தண்டனை வளர்த்த மரம்!

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020

விரு­து­ந­கர் மாவட்­டம், சிவ­காசி, சாட்­சி­யா­பு­ரம், பெண்­கள் உயர்­நிலை பள்­ளி­யில், 1974ல், 9ம் வகுப்பு படித்த போது, விடு­தி­யில் தங்­கி­யி­ருந்­தேன். பள்ளி ஆண்டு விழா­வுக்­காக, மைதா­னத்தை சுத்­தப்­ப­டுத்­தச் சொன்­னார் உடற்­கல்வி ஆசி­ரியை புஷ்­ப­வல்லி.

சுத்­தம் செய்த போது, சில மரக்­கன்­று­களை அறி­யா­மல் பிடுங்கி விட்­டேன். இதைக்­கண்ட ஆசி­ரியை, 'ஒரு மரத்­தை­யா­வது உன்­னால் உரு­வாக்க முடி­யுமா...' என கடு­மை­யாக திட்­டி­னார்.

மறு நாள், அதே இடத்­தில், வேப்­பம் கன்றை நட்டு கண்­ணும் கருத்­து­மாக பரா­ம­ரித்து வந்­தேன். பள்ளி படிப்பை முடித்த போது, நிழல் தரும் அளவு வளர்ந்­தி­ருந்­தது.

பிரிவு உப­சார நிகழ்­வின் போது, அந்த மரம் வளர்ப்­புக்­காக பாராட்டி, பரிசு கொடுத்­தார் தலைமை ஆசி­ரியை கெப்­சி­பாய். உடற்­ப­யிற்சி ஆசி­ரியை, 'திட்டு வாங்­கி­தால் மரம் வளர்த்­துள்­ளாய்...' என வாழ்த்­தி­னார்.

சில நாட்­க­ளுக்கு முன், அந்த பள்ளி வளா­கத்­துக்கு சென்­றேன். அந்த மரம் மிகப்­பெ­ரி­தாக வளர்ந்­தி­ருந்­தது. அத­ன­டி­யில், மாண­வி­யர் மகிழ்ச்­சி­யாக விளை­யாடி கொண்­டி­ருந்­த­னர். என் கண்­ணில் ஆனந்த கண்­ணீர் பெரு­கி­யது.

அந்த மரத்தை வளர்க்க முடிந்­ததை எண்ணி பெரு­மி­தம் அடைந்­தேன். திட்­டிய ஆசி­ரியை நினை­வாக, என் வீட்­டின் முன், ஒரு மரத்தை வளர்த்து வரு­கி­றேன்.

–- பா.ஜெய­லட்­சுமி, விரு­து­ந­கர்.