வசமானது கணிதம்!

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020


ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், கீழக்­கரை, ஹமீ­தியா பெண்­கள் உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1986ல், 9ம் வகுப்பு படித்த போது, நடந்த இனிய சம்­ப­வம் இது...

அனைத்­துப் பாடங்­க­ளி­லும், நன்­றாக படிக்­கும் நான், கணக்­கில் மட்­டும் பல­வீ­ன­மாக இருந்­தேன். இதை கவ­னித்த கணித ஆசி­ரியை ஜூனத்­பே­கம், 'மன­தில், 'கணக்கு வராது' என்றே முடிவு செய்­தி­ருக்­கி­றாய். முத­லில் அந்த எண்­ணத்தை உடைத்து, வெளியே வா... முடி­யும் என்ற தன்­னம்­பிக்­கையை வளர்த்­துக் கொள்...' என்று, அறி­வுரை வழங்­கி­னார்.

அவ­ரது பேச்சு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யது. கணி­தத்­தில், நெளிவு சுழி­வு­களை முறை­யாக கற்­றுக் கொண்­டேன். சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்து ஊக்­கு­வித்­தார். அதி­லி­ருந்து, கணி­த­மும் என் வச­மா­னது. நல்ல மதிப்­பெண்­க­ளு­டன் தேர்ச்சி பெற்­றேன்.

இப்­போது என் வயது, 47; என் மனத்­த­டையை நீக்கி, முன்­னேற்­றத்தை துாண்­டிய அந்த ஆசி­ரி­யையை, மன­தில் கொண்­டுள்­ளேன்.

–- எ.ஜெய்­னப் பாத்­திமா, ராம­நா­த­பு­ரம்.