சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 429 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 05 பிப்ரவரி 2020

நடி­கர்­கள் : சிவா, வசுந்­தரா காஷ்­யப், மனோ­பாலா, மீரா கிருஷ்­ணன் மற்­றும் பலர்.

இசை : யதீஷ் மஹா­தேவ், ஒளிப்­ப­திவு : சர­வ­ணன், எடிட்­டிங் : டி.எஸ். சுரேஷ், தயா­ரிப்பு : 360டிகிரி பிலிம் கார்ப், திரைக்­கதை, இயக்­கம் : கிருஷ்­ணன் ஜெய­ராஜ்.

டப்­பிங் ஆர்ட்­டிஸ்­டாக இருக்­கும் சிவா (சிவா) காதல் மற்­றும் கல்­யா­ணத்­தில் நம்­பிக்கை இல்­லா­த­வன். சிவா­வின் லட்­சி­யமே வோல்க்ஸ்­வே­கன் கார் வாங்க வேண்­டும் என்­ப­து­தான். தனது அம்­மா­வின் (மீரா கிருஷ்­ணன்) கட்­டா­யத்­தால் விருப்­ப­மில்­லா­ம­லேயே திரு­ம­ணத்­திற்கு சம்­ம­திக்­கி­றான். ரிப்­போர்ட்­ட­ராக இருக்­கும் மணப்­பெண் அஞ்­ச­லியை (வசுந்­தரா காஷ்­யப்) தெய்வ நம்­பிக்­கை­யுள்ள குடும்­பப்­பாங்­கான பெண்­ணாக நினைக்­கி­றார்­கள். சிவா­வின் நண்­பன் ஒரு­வ­னின் திரு­ம­ணத்­தில் இரு­வ­ரும் சந்­திக்­கி­றார்­கள். திரு­ம­ணத்தை நிறுத்­தும்­படி மிரட்­டும் சிவா­விற்­காக அந்த நண்­பனே அஞ்­ச­லியை திரு­ம­ணத்­திற்கு அழைக்­கி­றான். சிவா­வின் நினைப்­பிற்கு மாறாக உண்­மை­யில் துணிச்­ச­லான பெண்­ணான அஞ்­ச­லி­யும் அந்த திரு­ம­ணத்தை தடுக்க நினைக்­கி­றாள். திரு­ம­ணத்­தில் விருப்­ப­மில்­லாத சிவா­வும் அஞ்­ச­லி­யும் பிரி­கி­றார்­கள்.  அஞ்­சலி தான் கர்ப்­ப­மாக இருப்­ப­தா­க­வும், சிவா கிரிக்­கெட் விளை­யாட்­டின் போது விபத்­தில் தான் ஆண்மை இழந்­த­தா­க­வும் பெற்­றோ­ரி­டம் பொய் கூறி நிச்­ச­யித்த திரு­ம­ணத்தை தடுத்து விடு­கி­றார்­கள். இரு­வ­ரும் நிச்­ச­யம் முறிந்­ததை பப்­பில் கொண்­டா­டு­கி­றார்­கள். அடுத்த நாள் காலை­யில் இரு­வ­ரும் ஓட்­டல் அறை­யில் ஒன்­றாக இருப்­பதை அறிந்து அதிர்ச்­சி­ய­டை­கி­றார்­கள்.  சிவா­வின் நண்­ப­னான கவு­ரி­யின் திட்­ட­மாக இருக்­கும் என்று சந்­தே­கிக்­கி­றார்­கள். சிசி­டிவி காட்­சி­கள் மூலம் அது ஓர் சேட்­டின் ஏற்­பாடு என்று தெரி­கி­றது. அந்த பிரச்னை தீர்ந்­த­தும் சிவா அஞ்­ச­லியை அவ­ளது வீட்­டில் விட்­டுச்­செல்­கி­றான். அஞ்­ச­லிக்கு உடன் பணி­பு­ரி­ப­வ­ரு­டன் திரு­மண ஏற்­பாடு நடக்­கி­றது.

சிவா­வின் தாயை சந்­திக்­கும் புரோக்­கர் ராஜேஷ் கண்ணா (மனோ­பாலா) ஒரு கேம் ஷோ நடக்க இருப்­ப­தா­க­வும் வெற்றி பெறு­ப­வர்­க­ளுக்கு வோல்க்ஸ்­வே­கன் கார் பரிசு என்­றும் கூறு­கி­றார். தனது இலட்­சிய காருக்­காக சிவா அஞ்­ச­லி­யு­டன் ஜோடி­யாக அந்த போட்­டி­யில் கலந்து கொள்­கி­றான். அனைத்து சுற்­றுக்­க­ளி­லும் இரு­வ­ரும் வெல்­கி­றார்­கள். இத­னி­டையே அஞ்­சலி சிவாவை நேசிக்­கத் தொடங்­கு­கி­றாள். பரி­சாக கிடைக்­கும் காருக்­கா­கத்­தான் சிவா போட்­டி­யில் கலந்து கொண்­டதை அறிந்து வருந்­தும் அஞ்­சலி அவனை பிரி­கி­றாள். நண்­பர்­க­ளின் அறி­வு­ரை­யால் உண்­மையை உண­ரும் சிவா அஞ்­ச­லி­யின் காதலை புரிந்து கொள்­கி­றான்.

அஞ்­ச­லி­யு­டன் சேரு­வ­தற்­காக ஒரு நாடக நடி­கையை தனக்கு மணப்­பெண்­ணாக ஏற்­பாடு செய்ய திட்­டம் போடு­கி­றான். இவ­னது திட்­டத்தை தெரிந்து சிவாவை கடத்­தும் ராஜேஷ் கண்ணா, பின்­னர் அவனை விடு­வித்து அஞ்­ச­லிக்கு இன்­னொ­ரு­வ­ரு­டன் திரு­ம­ணம் என்று கூறு­கி­றார். ரிஜிஸ்­டர் ஆபீ­சில் அஞ்­ச­லி­யின் திரு­ம­ணத்­தைப் பார்க்­கும் சிவா மன­மு­டைந்து பார்க்­குக்கு வரு­கி­றான். அங்கு சிவா முன்பு பிளாஷ்­மாப் நட­னம் நடக்­கி­றது. சிவாவை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­வ­தற்­காக அஞ்­ச­லி­யோடு மற்­ற­வர்­க­ளும் போட்ட திட்­டம் வெளிப்­ப­டு­கி­றது. சிவா­வும் அஞ்­ச­லி­யும் திரு­ம­ணம் செய்து மகிழ்ச்­சி­யோடு வாழ்­கி­றார்­கள்.