சென்னையில் உள்ள அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை இடமாற்ற பரிசீலிப்பது அதிர்ச்சியளிக்கிறது: மு.க. ஸ்டாலின்

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020 13:28

சென்னை,

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை இடமாற்ற மத்திய அரசு பரிசீலிப்பது அதிர்ச்சியளிக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில்,

அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை, அதன் அமைவிடமான சென்னையிலிருந்து மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

அத்தகைய எந்தவொரு நடவடிக்கையும் நியாயமற்றது என்பதுடன் சென்னை மற்றும் தமிழக நலன்களுக்கு எதிரானது. 

இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.