சூரஜுக்கு உண்மை தெரியவரும்...

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020

ராஜ் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ‘பூவிழி வாச­லிலே’ ஒளி­ப­ரப்­பா­கி­றது.

தனது தவ­றான புரி­த­லின் வழக்­கில் போலீஸ்­கா­ரர் ரன்­வீ­ரு­டன் தான் ஓடி­விட்­ட­தாக கண்­மணி, சூர­ஜி­டம் தெரி­வித்­ததை அடுத்து தேன்­மொ­ழியை, சூரஜ் கொல்ல முற்­ப­டு­கி­றான். அதே சம­யம் சூரஜ், தான் கரு­வுற்று இருப்­பதை அறிந்­தால் கோபப்­ப­டு­வானா அல்­லது சந்­தோ­ஷப்­ப­டு­வானா என சிக்­க­லில் தேன்­மொழி தவிக்­கி­றாள். இந்­நி­லை­யில் கண்­மணி, சூர­ஜை­யும், தேன்­மொ­ழி­யை­யும் ஒன்­று­சே­ர­வி­டா­மல் முற்­ப­டு­கி­றாள். ஒவ்­வொரு முறை­யும் தேன்­மொ­ழி­யும், சூரஜ் நெருங்­கும் நிலை­யில் கண்­மணி திட்­டம் போட்டு தடுத்து வரு­கி­றாள். இந்­நி­லை­யில் சூரஜ் தவிப்­பதை கண்டு அவ­னது தாய் தேஜஸ்­வினி மிக­வும் வருந்­து­கி­றாள்.

இத்­த­னைக்­கும் கார­ணம் தனது தந்தை கமல் நாரா­ய­ணன் என அறிந்து அவரை கொலை செய்ய முற்­ப­டு­கி­றான். அதே சம­யம், கண்­ம­ணி­யும், கமல் நாரா­ய­ணன் இரு­வ­ரும் கூட்டு சேர்ந்­து­தான் தேன்­மொ­ழி­யை­யும், தனது தம்பி விஷ்­ணு­வை­யும் கொலை செய்ய முயன்­றார்­கள் என அறிந்து சூரஜ் மிக­வும் மன­வே­த­னை­ய­டை­கி­றான்.

இந்­நி­லை­யில் தேன்­மொ­ழிக்­கும்,  ரன்­வீ­ருக்­கும் எந்த சம்­பந்­த­மு­மில்லை என்­றும், தனது மனைவி தேன்­மொ­ழிக்கு நடந்த இன்­னல்­க­ளுக்கு கமல் நாரா­ய­ண­னும், கண்­ம­ணி­யும்­தான் என சூரஜ் அறி­வானா?