பலாப்பழ இனிப்பு இட்லி!

பதிவு செய்த நாள் : 17 ஜனவரி 2020


தேவை­யான பொருட்­கள்:

பலாச்­சுளை - 15

பச்­ச­ரிசி - 200 கிராம்

வெல்­லம் - 100 கிராம்

தேங்­காய் துரு­வல் - 1 மூடி

ஏலப்­பொடி, தண்­ணீர் - தேவை­யான அளவு.

செய்­முறை: பச்­ச­ரி­சியை, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தேங்­காய் துரு­வல், வெல்­லம் போட்டு கொர­கொ­ரப்­பாக அரைக்­க­வும். அத்­து­டன், பொடி­யாக நறுக்­கிய பலாச்­சு­ளை­யை­யும் சேர்த்து, இட்லி மாவு பத­மாக்­க­வும்.

அந்த மாவுக் கல­வை­யில், ஏலப்­பொடி சேர்த்து, நெய் தட­விய இட்லி தட்­டில் உற்­ற­வும். 10 நிமி­டம் வேக வைத்து எடுக்­க­வும். சுவை­யான, 'பலாப்­பழ இனிப்பு இட்லி' தயார். ஆவி­யில் வேக வைப்­ப­தால், எல்லா வய­தி­ன­ரும் உண்­ண­லாம். மிக­வும் சுவை­யாக இருக்­கும். உடல் நலத்தை காக்­கும்!

–- ப்ரேமி கிரிஜா ராம­நா­தன், கோவை.