ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 22–1–2020

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020

வாலி நினைவுபடுத்திய பழைய சம்பவம்!

(சென்ற வார தொடர்ச்சி...)

பிற்­கா­லத்­தில் இதை நினைத்து வருத்­தப்­பட்­டி­ருக்­கி­றேன். அவர் முன் நின்­றால் என்ன தவறு? உட்­கார்ந்­தால் மட்­டும் சிவா­ஜி­யோடு சரி­ச­மம் ஆகி­வி­டு­வேனா என்று என்­னையே நான் பல­முறை கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றேன்.

பெரி­ய­வர்­க­ளுக்கு மரி­யாதை அளிக்­கும் பண்பு இளைய தலை­மு­றை­யி­டம் எப்­படி மழுங்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தற்கு இதுவே உதா­ர­ணம். அதா­வது அன்­றைய நானே உதா­ர­ணம்! ‘தீபம்’ படம் 100 நாட்­கள் ஓடி சாந்தி தியேட்­ட­ரில் விழா எடுக்­கப்­பட்­டது.இதைத் தொடர்ந்து டைரக்­டர் ஏ.சி. திரு­லோ­க­சந்­த­ரி­டம் இருந்து வந்­ததே ‘பத்­ர­காளி’ படத்­துக்­கான அழைப்பு. இங்­கே­தான் முதன்­மு­த­லாக கவி­ஞர் வாலி என் இசை­ய­மைப்­பில் பாடல் எழு­தி­னார். அப்­போது எனக்­கும், அவ­ருக்­கு­மான ஒரு பழைய சம்­ப­வத்தை வாலி நினை­வு­ப­டுத்­தி­னார்.

பிர­சாத் புரொ­டக்­க்ஷன்ஸ் தயா­ரிப்­பில் ‘பிதாயி’ என்ற இந்­திப்­ப­டம் வந்­தது. இந்­தப் படத்தை தமி­ழில் எடுக்க முடிவு செய்­தார் தயா­ரிப்­பா­ளர். படத்­துக்கு ‘பிரி­யா­விடை’ என்று பெயர் வைக்­கப்­பட்­டது.

இசை – ஜி.கே. வெங்­க­டேஷ். இந்தி படத்­தின் ஒரு பாடல் காட்­சி­யில் ‘ஒரு சீட்­டுக்­கட்டு ராஜா ராணி’ போல நாய­கன் - நாய­கியை மாற்றி, முழுக்க முழுக்க ஸ்லோமோ­ஷ­னில் பாடல் முழு­வ­தை­யும் உதட்­ட­சைவு மாறாத வகை­யில் பட­மாக்கி இருந்­தார். இந்த இந்­திப் பாடல் ஹிட்­டா­ன­தால் அதே மெட்டை தமி­ழி­லும் போட எல்.வி. பிர­சாத் விரும்­பி­னார். ஜி.கே. வெங்­க­டே­ஷும் ‘ஓகே’ சொன்­னார்.

பாட்­டெ­ழுத கவி­ஞர் கண்­ண­தா­சன் வந்து விட்­டுப் போனார். அந்­தப் பாடல் டைரக்­ட­ருக்­கும், எல்.வி. பிர­சாத்­துக்­கும் பிடிக்­க­வில்லை. அத­னால் வாலியை பாட்­டெ­ழுத அழைத்­தார்­கள். அவ­ரும் வந்­த­வு­டன் டியூனை கேட்­டு­விட்டு, ‘ராஜா­வைப் பாருங்க’ என்று பல்­ல­வியை தொடங்கி விட்­டார். இது எல்­லா­ருக்­கும் பிடிக்க ஓகே சொல்லி விட்­டார்­கள்.

நான் மட்­டும் வாலி அண்­ண­னி­டம், ‘‘அண்ணா! வரி­கள் டியூ­னுக்கு சற்று மாறி வந்­தி­ருக்­கி­றது” என்­றேன்.

‘‘எப்­படி?” என்று திருப்­பிக் கேட்­டார் வாலி.

‘‘டியூன் சத்­தம் ‘தானா தானானா, தானா­னத் தானானா’ என்று வரு­கி­றது. இதில் முதல் சந்­தம் ‘தானா’ என்­று­தான் வரு­கி­றது. நீங்­கள் ராஜாவை என்று தொடங்­கி­ய­தால் சந்­தம் ‘தானானா’ என்று மாறி வரு­கி­றது” என்­றேன்.

‘‘இன்­னொரு தடவை சொல்லு” என்­றார் வாலி.

‘‘தானா தானானா தானா­னத் தானானா” என்று பாடி­னேன்.

உடனே அவர், ‘‘ராஜா பாருங்க! ராஜா­வைப் பாருங்க என்று வைச்­சுக்கோ” என்­றார். ‘‘இது சரி­யாக இருக்­கி­றது” என்­றேன்.

அன்­றி­ரவு எம்.எஸ். விஸ்­வ­நா­த­னின் பிறந்த நாள் பார்ட்­டி­யில் ஜி.கே. வெங்­க­டேஷை பார்த்த வாலி, ‘‘யோவ்! சாதா­ரண கிட்­டார்­கா­ர­னை­வுட்டு சந்­தத்­துக்கு சரியா பாட்­டெ­ழு­த­லைன்னு சொல்­ல­வெச்சு என்னை அவ­மா­னப்­ப­டுத்­திட்­டே­யில்ல?” என்று சத்­தம் போட்­டி­ருக்­கி­றார்.

ஜி.கே.வி.யும் விட்­டுக் கொடுக்­கா­மல், ‘‘அதெல்­லாம் இல்ல வாலி! சரியா வர்­ற­துக்­குத்­தானே எல்­லா­ரும் சொல்­வாங்க. அதி­லென்ன தப்பு?” என்று சொல்லி சமா­தா­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

இந்த சம்­ப­வத்தை இப்­போது என்­னி­டம் நினைவு கூர்ந்த வாலி, ‘‘இப்போ, ‘பத்­ர­காளி’ படத்­துக்­கான பாட்டு என்ன சிச்­சு­வே­ஷன்?” என்று கேட்­டார்.

சிச்­சு­வே­ஷனை வச­ன­கர்த்தா ஆரூர்­தாஸ் சொல்ல, நான் டியூனை பாடிக்­காட்­டி­னேன். தம்பி கங்கை அம­ரன் எழுதி, பக்­திப்­பா­ட­லாக்க முயற்சி செய்த டியூன் அது. அதை வாசித்­தேன். கேட்டு விட்டு ‘கண்­ணன் ஒரு கைக்­கு­ழந்தை’ என்று ஆரம்­பித்து முழுப்­பா­ட­லை­யும் முடித்­தார்.

அடுத்த பாடல்­தான் ‘‘வாங்­கோன்னா, அட வாங்­கோன்னா.”

இந்த படத்­தில் நாய­கி­யாக நடித்த ராணி சந்­திரா விமான விபத்­தில் மர­ண­ம­டைந்து விட்­டார். திரு­லோ­க­சந்­தர் ஒரு வழி­யாக சமா­ளித்து படத்தை முடித்­தார். படம் பெரிய வெற்றி. இந்­தப் படத்­தின் பின்­னணி இசை­ய­மைப்­பின்­போ­து­தான் இரண்­டா­வது தட­வை­யாக ‘மூகாம்­பிகை’ போக முடிந்­தது. இது என் மூன்­றா­வது வெற்­றிப்­ப­டம்.