தன்னம்பிக்கை இருந்தா கம்பீரமா வாழலாம்!– வித்யா பிர­தீப்

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020

“கம்­பீ­ர­மாக வாழ்­ற­துக்கு என்ன செய்ய ணும்னு இன்ஸ்­டா­கி­ராம்ல நிறைய பொண்­ணுங்க  என்னை கேட்­கி­றாங்க. அதுக்கு என் பதில் - முதல்ல நம்மை நாமே நேசிக்­க­ணும், தன்­னம்­பிக்கை இருந்­தாலே கம்­பீ­ர­மாக வாழ முடி­யும்!” என்­கி­றார் வித்யா பிர­தீப். “நாயகி” சீரி­ய­லில்  ‘ஆனந்­தி’­­­­யாக வலம் வரு­ப­வர் அவர்­தான். ‘தடம்’ படத்­தி­லும் நடித்­தி­ருக்­கி­றார்.

  பேச்­சு­வாக்­கில் போன வரு­டம் தனக்கு எப்­படி இருந்­தது என்­பதை பற்றி அவர் சொன்­ன­தா­வது:-

  “இதுக்கு முன்­னாடி இல்­லாத அள­வுக்கு போன வரு­ஷம் நிறைய பேர் என்னை லவ் பண்­றதா சொன்­னாங்க. ‘நாயகி’ ரசி­கர்­கள் பல பேர் என் மேலே இருக்­கிற அன்­பிலே நேர்­ல­யும் நெட்­ல­யும் அவங்­க­ளோட காதலை என்­கிட்ட வெளிப்­ப­டுத்­தி­னாங்க. சில பேரு எனக்கு பெரிய லெட்­டர் எழுதி அனுப்­பு­வாங்க. இன்­னும் சில பேரு, “உங்­களை நல்­ல­ப­டியா பார்த்­துக்­கு­வேன். தயவு செஞ்சு ஓகே சொல்­லுங்க!”ன்னு இன்ஸ்­டா­கி­ராம்ல மெசேஜ் அனுப்­பு­வாங்க. இவங்­கள்­லாம் பர­வா­யில்லே. ஒருத்­தர் தன்­னோட குடும்­பத்­தி­னர், மொத்த சொத்து விவ­ரத்தை எல்­லாம் எழுதி அனுப்பி, “என்னை கல்­யா­ணம் பண்­ணிக்­குங்க. உங்­க­ளுக்கு உண்­மையா இருப்­பேன்!”னு சொல்­லி­யி­ருந்­தார்.

  போன வரு­ஷத்­தி­லே­தான் என் வாழ்க்­கை­யிலே ரொம்ப பெரிய திருப்­பு­முனை ஏற்­பட்­டுச்சு. ’நாய­கி’­­­­யிலே நடிக்­கி­ற­துக்கு சான்ஸ் கிடைச்­ச­தால தமிழ் ஆடி­யன்ஸ்­கிட்ட டைரக்டா ‘ரீச்’­­­­சாக முடிஞ்­சிச்சு. அதே மாதிரி ‘தடம்’ பட­மும் போன வரு­ஷம்­தான் ரிலீ­சாச்சு. அதிலே ஒரு கேரக்­டர் ரோல்­ல­தான் நடிச்­சி­ருந்­தேன். இப்போ ரெண்டு படங்­கள்ல ஹீரோ­யி­னா­க­வும், மூணு படங்­கள்ல நல்ல கேரக்­டர்­கள்­ல­யும் நடிக்­கி­றேன். நானே எதிர்­பார்க்­காத பல நல்ல விஷ­யங்­கள் போன வரு­ஷம் நடந்­துச்சு. அதே சம­யத்­திலே, சில கெட்ட விஷ­யங்­க­ளும் நடக்­காம இல்லே. நம்ம வாழ்க்­கை­யிலே நடக்­கிற விஷ­யங்­க­ளுக்கு நாம எப்­படி ரீயாக்ட் பண்­றோம்ங்­கி­றதை பொறுத்­துத்­தான் சந்­தோ­ஷ­மும், துக்­க­மும் அமை­யும். நான் எதுக்­குமே பெருசா ரீயாக்ட் பண்­றது கிடை­யாது. மன­ச­ள­விலே பாதிப்­ப­டைஞ்­சா­லும் பக்­கு­வமா கடந்து போயி­டு­வேன், புக்ஸ் படிப்­பேன். தாழ்வு மனப்­பான்மை ஏற்­ப­டும் போது என் வாழ்க்­கை­யிலே நடந்த பாசிட்­டிவ் விஷ­யங்­களை நினைச்சு எனக்கு நானே ஆறு­தல் சொல்­லிக்­கு­வேன். என் வாழ்க்கை போகிற திசை­யிலே நானும் டிரா­வல் பண்­றேன்.”