ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 5–2–2020

பதிவு செய்த நாள் : 05 பிப்ரவரி 2020

ஆர்மோனியம் இல்லாமல் இசையமைப்பார்!

காலை ஐந்து மணிக்கே எழுந்­து­வி­டு­வார். சிறிது நேரம் வாக்­கிங், குளித்து முடித்து பூஜை செய்­வார். பிடித்த இடம் பூஜை அறை­தான். இளை­ய­ராஜா செய்தி நாளி­தழ்­களை படிக்­கும் பழக்­கம் இல்­லா­த­வர். தனது அம்­மா­வின் படத்­தைத் தொட்டு வணங்கி விட்­டுத்­தான் வெளியே புறப்­ப­டு­வார்.

* இளை­ய­ராஜா முன்பு அசைவ உணவு சாப்­பிட்டு வந்­தார். பிறகு சுத்த சைவ உண­வுக்கு மாறி­விட்­டார். அது­வும் பத்­திய உண­வு­தான். காய்­க­றி­கள் நிறைய சேர்த்­துக் கொள்­வார். சுண்­டல், தட்­டைப்­ப­யிறு ஆகி­ய­வற்றை விரும்­பிச் சாப்­பி­டு­வார். முன்­பெல்­லாம் மொச்­சைப் பயிறு கலந்த கரு­வாட்­டுக் குழம்பு விரும்­பிச் சாப்­பி­டு­வார். பிறகு அதை­யும் விட்­டு­விட்­டார்.

* இளை­ய­ரா­ஜா­வின் மனைவி பெயர் ஜீவா. ராஜா­வின் சொந்த அக்­காள் மகள். அத­னால் உரி­மை­யும் பாச­மும் அதி­கம். ராஜா­வுக்கு மூன்று குழந்­தை­கள். மகன்­கள் கார்த்­தி­கே­யன், யுவன். மகள் பவ­தா­ரிணி. மூவ­ருக்­கும் இசை­யில் அதீ­த­மான ஈடு­பாடு. பியானோ, வய­லின், வீணை ஆகிய இசைக்­க­ரு­வி­களை இனி­மை­யாக இசைப்­பார்­கள். இந்த மூவ­ரும் இன்று இசை­ய­மைப்­பா­ளர்­கள். இதில் யுவன் தந்­தை­யின் பெயர் சொல்­லும் பிள்­ளை­யாக முன்­ன­ணி­யில் இருக்­கி­றார்.

* முன்­பெல்­லாம் கிடார், தபே­லாக் கலை­ஞர்­கள் உத­வி­யு­டன் ஆர்­மோ­னி­யத்தை இசைத்து டியூன் உரு­வாக்­கு­வார்.அதற்­குப் பிறகு ஆர்­மோ­னி­யத்­தில் வாசித்­துப் பார்ப்­ப­தில்லை. கண்­களை மூடி சிந்­திப்­பார். இசை வடி­வங்­கள் அவர் மூளை எனும் கம்ப்­யூட்­ட­ரில் இருந்து புறப்­ப­டு­கின்­றன. அவற்றை அப்­ப­டியே இசைக் குறிப்­பு­க­ளாக எழு­தி­வி­டு­வார். ஆர்­மோ­னி­யம் இல்­லா­மல் இசை­ய­மைக்­கும் இந்த ஆற்­றல், இந்­திய சினிமா இசை­ய­மைப்­பா­ளர்­க­ளில் இவ­ரி­டத்­தில் மட்­டுமே இருக்­கி­றது என்­பது பிர­மிப்­பான உண்மை .

* இளை­ய­ரா­ஜா­வி­டம் ஒரு வழக்­கம். அவர் யாரோடு பேசி­னா­லும் யாருக்­கும் கை கொடுக்க மாட்­டார். அதற்­குப் பின்­ன­ணி­யில் சென்­டி­மெண்ட் இருப்­ப­தாக ஒரு முன்­னணி இயக்­கு­ந­ரின் கமெண்ட்.

* இசைக் குறிப்­பு­களை ஒத்­தி­கைக்­காக உத­வி­யா­ள­ரி­டம் அனுப்­பு­வார். சிறிது நேரம் தியா­னம் செய்­வார். பிறகு நல்ல பாட­கர்­க­ளைக் பக்­திப் பாடல்­கள் பாடச் சொல்­லிக் கேட்டு ரசிப்­பார்.

* ராஜா தான் இசை­ய­மைத்த படங்­க­ளின் வெள்­ளி­விழா அல்­லது நூறா­வது நாள் விழாக்­க­ளில் கலந்து கொள்­ள­மாட்­டார். முன்பு ரொம்ப பிசி­யாக இருந்­த­தால் செல்­வ­தில்லை. வீட்­டில் சீல்டு வைக்க எனத் தனி­யறை வைக்­க­வில்லை.

* இளை­ய­ரா­ஜா­வுக்கு இசை சம்­பந்­த­மான புத்­த­கங்­கள் படிப்­பது ரொம்ப பிடிக்­கும். அது மட்­டு­மல்ல; சினிமா தொழில்­நுட்­பம் சார்ந்த புத்­த­கங்­க­ளை­யும் விரும்­பிப் படிப்­பார். சினிமா கலை­ஞர்­க­ளில் அதி­கப் புத்­த­கங்­கள் படிக்­கும் மிகச் சில­ரில் ராஜா­வும் ஒரு­வர். சமீப கால­மாக ரம­ண­ரின் நூல்­களை விரும்­பிப் படிக்­கி­றார். ரம­ண­ரின் தத்­து­வங்­க­ளில் அதிக ஈடு­பாடு கொண்­டி­ருக்­கி­றார்.

* கதை, கவிதை, கட்­டுரை எழு­த­வேண்­டும் என்­ப­தில் நிறைய ஆர்­வம் கொண்­ட­வர் ராஜா.

மத்­திர தந்­தி­ரக் கதை­கள் எழு­த­வும் படிக்­க­வும் இளை­ய­ரா­ஜா­வுக்கு மிக­வும் இஷ்­ட­மா­னது.

தன்­னைப் பற்­றிய மற்­றும் இசை சார்ந்த விஷ­யங்­கள் குறித்த புத்­த­கங்­கள் சில எழு­தி­யி­ருக்­கி­றார்.

* இளை­ய­ரா­ஜா­வுக்­குப் புகைப்­ப­டக் கலை­யில் ஆர்­வம் உண்டு. பென்­சில் டிரா­யிங் படம் வரை­வ­துண்டு. தம்மை மாறு­பட்ட கோணங்­க­ளில் பிறர் எடுத்த வித்­தி­யா­ச­மான புகைப்­ப­டங்­களை வாங்­கிப் பத்­தி­ரப்­ப­டுத்தி வைத்­துக் கொள்­வார். தற்­போது தன்­னைப் புகைப்­ப­டம் எடுப்­ப­தைத் தவிர்த்­து­வி­டு­கி­றார். தாம் கிளிக் செய்த இயற்கை காட்சி, சுவாமி படங்­களை வீட்­டில் மாட்டி வைத்­தி­ருக்­கி­றார்.