இந்திய பங்குச்சந்தைகள் இன்று சாதனை உயர்வுகளை எட்டின

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 19:40

மும்பை

மும்பை பங்குச்சந்தையில் அதிகாரப்பூர்வமான குறியீட்டெண் சென்செக்ஸ் இதுவரை அது எட்டாத உயரத்தை இன்று தொட்டு நிலைபெற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் இதுவரை தொடாத உயரத்தை தொட்டு இன்று நிலைபெற்றது.

சென்செக்ஸ் இன்று நிலைபெற்ற புள்ளிகள் 41952.63

இன்றைய உயரவு 92.94.புள்ளிகள்

நிப்டிஇன்றைய  இறுதிநிலைப் புள்ளிகள்  12 374.25. உயரவு 32.75 புள்ளிகள்

விலைவாசி உயர்வு மற்றும் அதனால் ஏற்படும் பணவீக்க உயர்வு பற்றி கவலைப்படாமல் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டம் மற்றும் அரசின் சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக கம்பெனிகள் பெருத்த லாபம் ஈட்டும் என்ற நம்பிக்கையுடன் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

அதனால் தொடர்ந்து பங்குச்சந்தைகள் முன்னேறி வருகின்றன என்று ஜியோசித் நிறுவன பங்கு சந்தை நிபுணர் கூறினார்

இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மிகவும் அதிகமாக பயனடைந்த நிறுவனங்கள் ஹீரோ மோட்டோ கார்ப் ,ஐடிசி, என்டிபிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஆக்சிஸ் பேங்க், எச்டிஎப்சி

இன்று சென்செக்ஸ் நிறுவனங்களில் பெரும் இழப்பை சந்தித்தது இண்டஸ் இந்த் வங்கியாகும் .இந்த நிறுவனத்தின் பங்கு விலையில் 3.85 சதவீதம் சரிவு ஏற்பட்டது.