை வடி­வ­மைக்­கத் துவங்­கி­யுள்­ள­தால் டெய்­லர்­க­ளுக்­கான தேவை பல இடங்­க­ளில் அதி­க­ரித்­துள்­ளது. அறை வாடகை, தையல் இயந்­தி­ரம், மின்­சா­ரம் போன்­றவை இந்த வணி­கத்­திற்­கான செல­வு­க­ளா­கும்.

ஆன்­லைன் பேக்­கரி : தனிப்­பட்ட முறை­யில் மிகக்­கு­றைந்த செல­வில் ஆன்­லைன் பேக்­கிங் சார்ந்த வணி­கத்­தில் ஈடு­பட்டு மூலப்­பொ­ருட்­க­ளுக்கு மட்­டும் செல­விட்டு லாபம் பெற­லாம்.

வலைப்­ப­திவு : டொமெ­யின் பெயர் பெறு­வ­தற்கு முத­லீடு செய்து இணை­யம் வாயி­லாக விளம்­ப­ரப்­ப­டுத்­தி­னால் போதும்.

யூட்­யூப் சேனல் : படைப்­பாற்­றல் திறன் கொண்­ட­வர்­க­ளுக்கு யூட்­யூப் வாயி­லாக வீடி­யோக்­களை பதி­வி­ட­லாம்.

திரு­மண ஏற்­பாட்­டா­ளர்­கள் : இந்த வணி­கத்­தில் ஈடு­பட விரி­வான வண்­ண­ம­ய­மான வலை­த­ளத்தை உரு­வாக்கி வாடிக்­கை­யா­ளர்­களை ஆன்­லைன் வாயி­லாக அணு­க­லாம்.

 ஆன்­லைன் பாடங்­கள் : டொமெ­யின் பெயர், ஹோஸ்­டிங் ஸ்பேஸ், உங்­கள் பாடங்­களை வெளி­யி­டு­வ­தற்கு டிஜிட்­டல் கண்­டெண்ட் நிறு­வ­னத்­திற்கு செலுத்­தும் தொகை ஆகி­ய­வற்­றிற்கு குறைந்த அளவு செல­வி­ட­வேண்­டும்.

போட்­டோ­கி­ராபி : ஏற்­க­னவே உங்­கள் வசம் தொழில்­முறை கேமரா இருக்­கு­மா­னால் தனிப்­பட்ட விதத்­தில் புரா­ஜெக்­டு­களை ஏற்­றுக்­கொள்­ள­லாம். நேரத்தை மட்­டும் செல­விட்­டால் போதும்.

சாலை­யோர புத்­த­கக் கடை : பயன்­ப­டுத்­தப்­பட்ட பழைய புத்­த­கங்­களை வாங்கி மறு விற்­பனை செய்­யும் கடையை அமைத்து சரி­யான நபர்­க­ளின் அறி­மு­கம் இருந்­தால் சிறப்­பிக்­க­லாம்.  

பேய் கதை எழு­த­லாம் : இது முக்­கிய தொழி­லாக பரிந்­து­ரைக்­க­மு­டி­யாது என்­றா­லும் நேரத்தை செல­விட்­டால் இப்­ப­டிப்­பட்ட கதை­களை அதிக தொகை கொடுத்த வாங்­கு­ப­வர்­கள் தயா­ராக உள்­ள­னர்.

தனி நப­ருக்­கேற்ற ஆப­ர­ணங்­கள் : பாரம்­ப­ரி­ய­மாக இதற்­கான தேவை இருந்­து­வ­ரு­வ­தால் உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­டம் நேர­டி­யாக மலிவு விலை­யில் வாங்கி அதிக லாபத்­திற்கு விற்­பனை செய்­ய­லாம்.

விளம்­ப­ரங்­களை உரு­வாக்­கும் பணி : பல கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் விளம்­ப­ரம் சார்ந்த பணியை வெளி­யி­லி­ருந்து பெறு­வ­தால் இதற்­கான ஆலோ­ச­க­ரின் தேவை காணப்­ப­டு­கி­றது. உங்­க­ளது சேவை­களை விளக்­கக்­கூ­டிய வலை­த­ளத்தை உரு­வாக்கி வணிக வாய்ப்­பு­க­ளைப் பெற­லாம்.

தேநீர்­கடை : உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மூலப்­பொ­ருளை கொள்­மு­தல் செய்து தேநீர் விற்­பனை செய்­ய­லாம். கடைக்­கான பெஞ்ச் மற்­றும் டேபிளை வாங்க செல­விட்­டால் போது­மா­னது.  

சமூக ஊடக உத்­தி­யி­ய­லா­ளர் : பல நிறு­வ­னங்­கள் சமூக ஊட­கங்­க­ளில் தொடர்ந்து தங்­க­ளது செயல்­பாட்டை மக்­க­ளி­டையே கொண்டு சேர்க்­கும் பணி­யில் மும்­மு­ர­மாக இருப்­ப­தால் வணிக வாய்ப்பு அதி­கம் உள்­ளது.

பேஷன் டிசை­னிங் : பழைய புட­வை­களை புத்­தம்­பு­தி­தாக தனித்­து­வ­மாக மாற்­றும் பணி­யில் ஈடு­பட்டு பலர் சிறப்­பித்­துள்­ள­னர். இவ்­வாறு வடி­வ­மைப்­பிற்­கான பொருட்­கள் வாங்­கு­வ­தற்­கும் பணி­யி­டத்­திற்­கும் தேவை­யான முத­லீடு செய்­ய­வேண்­டும்.

ஆன்­லைன் உடற்­ப­யிற்சி பயிற்­சி­யா­ளர்­கள்: இன்று ஆரோக்­கி­யம் சார்ந்த விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ள­போ­தும் பல­ரால் வெளி­யில் சென்று வகுப்­பு­க­ளில் சேர முடி­ய­வில்லை. எனவே இதற்­கான பிரத்­யேக இடத்­திற்கு செல­வி­டா­மல் ஆன்­லைன் வாயி­லாக பயிற்­சி­ய­ளித்து வரு­வாய் ஈட்­ட­லாம்.

கிரா­பிக் டிசை­னிங் : இதற்­கான பிரத்­யேக வச­தி­கள் உங்­க­ளி­டம் இருக்­கு­மா­னால் உங்­க­ளது புரா­ஜெக்ட் குறித்து மக்­க­ளி­டையே விளம்­ப­ரப்­ப­டுத்­தி­னால் இந்த சேவைக்­கான தேவை­யி­ருப்­போர் உங்­களை அணு­கு­வார்­கள்.

நட­னம் / இசை பள்ளி : இதற்­குத் தேவை­யான இடத்தை வாட­கைக்கு எடுத்­துக் கொள்­ள­வேண்­டும். இது தனி­ந­பர் திறன் சார்ந்­தது என்­ப­தால் அதிக பரிந்­து­ரை­கள் வாயி­லா­கவே மாண­வர்­கள் சேர்க்கை நடை­பெ­றும்.

வச­னம் எழு­து­தல் : இதற்­கான பிரத்­யேக இடம் தேவை­யில்­லாத கார­ணத்­தால் நேரம் மட்­டும் செல­விட்­டால் போதும். அதே சம­யம் குறிப்­பிட்ட கால­கெ­டு­விற்­குள் முடிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

உணவு டெலி­வரி : இன்று பலர் வீட்டு உண­வையே விரும்­பு­கி­றார்­கள் என்­றா­லும் அதற்­கான நேரம் செல­விட இய­லா­மல் பலர் சிர­மப்­ப­டு­கின்­ற­னர். அன்­றா­டம் வீட்­டில் சமைக்­கும் உண­வின் அளவை சற்று கூடு­த­லாக செய்­வ­தன் மூலம் இந்த வணி­கத்­தில் ஈடு­ப­ட­லாம்.

பழு­து­பார்க்­கும் சேவை : மேற்­கொள்ள விரும்­பும் குறிப்­பிட்ட பணிக்­குத் (எலக்ட்­ரி­ஷி­யன், பிளம்­பர்) தேவை­யான உப­க­ர­ணங்­க­ளுக்கு மட்­டும் செல­வி­ட­வேண்­டும்.

செல்­ல­பி­ரா­ணி­கள் பரா­ம­ரிப்பு : பணி நிமித்­த­மாக வெளியே செல்­லும் பலர் செல்­லப்­பி­ரா­ணியை பரா­ம­ரிப்­ப­தில் சிக்­கலை சந்­திக்­கின்­ற­னர். யாரும் அதி­கம் செயல்­ப­டாத இந்­தப் பிரி­வில் வணிக வாய்ப்­பு­கள் இருப்­ப­தால் வலை­த­ளத்தை உரு­வாக்கி செயல்­ப­டத் துவங்­க­லாம்.

ஆய்வு சார்ந்த வணி­கம் : புதி­தாக அறி­மு­க­மா­கும் ஸ்டார்ட் அப்­க­ளும் சிறு நிறு­வ­னங்­க­ளும் ஆய்­வுப் பணியை தனிப்­பட்ட ஆய்­வா­ளர்­க­ளி­ட­மி­ருந்து பெறு­வ­தால் நேர­டி­யா­கவோ அல்­லது உத­வி­யா­ளரை நிய­மித்தோ சேவை­ய­ளித்து வரு­வாய் ஈட்­ட­லாம்.

டிரக் சேவை : டிரக் வாடகை, நக­ரின் முக்­கிய பகு­தி­க­ளுக்கு டிரைக்கை செலுத்த ஓட்­டு­ன­ருக்­கான சம்­ப­ளம் போன்­றவை இதி­லுள்ள செல­வு­க­ளா­கும்.

விளை­யாட்டு பயிற்சி : குறிப்­பிட்ட விளை­யாட்­டில் தேர்ந்­த­வர்­கள் அதை ஆர்­வ­மாக கற்­கத் துவங்­கு­வோ­ருக்கு பயிற்­சி­ய­ளிக்­க­லாம்.

மொழி­பெ­யர்ப்பு சேவை : உல­க­ம­ய­மாக்­கல் கார­ண­மாக இந்த பிரி­வில் வாய்ப்­பு­கள் அதி­கம் காணப்­ப­டு­கி­றது. குறிப்­பிட்ட மொழியை கற்­ப­தற்­கான பயிற்­சிக்கு செல­விட்டு நிபு­ணத்­து­வம் பெற­வேண்­டி­யது அவ­சி­யம்.

ஆலோ­சனை சேவை : குறிப்­பிட்ட துறை சார்ந்த நிபு­ணத்­து­வம் இருந்­தால் அந்த துறை­யில் ஆலோ­சனை வழங்கி வரு­வாய் ஈட்­ட­லாம்.

சுற்­றுலா வழி­காட்டி :  சுற்­றுலா சார்ந்த ஏற்­பா­டு­களை செய்து வழி­காட்­டும் சேவை­யில் இணை­ய­த­ளம் வாயி­லா­கவே ஈடு­ப­ட­லாம் என்­ப­தால் அதற்­கான பிரத்­யேக வலை­த­ளத்தை நிர்­வ­கித்­தால் போதும்.

சமை­யல் வகுப்­பு­கள் : ஆன்­லை­னில் யூட்­யூப் வாயி­லாக வகுப்­பெ­டுக்­க­லாம். அல்­லது ஆப்­லை­னில் ஸ்டூடி­யோவை புக் செய்து வகுப்­பெ­டுக்­க­லாம். இரண்­டி­லுமே குறைந்த செல­வில் செயல்­ப­ட­மு­டி­யும்.

ஒவ்­வொரு வணிக வாய்ப்­பி­லும் அதற்கே உரிய ஆபத்­து­க­ளும் தடை­க­ளும் உள்­ளது. எனி­னும் வெற்­றி­ய­டை­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­க­ளும் அடங்­கி­யுள்­ளது. இறு­தி­யாக உங்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கும் ஹென்ரி போர்ட் வரி­கள்: “அனைத்­தும் உங்­க­ளுக்கு எதி­ராக இருக்­கும்­போது ஒன்றை மட்­டும் நினை­வில் கொள்­ள­வேண்­டும். விமா­னம் காற்­றுக்கு எதி­ராக செயல்­ப­டுமே தவிர காற்­று­டன் அல்ல.”