நடுவர், சினிமா பிரபலம் கிடையாது!

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020

வேந்­தர் டிவி­யில் ஞாயி­று­தோ­றும் மாலை 5 மணிக்கு ‘ஆடாத ஆட்­ட­மெல்­லாம்’ ஒளி­ப­ரப்­பா­கி­றது.

திறமை வாய்ந்த புதிய நடன கலை­ஞர்­களை உரு­வாக்­கு­வ­தும், ஒரு குறிப்­பிட்ட நேரத்­திற்­குள் தங்­க­ளது நட­னத்­தின் மூல­மாக மக்­களை மகிழ்­விக்க செய்­வ­தும்­தான் இந்த நிகழ்ச்­சி­யின் நோக்­கம். எந்த தலை­மு­றை­யி­ன­ரும், எல்லா வய­தி­ன­ரும் தங்­க­ளது நடன திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தளம் அமைத்­துக் கொடுக்­கும் வகை­யில் இந்த நிகழ்ச்சி உரு­வா­கி­றது.

இந்த நிகழ்ச்­சி­யில் போட்­டி­யா­ளர்­க­ளின் திற­மை­களை மார்க் போட்டு அள­வி­டு­வ­தற்­கென சிறப்பு நடு­வர்­களோ அல்­லது சினிமா பிர­ப­லங்­களோ கலந்து கொள்­ள­வில்லை. மாறாக, இதில் பங்­கு­பெ­றும் போட்­டி­யா­ளர்­களே தங்­க­ளது திற­மை­களை வெளிப்­ப­டுத்தி தங்­க­ளைத்­தாங்­களே ஊக்­கப்­ப­டுத்தி முன்­னுக்கு வரும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகை­யில் இதை ஒரு புதிய முயற்சி என்று சொல்­ல­லாம்.