தேசிய மக்கள் தொகை பதிவேடு: தகவல் திரட்டும் முறைக்கு பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:46

புதுடெல்லி

தேசிய மக்கள் தொகை பதிவேடு க்கான விவரங்களைத் திரட்ட மத்திய அரசு தெரிவித்துள்ள நடைமுறைகளுக்கு பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அதிகாரிகள் தெரிவித்த எதிர்ப்புகளை மத்திய அரசு நிராகரித்தது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டு க்கான தகவல்களை பொதுமக்கள் தர எழுப்பப்படும் வினாக்கள் மிகவும் பொதுவானவை. அவற்றுக்கு கட்டாயம் மக்கள் பதில் தர வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த வினாக்களை விருப்ப வினாவாக கருதலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் டிபி குப்தா ஆகியோர் மக்கள் தொகை பதிவேட்டுக்கான விபரங்களை சேகரிப்போர் சில வினாக்களை எழுப்புவது தேவையில்லாத வேலை என்று தெரிவித்தார்.

சில வினாக்களுக்கு பதிலளிக்க முடியாது

அவற்றுக்கான விவரங்கள் நமது பொதுமக்களிடம் பொதுவாக இருப்பதில்லை என்றும் டிபி குப்தா கூறினார்..

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் இந்த மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் மத்திய உள்துறை செயலாளர் பல்லா, மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர்கள் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டைத் துவக்கி வைத்த அமைச்சர் நித்தியானந்த ராய்  2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை பதிவேட்டுப் பணி தொடர்பான ஒரு அடையாளச் சின்னத்தை-மஸ்கட். பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

2010 ஆம் ஆண்டில் மக்கள்தொகைப் பதிவு பணி துவங்கி 2015 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்காக ரூ. 3941. 3 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.