பாலியல் அடிமைகளை காப்பாற்றிய ஊழியர்

பதிவு செய்த நாள் : 25 ஜனவரி 2020

போர்ச்சுகலில் பர்கர் விற்பனை செய்யும் கடை ஊழியரிடம் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் துண்டுச் சீட்டு கொடுத்துள்ளார். அதில் “உதவி செய்யுங்கள். என்னை கடத்தி வைத்திருக்கிறார்கள்” என்று எழுதி இருந்தது. அதை படித்த ஊழியர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த போலீசார் பெர்னான்டாஸ் (35) என்ப வரை கைது செய்துள்ளனர். இந்த பெர்னான்டாஸ் கனடா, போர்ச்சுகீசிய இரட்டை குடியுரிமை பெற்றவர். இவர் மதுபான விடுதியில் சந்தித்த இரண்டு பெண்களை போர்ச்சுகலில் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளார்.

அங்கு அவர்களை அறை யில் அடைத்து வைத்து மிரட்டி வன்புணர்வு செய்துள்ளார். அந்த இரண்டு பெண்களில் ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். மற்றொருவர் பிரேசிலைச் சேர்ந்தவர். ஒரு நாள் பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணை ஷாப்பிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் அங்கிருந்த பர்கர் உணவக ஊழியரிடம், பிரிட்டனைச் சேர்ந்த பெண் தங்களது நிலையை விளக்கி உதவி கேட்டு துண்டுச் சீட்டு கொடுத்துள்ளார். அந்த ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் பெர்னான்டஸை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெர்னான்டாஸ் கனடாவில் அவரது வீட்டின் அருகே நடந்த ஒரு கொலை, கொள்ளை சம்பவங்களிலும் தொடர்பு உடையவர். சிறையில் இருந்தும் தப்பித் துள்ளார். மீட்கப்பட்ட இரண்டு பெண்களும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்டனர். பெர்னான்டாஸ் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.