சென்னையில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020 13:19

சென்னை,

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து, டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.78.34 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.72.67 ஆகவும் விற்பனையாகி வருகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.34 ஆகவும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.72.67 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது.