சர்தார் படேல் தேசிய விருது: விண்ணப்பம் வரவேற்பு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:49

புதுடில்லி,

சர்தார் படேல் பெயரில் புதிதாக தேசிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஆண்டு முதல்(2020) சர்தார் வல்லபாய் படேல் விருது வழங்கப்படவிருக்கிறது. தேசிய ஒற்றுமை,ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த குறிப்பிடத்தக்க பங்களித்தவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மிக உயரிய சிவில் விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பிப்போர், https://nationalunityawards.mha.gov.inஎன்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஏப். 30ம் தேதி