கவிதைச்சோலை 19–1–2020

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020

பாரம்பரியம் காப்போமே...!

கதிரவனை காலை வணங்கிடுவோம்

கண் ஒளி பெற்று விளங்கிடுவோம்

குனிந்து கோலம் போட்டிடுவோம்

இடையை வலுப்பெற செய்திடுவோம்

நடைபயிற்சி செய்திடுவோம்

உடல் நலனை காத்திடுவோம்

ஓடியாடி விளையாடிடுவோம்

உடலை மெருகேற்ற செய்திடுவோம்

பனையின் பண்டம் உண்டிடுவோம்

பலம் பெற்று விளங்கிடுவோம்

அன்பை நாளும் வளர்ந்திடுவோம்

அகந்தையை அறவே அழித்திடுவோம்

பாசத்தை நாமும் பெருக்கிடுவோம்

கோபத்தை முற்றும் குறைத்திடுவோம்

புன்முகம் அழகாய் காட்டிடுவோம்

பூரிப்புடனே வாழ்ந்திடுவோம்.

– பி. செல்லப்பன், தேரூர்.