ஏற்­று­மதி உல­கம் : இந்­தே­னே­ஷி­யா­விற்கு ஏற்­று­மதி கூடும் வாய்ப்­பு­கள்

பதிவு செய்த நாள் : 20 ஜனவரி 2020

மலே­சிய பாமா­யில் இறக்­கு­ம­தி­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் இந்­தோ­னே­ஷி­யா­வி­லி­ருந்து பாமா­யில் இறக்­கு­மதி கூடும்  என்ற நிலை தற்­போது இருக்­கி­றது.

இத­னால் இந்­தி­யா­வில் இருந்து அதிக அள­வில் ஜீனி, அரிசி, மாமி­சம் போன்­ற­வை­களை இறக்­கு­மதி செய்ய அந்த நாட்டை இந்­தியா வலி­யு­றுத்த போவ­தாக தெரி­வித்­துள்­ளது.

இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து 2018-19 ஆம் வரு­டத்­தில் நாம் 15.8 பில்­லி­யன் டாலர் அள­விற்கு இறக்­கு­ம­தி­கள்  செய்­தி­ருக்­கி­றோம். இந்த  இறக்­கு­ம­தி­யில் பெரும்­பா­லும் பாமா­யில் தான் இருக்­கி­றது.  அதே­ச­ம­யம் ஏற்­று­மதி வரு­டத்­திற்கு 5.2 பில்­லி­யன் டாலர் அள­விற்கு செய்­தி­ருக்­கி­றோம்

மாட்­டி­றைச்சி

இந்­தி­யா­வில் மாட்­டி­றைச்சி ஏற்­று­மதி கடந்த 10 ஆண்­டு­க­ளாக வரு­டத்­திற்கு 15 சத­வீ­தம் வளர்ந்து வரு­கி­றது. இந்­தி­யா­வின் வேளான் பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில் முதல் மூன்று இடங்­க­ளில் மாட்­டி­றைச்­சி­யும் உள்­ளது. உலக மார்க்­கெட்­டில் 50 சத­வீ­தத்தை இந்­தியா தன் கைவ­சம் வைத்­துள்­ளது. இந்­தி­யா­வி­லி­ருந்து வியட்­நாம், மலே­சியா, எகிப்து, சவுதி அரே­பியா, பிலிப்­பைன்ஸ் ஆகிய நாடு­க­ளுக்கு அதிக அளவு மாட்­டி­றைச்சி ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வில் மாட்­டி­றைச்சி ஏற்­று­ம­தி­யில் மும்­பை­யைச் சேர்ந்த அல்­லா­னா­சன்ஸ், அல்­க­பீர் ஆகிய கம்­பெ­னி­கள் முண்­ண­னி­யில் உள்­ளன.

குழந்­தை­கள் விளை­யாட்டு சாமான்­கள்

குழந்­தை­கள் விளை­யாட்டு சாமான் கள் நமக்கு ஒரு பெரி­தான பிசி­ன­சாக சில வரு­டங்­க­ளுக்கு முன்பு தெரிந்­த­தில்லை. ஆனால், தற்­போது தாய், தந்­தை­யர்­கள் குழந்­தை­கள் எது கேட்­டா­லும் இல்லை என்று சொல்­லா­மல் வாங்­கிக் கொடுப்­ப­தால் அந்த மார்க்­கெட் வளர்ந்து வரு­கி­றது. சமீ­பத்­தில் மும்­பை­யில் நடந்த ஒரு கண்­காட்­சி­யில் நுற்­றுக்­கும் அதி­க­மான தயா­ரிப்­பா­ளர்­கள் கலந்து கொண்­டார்­கள். வியா­பா­ர­மும் படு சுறு­சு­றுப்­பாக இருந்­தது. ஏற்­று­ம­திக்கு மிக­வும் வாய்ப்­புள்ள ஒரு துறை­யா­கும்.

தமிழ்­நாட்­டில் காலங்­கா­ல­மாக விளை­யா­டப்­பட்டு வரும்  மரத்­தில் செய்­யப்­பட்ட குழந்­தை­க­ளுக்­கான விளை­யாட்­டுப் பொருட்­க­ளில் பெரிய அள­வில் ஏற்­று­ம­தியை ஊக்­கப்­ப­டுத்த வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன  என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.