ஓடி ஓடி உழைக்கணும்!

பதிவு செய்த நாள் : 21 ஜனவரி 2020

சுவாமி சிவானந்தரின் அருளுரை: –

* உற்றார் உறவினர் கூட கைவிடக் கூடும். ஆனால் தானம், தர்மம் எப்போதும் கூட வரும்.

* நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு, உச்சி வேளை நிழல் போல சுருங்கி விடும்.

* எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம்.

* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.

* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.

* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.

* ஆடம்பரமோ, அலட்சிய எண்ணமோ மனிதனுக்கு கூடாது. எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.

* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் சுயநலத்துடன் செய்யக்கூடாது. பிறருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்.

* லட்சம் தேள்கள் ஒரே நேரத்தில் கொட்டியது போல மரண வேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.

* உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க பிரார்த்தனை அவசியமானது.