ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி முறையானதே: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020 16:58

ராசிபுரம்,

2016ம் ஆண்டில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரோஜா எம்எல்ஏவாக வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் சரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதையடுத்து அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

சரோஜாவின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி தொடர்ந்த மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.