புதிய படத்தில் பார்வதி!

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020

‘பூ’ பார்வதி தற்போது ‘ராச்சியம்மா’ என்கிற குறும்படத்தில் நடித்து வருகிறார். 4 குறும்படங்களை ஒன்றிணைத்த ‘ஆந்தாலஜி’ படத்தில் இதுவும் ஒரு படம். இது சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் உரூப்பின் ‘ராச்சியம்மா’ என்கிற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘ராச்சியம்மா’ கதாபாத்திர தோற்றத்தில் பார்வதியின் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.