ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 29–1–2020

பதிவு செய்த நாள் : 29 ஜனவரி 2020

அடகு வைத்த மைக் ஆம்ளிபர்களை மீட்க சென்ற போது...!

இள­மை­யில் இவ­ரின் உள்­ளத்­தி­லும் உணர் விலும் நாட்­டுப்­புற இசை கலந்­து­விட கார­ண­மா­னது பண்­ணை­பு­ரத்து தோட்ட வேலை செய்­யும் பெண்­க­ளும், கிரா­மத்து வயல்­வெ­ளி­யில் நாற்று நடும் பெண்­க­ளும் பாடும் மண்­ணின் மண­முள்ள பாடல்­கள்­தான் எனச் சொல்­ல­லாம்.

* ஆற்­றில் நீச்­ச­ல­டித்­தும் பட்­டம் பறக்க விட்­டும் விளை­யா­டும் சின்ன வய­தில் மூங்­கில்­களை வெட்டி, சின்­னச் சின்­ன­தாய் புல்­லாங்­கு­ழல்­கள் செய்து வாசித்து மகிழ்ந்­த­வர் இளை­ய­ராஜா.

* பாவ­லர் வர­த­ரா­ஜன் இருந்­த­வரை அவர் குழு­வில் இருந்த சகோ­த­ரர்­கள். பாவ­ல­ரின் மறை­வுக்­குப் பின் சென்­னைக்கு சினிமா வாய்ப்பு தேடி இசை சகோ­த­ரர்­கள் பட்­டி­ணப் பிர­வே­சம் செய்­த­னர். கன­வு­க­ளு­டன் வந்­த­வர்­க­ளுக்கு வசந்­தம் எளி­தில் கிட்­ட­வில்லை. வாய்ப்பு தேடி அலைச்­சல், வறுமை என நாட்­கள் நகர்ந்­தன. எப்­போ­தா­வது கிட்­டும் கச்­சேரி வாய்ப்பு, அவ்­வப்­போது தொண்டை நனைத்­துக் கொள்­ள­வும், கால் வயிற்­றுக்­கே­னும் உத­வி­யது.

* வச­தி­கள் வரும்­போது விரி­சல்­கள் வரும். ஆனால் வறுமை சேர்ந்­தி­ருக்­க­வும், சேர்ந்து உழைக்­க­வும் உத்­வே­கம் கொடுக்­கும். வறு­மை­யி­லும் பாவ­லர் சகோ­த­ரர்­க­ளி­டம் ஒரு அபூர்­வ­மான பழக்­கம் இருந்­தது. சாப்­பிட்­டால் மூவ­ரும் சேர்ந்தே சாப்­பி­டு­வது, இரு­வர் பட்­டினி கிடக்க வெளியே சென்ற ஒரு­வ­ருக்கு விருந்தே கிடைத்­தா­லும் மற்ற மூவரை விட்டு சாப்­பி­டு­வ­தில்லை. அப்­போது அவர்­கள் என்­ன­தான் பசி­யால் காய்ந்­தி­ருந் தாலும் அவர்­க­ளின் நம்­பிக்கை மட்­டும் காயா­ம­லி­ருந்­தது.

* சென்­னைக்கு வந்த கால­கட்­டங்­க­ளில் சகோ­த­ரர்­கள் தனித்­த­னி­யா­கச் சென்று சம்­பா­தித் தாலும் பணம் பொது­வா­கவே வைக்­கப்­பட்­டது. அறை­யில் இருந்த 'லட்­சுமி' படத்­தின் முன்­னால் பணத்தை வைத்து விடு­வார்­கள். அண்­ணன் பாஸ்­கர்­தான் தம்­பி­கள் ராஜையா, அமர்­சிங் இரு­வ­ருக்­கும் சேர்த்து செலவு செய்­வார். வரவு- செலவு துறை அவ­ரி­டமே இருந்­தது. அன்று பணம் போட்டு வைத்த 'லட்­சுமி' படம் இன்­ன­மும் இளை­ய­ரா­ஜா­வின் பூஜை அறை­யில் இருக்­கி­றது.

* கிரா­மத்து ராஜையா, தன்­ராஜ் மாஸ்­ட­ரி­டம் மேல்­நாட்டு இசை கற்க ஆசைப்­பட்­டார். அதற்கு வசதி வேண்­டுமே என்ன செய்ய, ஒரு­நாள் துணிந்து தாங்­கள் கச்­சே­ரி­யில் பயன்­ப­டுத்தி வந்த மைக்­கு­கள், ஆம்ப்­ளி­ப­யர் ஆகிய சாத­னங்­களை அடகு வைத்­த­னர். வசதி வந்­த­பி­றகு அடகு வைத்­த­வை­களை மீட்க சென்­ற­போது ஏமாற்­றம்­தான் மிஞ்­சி­யது. அட­குக்­கடை பல­ச­ரக்­குக் கடை­யாக மாறி இருந்­தது. இந்த இழப்பு ராஜா­வின் மன­தில் ஒரு ஓர­மாக இருக்­கி­றது.

* ராஜையா வாய்ப்பு கேட்­டுச் சென்ற இடத்­தில் இசைக்­க­ரு­வி­கள் இல்­லா­மல், மேஜை­யில் தாளம் போட்­டுப் பாடிக் காட்­டி­னார். ராஜை­யா­வின் திற­மையை உணர்ந்த தயா­ரிப்­பா­ளர், பிர­பல கதை வச­ன­கர்த்தா பஞ்சு அரு­ணாச்­ச­லம் அவரை தனது படத்­தின் இசை­ய­மைப்­பா­ள­ராக முடிவு செய்­தார். ராஜையா என்ற பெயரை சினி­மா­வுக்­காக ராஜா என்று மாற்ற நினைத்­தார். திரை­யு­ல­கில் ஏற்­கெ­னவே ஏ.எம். ராஜா பாட­க­ரா­வும் இசை­ய­மைப்­பா­ள­ரா­க­வும் இருந்­த­தால் இவ­ருக்­குப் பஞ்சு அரு­ணா­ச­லம் வைத்த பெயர்­தான் ‘இளை­ய­ராஜா',

* இளை­ய­ரா­ஜா­வின் பூஜை­ய­றை­யில் பல­வி­த­மான தெய்­வப்­ப­டங்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுக்கு நடுவே அவ­ரது அருமை அன்னை சின்­னத்­தாயி அம்­மா­ளின் படம் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இளை­ய­ரா­ஜா­வுக்­குத் தாய்­மீது பாசம் அதி­கம். அவர் பாடிய பாடல்­க­ளில் தாய்ப் பாசத்தை வெளிப்­ப­டுத்தி இருப்­பார். அவர் அதி­க­மா­கப் பாடி­ய­தும் தாய்ப் பாசத்­தைப் பற்­றிய பாடல்­க­ளைத்­தான். அம்மா சென்­டி­மெண்ட் கொண்­ட­வர்.