அமேசான்’ முதலீட்டுக்கு அமைச்சர் பியுஷ் கோயல் எதிர்ப்பு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 20:11

‘புதுடில்லி,

 ‘அமேசான்’ நிறுவனம், 100 கோடி டாலர் முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவுக்கு எந்த சகாயமும் செய்யவில்லை என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அண்மையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசோஸ், இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை, ‘டிஜிட்டல்’

மயமாக்குவதற்காக, 100 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்­சர் பியுஷ் கோயல்

கூறியதாவது:

அமேசான், 100 கோடி டாலரை முதலீடு செய்யலாம். ஆனால், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி டாலர் நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருக்கும்போது, யார் அதற்கு  நிதியுதவி செய்வது?

இந்தியா, ‘மல்டி பிராண்டு சில்லரை விற்பனையில், 49 சதவீததுக்கு மேலாக அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதில்லை. மின்னணு வர்த்தக நிறுவனங்கள், இந்திய சட்டங்களை பின்பற்ற வேண்டும். ஓட்டைகளை

கண்டுபிடித்து, பின்பக்க வாசல் வழியாக, மல்டி பிராண்டு சில்லரை பிரிவில் நுழையக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.