பட்ஜெட் பற்றி பரிசீலனை: ஜனவரி 20-ல் தமிழக அமைச்சரவை கூடுகிறது

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2020 18:33

சென்னை,

ஜனவரி 20-ம்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் 2020-ம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டமாக அமையும். சென்னை தலைமைச்செயலகத்தில் மாலை 4.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம்  துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழக பட்ஜெட், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், குடியுரிமை திருத்த சட்டம், பயங்கரவாதிகள் பற்றிய பிரச்சினை ஆகியவை குறித்து விவாதிக்க வாய்ப்பு  உள்ளது.